Showing posts with label நொறுக்கு. Show all posts

Tuesday, April 13, 2010
லெப்டுல இருந்து ரைட்.. ரைட்டுல இருந்து லெப்ட் எப்படி வேணும்னா படி!
RACECAR
LEVEL
DEED
ROTOR
CIVIC
POP
MADAM
EYE
NUN
RADAR
TOOT
இந்த ஆங்கில வார்த்தைகளில் ஒரு சுவாரசியமான விசித்திரம் உள்ளது.
இந்த வார்த்தைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். அப்படி வாசிக்க முடிந்தால் அந்த வார்த்தைகளை பாலிண்ட்ரோம்-Palindrome என்பார்கள்.
தமிழில் இதை முயற்சி செய்து பார்க்கலாமமே என்று தோன்றியது. சில மணி நேர மூளை கசக்கல்களுக்குப் பிறகு சிக்கிய வார்த்தைகளை கீழே தந்திருக்கின்றேன்.
விகடகவி
பாப்பா
தேருவருதே
துவளுவது
தாளாதா
தந்த
கலைக
கலக
மேகமே
வாடவா
மாடமா
மாதமா
மானமா
மாயமா
இதில் விகடகவி மிகப் பிரபலமான தமிழ் பாலிண்ட்ரோம். சில கேள்வி வடிவிலேயே இருப்பதைக் கவனியுங்கள். தொடர்ச்சியாக எனக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வந்தன. சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன். நீங்களும் முயற்சி செய்து சில வார்த்தைகளை எழுதுங்கள்.
சந்திப் பிழையை மன்னிக்கலாம் என்றால் தாவபோவதா, கைபை என்பவையும் பாலிண்ட்ரோம்கள்தான்.
ஆங்கில பெயர்கள், அர்த்தமற்ற ஒலிகளை மறுக்க மாட்டீர்கள் என்றால் லில்லி, டால்டா, பைப்பை, கூக்கூ என்பவையும் பாலிண்ட்ரோம்தான்.
தமிழில் பாலிண்ட்ரோம் எழுதும் போது எழும் மிகப்பெரிய சிக்கல் மெய் எழுத்துக்கள்தான். அதை மீறி பாலிண்ட்ரோம் வார்த்தைகைளை தேடுவது ஜாலியான சவால்.
ஆச்சரியகரமாக சில பாலிண்ட்ரோம் வாக்கியங்களும் உருவாகின.
இரு வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
மாலா போலாமா?
யானை பூனையா?
காரு முருகா
மூன்று வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
கைதி மாயமா? திகை!
வாடவா பூ வாடவா?
துருவ மேகமே வருது
நீதிபதி பதி நீ
தாயே நீயே தா
யானை தந்தம் தந்தனையா?
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளுடன் பாலிண்ட்ரோம்கள்
மே மாதமா? கலக மாதமாமே?
தாவ போவதா, பாப்பா தாவ போவதா? ---- (சந்திப் பிழை?)
தேரு வருதே வேகமாகவே தேரு வருதே
அர்த்தங்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாவிட்டால் . . .
சிவா வாழையா? யாழை வா வாசி
மில் டெலிபோன் போலி. டெல் மி!
சாரா, காமராசரா? மகாராசா!
இவை எனக்கு உதித்த பாலிண்ட்ரோம்கள். சவாலான இந்த வார்த்தை விளையாட்டில் நீங்கள் எத்தனை பாலிண்ட்ரோம் வார்த்தைகளை கொண்டு வருகிறீர்கள் என்று பார்க்கலாம்.
Tuesday, September 30, 2008
ரஜனி, சாருநிவேதிதா, காதல் இல்லாவிட்டால் . . .
ரஜினி
கருணாநிதி
விஜயகாந்த்
சன் டிவி
கலைஞர் டிவி
குமுதம்
விகடன்
சரக்கு
சாருநிவேதிதா
காதல்
இந்தப் பட்டியலில் உள்ள இவர்களும் - இவைகளும் இல்லாவிட்டால், (என்னையும் சேர்த்து) 90 சதவிகிதம்பேர் மறுமொழி எழுதக்கூட வழியின்றி விழிப்பார்கள். பதிவு போடுவதை மறப்பார்கள்.

