Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, September 3, 2015

எப்போதிருந்து நீ நான் ஆனாய்..


உன்னை பார்ப்பதற்கு முன்பே
உன்னை எனக்குத் தெரியும் 
என்றுதான் நினைக்கிறேன்.

உன்னை நான் சந்திப்பதற்கு முன்
அதிகாலையில் நான் ஜன்னலைத் திறந்ததும்
என்னுள் நுழைகிற காற்றாக நீ இருந்திருக்கிறாய்.

நான் தினசரி நீரூற்றும் செடியாக இருந்திருக்கிறாய்.
பூக்களை பறித்துக் கொண்டு புன்னகைக்கும்
பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருந்திருக்கிறாய்!

எங்கிருந்தோ ஒலித்து என்னை  முணுமுணுக்க வைக்கும் 
பாடலாக இருந்திருக்கிறாய!
ஒரே ஒரு துளியாக என் மேல் விழுந்துவிட்டு
வராத மழையாக இருந்திருக்கிறாய்.

நள்ளிரவிலும் என்னை அடையாளம் கண்டு 
வாலாட்டும் ஜீவனாக இருந்திருக்கிறாய்!
நான் புரிந்து கொள்ள ஆசைப்படும்
கவிதையாக இருந்திருக்கிறாய்!

ஒரு நாள் நீ நீயாகவே வந்தாய்
ஆனால் 
எனக்கே தெரியாமல் ஏதோ ஒரு தருணத்தில்
நீ நானாகவும் ஆகிவிட்டாய்!


Friday, March 2, 2012

நோ சாட்டிங் முத்தம்




மடிக் கணிணியுடன் இருந்தவளை
மடியில் கிடத்தி,
இதழோடு இதழ் இறுக்கி,
சாட்டிங் செய்வது கால விரயம்
எனப் புரிய வைத்தேன்!

ஆல் த பெஸ்ட் முத்தம்!




அவள் அப்பா வருவதற்கு முன்,
எந்தக் கேள்விக்கும் பயப்படாதே
என தைரியம் தந்து,
பதறாமல் அசராமல்
இதழோடு இதழ் பதித்து,
தேர்வுக்கு அனுப்பி வைத்தேன்.

Wednesday, February 29, 2012

பதில் முத்தம்




மல்லிகை சூடும்போது 
விழிகளால் எப்படி இருக்கு என்பாள்!
மயக்குதடி என 
மெல்லிடையில் கிறுக்கியபடி 
அவள் இதழ்களை 
என் இதழ்களால் கவர்வேன்.

Wednesday, February 15, 2012

காதல் என்பது - 5




காதலர் தினம் ஸ்பெஷல் - 5
---------------------------------------
காதல் என்பது 
ஸ்பரிசங்களால்
வருஷங்கள் கடப்பது!

காதல் என்பது - 4



காதலர் தினம் ஸ்பெஷல் - 4
---------------------------------------

காதல் என்பது 

இரவுகளுக்கு
வானவில்லை அறிமுகப்படுத்துவது!

காதல் என்பது - 3




காதலர் தினம் ஸ்பெஷல் - 3

---------------------------------------

காதல் என்பது 
மின்னல் நொடிகளுக்காக
ஜன்னல் வெளிகளில்
கண்கள் உறைவது!

காதல் என்பது - 2






காதலர் தினம் ஸ்பெஷல் - 2

---------------------------------------
காதல் என்பது ...
பூக்களின் தேசத்தில்,
அவள் கூந்தலில் இருந்து உதிரும்
ஒற்றைப் பூவை நேசிப்பது!

காதல் என்பது - 1




காதலர் தினம் ஸ்பெஷல் - 1

---------------------------------------
காதல் என்பது 
வானில் பறப்பது!
இறக்கைகள் இல்லாமல் . . .