Showing posts with label இந்த வார 'நச்'. Show all posts
Showing posts with label இந்த வார 'நச்'. Show all posts

Thursday, December 4, 2008

விஜயகாந்தின் ரியல் பேட்டியும் - ரீல் பேட்டியும்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்க ஊழல் செய்தவங்களுக்கு கட்சியில இடம் கொடுத்திருக்கீங்களே?

எங்க கட்சியில பொன்னுசாமி வந்தபிறகுதான் இப்படிச் சொல்றாங்க. நான் கேட்கறேன்.. எந்தக் கட்சியிலதான் ஊழல்வாதிங்க இல்ல.. முந்தின கலைஞர் ஆட்சியில குற்றம் சாட்டப்பட்ட சேடப்பட்டி முத்தையாவும், இந்திரகுமாரியும் இப்போ தி.மு.கவுலதானே இருக்காங்க. ஆக, பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி.. ஆனா நான் செய்தா தப்பு. என்ன நியாயங்க இது? பொன்னுசாமி செய்த தப்புக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து அதை அவரும் முழுசா அனுபவிச்சுட்டாரு. தண்டனை கொடுக்கறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குத்தானே. பிறகு ஏன் கட்சியில சேர்க்கக்கூடாதுன்னு கேட்கறேன்.. எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு.
2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி


இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்களே லஞ்சம் வாங்கியிருக்கீங்களே?
எங்க கட்சி சார்புல நான் லஞ்சம் வாங்கின பிறகுதான் இப்படி சொல்றாங்க. நான் கேட்கறேன். எந்தக் கட்சியிலதான் லஞ்சம் வாங்கல. இதுக்கு முன்ன ஆட்சி செய்த கருணாநிதி லஞ்சம் வாங்கலையா? ஜெயலலிதா லஞ்சம் வாங்கலையா? பெரியவங்க செஞ்சா பெருமாள் மாதிரி... நான் செஞ்சா தப்பா, என்ன நியாயங்க இது? கருணாநிதி, ஜெயலலிதா செஞச் தப்புக்கு தண்டனையா அவங்கள ஆட்சிய விட்டு அனுப்பியாச்சு. அவங்களும் அதை ஏத்துக்கிட்டாங்க. தண்டனை கொடுக்கிறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குதான? பிறகு ஏன் லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு கேட்கறேன். லஞ்சம் வாங்கினாதான திருந்த முடியும். எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. நான் என்ன லஞ்சம் தான வாங்கினேன். இது பெரிய தப்பா?

- அடுத்ததும் 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி
நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் சேருகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வருகிறார்கள்? பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க எடுக்கற திடகாத்திரமான முடிவு பிடிச்சிருக்கு.. அதனாலதான் வந்தோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ நடக்குற அரசியல் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி அரசியலைத் தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க ஒழுக்கமாகவும், கட்சியோட கொள்கைக்கு கட்டுப்பட்டும் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.

- இதுவும் இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் லஞ்சம் வாங்குகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள்? மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க வாங்குற லஞ்சம் பிடிச்சிருக்கு.. அதனாலதான் வாங்கறோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ மத்த கட்சிகள் வாங்குற லஞ்சம் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி லஞ்சத்தை தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல மூலமா எந்த லஞ்சமும் வாங்க முடியாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு லஞ்சம் கிடைக்க ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் கட்டுப்பட்டு் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.


- இதுகூட 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களுக்கு அதிக செலவு வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ நான் டெம்போ வேன்ல பிரச்சாரம் பண்ணினேன். மீட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

- இதுகூட இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி - நன்றி விஜயகாந்த்

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை (குவார்டர் அடிச்சுட்டு வந்தாலும்) ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களையும் லஞ்சம் வாங்கி அதிக வசூல் செய்ய வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ லஞ்சப் பணம் வெளியில தெரிஞ்சிடுமேன்னு நான் டெம்போ வேன்ல பதுக்கி வச்சுட்டு பிரச்சாரம் பண்ணினேன். கட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

2006ல் கல்கிக்கு அளித்த ஒரு பேட்டியின் இன்னொரு பகுதி

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

2011ல் நமக்கு அளிக்கப் போகும் பேட்டியின் இன்னொரு பகுதி
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன ஊழல் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட ஊழல்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

Friday, October 31, 2008

Times of India-யாவா? Crimes of India-யாவா?