Sunday, August 31, 2008
ஜே.கே. ரித்திஷ் - விஜயகாந்த்! இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?
சொந்தப் பணமா? எங்கிருந்தோ வந்தப் பணமா? என்று தெரியாது. ஆனால் தமிழகத்தில் இன்று இரண்டு பேர் இன்று 'தில்'லாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் ஜே.கே.ரித்திஷ்.
விஜயகாந்த், விருதாச்சலத்தில் ஆரம்பித்தார். 2011ல் அடுத்த முதல்வர் ஆகிவிட்டுத்தான் நிற்பேன் என்கிறார். உங்கள் கொள்கை என்ன? தமிழகத்தை முன்னேற்ற உங்கள் யோசனை என்ன என்றால், இப்போது வெளியே சொல்ல முடியாது, சொன்னால் மற்ற கட்சிகள் காப்பியடித்துவிடுவார்கள் என்று தைரியமாக காமெடி பண்ணுகிறார்.
ஜே.கே ரித்திஷ் கானல் நீரில் சொதப்பலாக ஆரம்பித்து, நாயகனில் வந்து ஹிட் கொடுத்து நிற்கிறார். பட்டி தொட்டியெங்கும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக போஸ்டர்கள், பேனர்கள், படத்தில் பில்ட் அப் துவக்கப் பாடல் என பிரமாண்ட காமெடி லுக் கொடுக்கிறார்.
விஜயகாந்த் - ஜே.கே. ரித்திஷ் இருவருக்கும் பணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் பணத்தை செலவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
விஜயகாந்த் சினிமாவில் வேண்டுமானால் கேப்டனாக இருக்கலாம். அரசியலில் தொண்டனாகக் கூட முடியாது என்றார்கள். ஆனால் விருதாச்சலத்தில் ஹிட் கொடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜே.கே. ரித்திஷை ஒரு பணக்காரக் கிறுக்கன். முன்பு 'சின்ன எம்.ஜி.ஆர்' என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் ஆட்டம் போட்டுவிட்டு காணாமல் போனது போல, இவரும் அம்பேல் ஆகிவிடுவார் என்றார்கள். ஆனால் 'நாயகன்' ஹிட் கொடுத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.
விஜயகாந்த் நான் தனியாகவே ஜெயிப்பேன். 2011ல் நான்தான் முதல்வர் என்கிறார்.
ஜே.கே.ரித்திஷிம் ஓப்பனிங் சாங்கெல்லாம் வைத்து நானும் தனிதான் என்று சொல்லிவிட்டார்.
சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் என்று முதலில் கிண்டல் செய்யப்பட்டார்கள். ஆனால் ஆளுக்கொரு ஹிட் கொடுத்து ஒருவேளை சீரியஸ் பார்ட்டிகளோ என்று அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள்.
இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?
பார்க்கலாம்!

