Showing posts with label trisha. Show all posts
Showing posts with label trisha. Show all posts

Friday, March 6, 2026

திரிஷாவுக்கும், ஏ.ஐ சினிமாவுக்கும் என்ன தொடர்பு?


திரிஷா இப்போது போல எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டதில்லை. ஆனால் இருபது வருடங்களுக்கும் மேலாக வெளிச்சத்திலேயே இருக்கிறார். எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் அவருடைய இந்தத் தன்மை அவரைப்பற்றி நம்மை பேச வைக்கிறது. அவருடைய அழகு, அவருடைய நடிப்பு, அவருடைய ஆர்வம் என அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள ஆளாளுக்கு ஒரு காரணம் இருக்கிறது.


அதே போல தினமும் ஒரு ஏ.ஐ அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்வதும், பயன்படுத்துவதும் சாத்தியமே இல்லை. நமது சினிமாவுக்கு எந்த காரணத்துக்காக ஏ.ஐ பயன்படப்போகிறது என்பதை தீர்மானித்துவிட்டால், அதற்கான ஏ.ஐ கருவியை நமது சினிமாவே தேர்ந்தெடுத்துவிடும்.

நான் எழுதியுள்ள ஏ.ஐ சினிமா புத்தகத்தைப் புரட்டினால், இது பற்றியும், ஏ.ஐ பற்றிய புத்தகத்தில் திரிஷாவைப் பற்றி ஏன் குறிப்பிட்டேன் என்பது பற்றியும், உங்களுக்குப் புரியும்.

இந்தப் புத்தகம் ஏ.ஐ பயன்படுத்திப் படமெடுக்க ஆர்வமாக உள்ளோருக்கு உதவும்.

ஏ.ஐ சினிமா
ஆசிரியர் - ISR செல்வகுமார்
விலை ரூ.180
டிஸ்கவரி புக் பேலஸ்
ஃபோன் - 87545 06060, 87545 07070

#Trisha #Ai #AiCinema #Aitools #politics #books



Monday, May 6, 2024

ராணி த்ரிஷா!

ராணி த்ரிஷா!

நாம் ரஜினி, கமல் பற்றி சிலாகிக்கிறோம். விஜய்-அஜீத் பற்றி ஆச்சரியம் உண்டு. குறைந்தபட்சம் 20 வருடங்களாக நாயகனாக வலம் வருகிறார்கள். வயதானாலும் இரசிகர்கள் அவர்களின் வயதை பொருட்படுத்துவதில்லை. அவர்களைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் வயதாகிவிட்டால் நடிகைகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களை கதாநாயகிகளாகக் கொண்டாடுவதில்லை. இதில் விதிவிலக்காக த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக உச்ச நடிகர்களுக்கு இணையான ஈர்ப்புடன் வலம் வருகிறார். இதற்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் தன்னை திரும்பத் திரும்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவரை ஏற்கிறார்கள். இதனை சாதிப்பது அவ்வளவு எளிதல்ல.
அவர் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட (1999) அழகிப்போட்டியின் வீடியோ இயக்குநர் நான்தான். அப்போது அந்தப் போட்டியில் பங்கு பெற்ற மற்ற எல்லாப் பெண்களையும் விட திரிஷா தனித்துவமாகத் தெரிந்தார். அவர் வெற்றி பெறுவார் என நினைத்தேன். அதே போல் வெற்றி பெற்று மிஸ். சென்னை பட்டம் பெற்றார்.
ஆனால் அப்போது முதல் இப்போது வரை, திரிஷாவின் அழகை விட, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அவருடைய மெனக்கெடல்தான் என்னை வசீகரிக்கிறது.
சதுரங்கப்போட்டியில் ராணிக்குதான் ஆற்றல் அதிகம். அந்த ராணியுடன் அவர் அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை, தன் பிறந்த நாளை முன்னிட்டு அவரே எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இன்னும் நான் ராணிதான் என்று அந்த புகைப்படம் வழியாக அவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
வாழ்த்துகள் திரிஷா! நீங்கள் ராணிதான்!