Wednesday, February 15, 2012
Friday, January 13, 2012
2011 - தேசிய விருதுகளுக்கு கடும் போட்டி இருக்கும்
இந்த வருடம் தேசிய விருது மிகவும் போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று கணிக்கிறேன். காரணம் டிஜிட்டல் சினிமா. டிஜிட்டல் வந்தவுடன் தேங்கிக்கிடந்த திறமைகள் அபார வேகத்துடன் வெளிவருகின்றன. குறும்படங்கள் தினம்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனால் வாய்ப்பு தேடி காத்திருந்த நடிகர்கள், டெக்னிசியன்கள், இயக்குனர்கள் உட்பட அனைவரும் புத்துணர்வு பெற்று இருக்கிறார்கள். அவர்கள் திறமை என்ன என்று அவர்களே பரிசோதிக்க டிஜிட்டல் சினிமா உதவுகிறது. நானும் யாதுமானவள் என்ற குறும்படம் ஒன்றை தேசிய விருதுக்கு அனுப்பி இருக்கிறேன். இந்த முயற்சியின்போது நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் பல இளைஞர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி இருக்கிறார்கள் என்பதுதான். அடுத்த தலை முறை படைப்பாளிகளுடன் நானும் போட்டியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் இளைஞர்களுக்கு. அடுத்தவருடம் இன்னும் போட்டி அதிகமாக இருக்கும். மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.
தேசிய விருதுக்கு போட்டியிட இன்னும் கூட நேரம் இருக்கிறது.
இந்த தளத்துக்கு சென்றால் விபரம் கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)