Monday, August 25, 2008
சன் டிவிக்கு வயதாகி விட்டதா?
முதுமை எப்போது வரும்?
வயதானால் வரும்
தோல்விகள் வரும்போதும் வரும்
சன் டிவி இரண்டாவது வகை.
தற்போது சேனல் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் வீழ்ந்துவிடவில்லை. ஆனாலும் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது.
முதல் காரணம் - தி.மு.க லேபிளை இழந்தது.
அதில் கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள். ஆனால் இரசிக்கவில்லை.
2வது காரணம் - மதியம் முதல் இரவு வரை அழுகாச்சி சீரியல்கள்
டி.ஆர்.பியில் இடம் பிடிக்க தாய்மார்கள் உதவினாலும், வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இடைவெளியில்தான் ஜோடி நம்பர் -1 ஜெயிக்க ஆரம்பித்தது
3வது காரணம் - மாற்றிக் கொள்ள முடியாத பழைய ஸ்டைல்
புரோகிராமிங் ஃபார்மட் முதல் டிரையலர் வரை இன்னும் அதே பழைய ஸ்டைல். நேற்று வந்த சேனல்கள் கூட அசத்தல் கட்டிங்குகளால் கலக்கும்போது, இங்கே இன்னமும் தூரன் கந்தசாமியின் குரலில் ஜவ்வுமிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் செட், கலர், டிரையலர் என மாற முயற்சித்து அரைவேக்காடாக கைவிட்டுவிட்டார்கள்
4வது காரணம் - செய்திகள்
முன்பு தி்.மு.க நிழலில் இருந்தபோது, ஜெயலலிதா முதல்வர் ஆனதையே லாங் ஷாட்டில் காட்டி மக்களிடம் இருந்து மறைக்கப் பார்த்தார்கள். தற்போது ஜெயலலிதா கொடநாட்டில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தபோதும், அவருக்காக சவுண்டு கொடுத்தவர்கள் சன் டி.விதான். இந்த திடீர் பல்டி அவர்கள் மேலிருந்த நம்பகத்தன்மையை 70 சதவிகிதம் குறைத்துவிட்டது. 30 சதவிகிதம் தேறியதற்கு காரணம் மந்திரியாக இருந்தபோது தயாநிதி மாறனின் அசத்தல் பெர்பாமன்ஸ்.
5வது காரணம் - எக்ஸ்பர்ட்ஸ் இல்லை
ஜெயா டிவியில் சுஹாசினி வந்து விட்டார். விஜய் டிவியில் மதன் பார்வை. இவர்கள் சினிமா என்றால் என்ன என்று தெரிந்தவர்கள். சினிமா எடுக்கும் படைப்பாளிகள் மத்தியில் மரியாதைக்குரியவர்கள். ஆனால் சன் டிவியில் இன்னமும் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் தொகுப்பாளர்கள்தான் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தி மற்றும் அலசல் நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான்.
6வது காரணம் - பெரிய படங்களை வாங்க முடியாத நிலைமை
தற்போதைய பெரிய படங்கள் அனைத்தையும் தங்கள் அரசியல் பலத்தால் கலைஞர் டி.வி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பலனை கலைஞர் டிவி இன்னமும் அனுபவிக்கவில்லை. ஆனால் பாதகத்தை சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சன் டிவியை யாராலும் ஜெயிக்கவே முடியாது என்ற நிலைமை மாறி அது தோற்றுக் கொண்டு வருவதை நேயர்களும், சன் டிவியும் உணருகிற ஒரு சூழ்நிலை இதனால் உருவாகிவிட்டது.
கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.

Wednesday, August 20, 2008
சமோசா சாப்பிடும்போது கண்ணில் பட்ட செய்திகள்

சிறுவயதில் மசால் வடை, பக்கோடா, காரா சேவு, பாம்பே லக்கடி இதெல்லாம் சாயந்திர பலகாரங்கள்.
இப்போது சாண்ட்விச், பஃப், பேல் பூரி மற்றும் சமோசா.
அப்போதெல்லாம் காய்ந்த இலையில் கட்டித் தருவார்கள். தற்போது பேப்பர் பிளேட்ஸ் அல்லது தினசரி தாள்கள்.
எனக்கு பலகாரங்களை விட பலகாரங்களை வைத்துத் தரும் தினசரி தாள்களில் உள்ள சமாச்சாரங்கள் ரொம்ப பிடிக்கும். முந்தைய நாள் மற்றும் நேற்றைய மழை நேரத்தில் சூடான பஃப் சாப்பிட்ட பின் கடைசியாக பேப்பரில் ஒட்டியிருந்த ஒன்றிரண்டு துகள்களை சுரண்டிச் சாப்பிட்போது கண்ணில் பட்ட சுவாரசியங்கள்.
- ஒலிம்பிக்கில் சானியா மிர்சாவின் டென்னிஸ் கவர்ச்சி படம், படத்தின் மேல் சமோசா எண்ணெய்
- ரிலீசுக்கு பின் மல்லிப்பூ வைத்து புடவை கட்டிய நயன்தாராவுடன் விஷால் - சத்யம் பட விளம்பரம். ரிலீசுக்கு முன் நயன்தாராவின் உடலில் போனால் போகிறதென்று கொஞசுண்டு துணி இருந்ததாக ஞாபகம்.
- கச்சத் தீவை மீ ... கலைஞருக்கு துணி... டி.இராஜே . . . ஓரம் கிழிந்திருந்ததால் முழு தலைப்பும் இல்லை.
- முஷாரஃப் பதவி விலகுவாராவின் மேல் ஒரு எறும்பு ஒட்டியிருந்தது. எத்தனை எறும்பு வயிற்றுக்குள் போச்சோ?
Subscribe to:
Posts (Atom)