சென்னையில் டிஸ்கோதெ கிளப்புகள் எங்கே இருக்கின்றன. அவற்றில் குடித்துவிட்டு இரவு முழுக்க கூத்தடிப்பவர்கள் யார் யார்? அவர்களைப்போல நாமும் எப்படி கூத்தடிப்பது, என்பது பலகாலம் சென்னை வாழ், தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு செய்தித்தாள்களும் வந்தவுடன், அந்த இராத்திரி இரகசியங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் கிடைத்துவிட்டது. தினமும் அர்த்த இராத்திரி வரை ஆடும் அர்த்தமற்ற கும்மாளங்களுக்கு தினமும் ஒரு பக்க கவரேஜ். வாழ்க டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சில மாதங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் ரோடில் உள்ள ரெசாட்டுகளில் போலீஸ் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அரை குறை ஆடைகளுடன் இளைஞர்களும், இளைஞிகளும் கும்பல் கும்பலாக மாட்டினார்கள். ஒரு ரெய்டில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆடையே இல்லாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். இந்தக் கண்றாவிக்கெல்லாம் செக் வைத்தவுடன், டெக்கான் கிரானிகள் சிலிர்த்துக் கொண்டது. போலீஸ் ஏன் அத்து மீறி ரெசாட்டுகளுக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பியது. சில டெக்கிகள் (முழுக்கப் படித்துவிட்டு அரை குறை உடைகளுடன் கூத்தடிப்பவர்களை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இப்படித்தான் செல்லமாக அழைக்கின்றன), போலீசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பேட்டி கொடுத்ததும், அதை டெக்கான் வெளியிட்டதும் கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

அதே போல இரவு 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு ஆடக் கூடாது, அப்படி ஆடினால் அந்த கிளப்புகளுக்கு தடை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் உத்தரவு போட்டது. அவ்வளவுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பொறுக்கவில்லை. தினமும் அரை மயக்கத்தில் வீடு திரும்பும் உயர் மட்ட(மான) குடி மகன்கள் பலரை பேட்டி கண்டு, 'தனி மனித உரிமையில் தலையிட நீ யார்?', 'எங்கள் சுதந்திரத்தை ஏன் பறிக்கிறாய்?' என்று செய்தி வெளியிட்டது. எது உரிமை? எது சுதந்திரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா பதில் சொல்லட்டும்.

அக்டோபர் 25ம் தேதி, இலங்கைத் தமிழர்களின் படுகொலையை கண்டித்து, சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் ஒரே ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

Most of the students, drenched in the rain and shivering, stood for hours for a cause they had no clue about.

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏன் நிற்கிறோம் என்றே தெரியவில்லையாம்.

எதுவும் தெரியாமல் நின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே நின்றிருந்தாலும் அதில் என்ன தவறு. டிஸ்கோதெ கிளப்புகளிலும், ஈ.சி.ஆர் ரெசார்ட் மறைவுகளிலும் அரை குறை ஆடைகளுடன் திரிவதைக் காட்டிலும் இது மேலானதே. அந்த மாணவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் போனதற்கென்ன காரணம்?

சிவாஜி','தசாவதாரம்' போன்ற படங்கள் ரிலீசின் போது மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கியவர்களை ஒரு சாதனையாளர்களைப் போல வருணித்தது யார்? டிஸ்கோ இரவுகளில் சிரிப்பவர்களை கலர் போட்டோக்களாக வெளியிட்டு கெளரவப் படுத்துவது யார்? இலங்கைப் பிரச்சனை பற்றி மூடி மறைப்பது யார்? டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள்தான். இந்த பொறுப்பற்ற ஊடகங்களால்தான் இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி எந்தச் சுரணையுமின்றி வளர்கிறார்கள்.

எனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா எதுவும் தெரியாமல் நின்ற அந்த மாணவர்களுக்காக ஒரே ஒரு நாள் டிஸ்கோதெ பக்கங்களை நிறுத்தட்டும். நிறுத்திவிட்டு இலங்கைப் பிரச்சனை என்றால் என்ன என்று, ஒரு ஸ்பெஷல் எடிஷன் போடட்டும். தமிழக இளைஞர்களுக்கு எது சுதந்திரம்? எது உரிமை என்று புரிய இது உங்களால் ஆன சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அப்படிச் செய்தால்தான் நீங்கள் Times of India, இல்லையென்றால் நீங்கள் Crimes of India.

Friday, August 15, 2008

இந்த வார 'நச்'

'முதல்வர் பதவியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டினால், பொது வாழ்க்கைப் பணி செய்வேன், இல்லையேல், எஸ்டேட்டில் ஓய்வெடுப்பேன்' என்றால் எப்படி?
-ஜெயலலிதாவின் எஸ்டேட் வாசம் பற்றி ஆனந்தவிகடன் தலையங்கம் (20.8.08)

ஆகஸ்ட் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் ஏராளமான கர்நாடக மாநில ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்.
-கர்நாடக மாநில சிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் மா.நடராஜ் அறிக்கை.

ஸ்டாலின் சிறுவயதில் ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் தெரிகிறது அவன் ஊக்கை விழுங்கவில்லை, ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான்.
-தெற்கு உஸ்மான் தெரு மேம்பாலத் திறப்புவிழாவில் கருணாநிதி

என்னை சீனியர் மோஸ்ட் நடிகை என்கிறார்கள். தீபிகாவை விட நான் தான் செக்ஸி என்று ரன்பீர் கபூரே சொன்ன பின்பும் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்.
ஒரு பத்திரிகை பேட்டியில் பிபாஷா பாசு

ப.சிதம்பரம் தான் இந்தியாவின் செக்ஸியான ஆண்.
ஒரு பத்திரிகை பேட்டியில் எழுத்தாளர் ஷேபா டே

தனுஷ் கலந்து கொண்டால் 10க்கு 11 மார்க் தருவேன்.
ஜோடி நம்பர்.1 நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா தனுஷ்