Showing posts with label #தங்ஸ்வீட்ஸ். Show all posts
Showing posts with label #தங்ஸ்வீட்ஸ். Show all posts

Sunday, July 13, 2014

தங்ஸ்வீட்ஸ் - ஜீலை பௌர்ணமி



அழும் அக்காள் குழந்தைக்கு 

தாலாட்டு பாடிக்கொண்டே,
உஷ்ஷ்ஷ் பேசாதே என சுட்டு விரலாலே 
சத்தமின்றி ஆணையிட்டு,
பாத்திரம் ஒதுக்கி, துணி மடிக்க வைத்து
வீட்டை சுத்தம் செய்ய வைத்தபின்,
குழந்தையை தொட்டிலில் கிடத்தி
சைகையாலேயே 
அது உறங்கும் அழகை இரசிக்கச்சொல்லி,
தேவதைகள் உலகிற்கு அழைத்துச் செல்வாள் தங்கை!

Friday, June 13, 2014

தங்ஸ்வீட்ஸ் - ஜீன் பௌர்ணமி


அம்மா போல சமைக்க கற்கும்போது

சாப்பிட்டுப் பார்ப்பதற்கும்
அப்பா போல அதட்டக் கற்கும்போது
திட்டு வாங்குவதற்கும்
தோழியைப் போல பழகக் கற்கும்போது
இன்பதுன்பம் பகிர்வதற்கும்
துணைக்கு வைத்துக்கொண்டு
அண்ணனை தான் விரும்புவது போல
எல்லாமுமாய் வரித்து இரசிப்பாள் தங்கை!



#தங்ஸ்வீட்ஸ்