Showing posts with label sony. Show all posts
Showing posts with label sony. Show all posts

Tuesday, March 3, 2015

நாமும் பங்கேற்கிற Interactive வீடியோக்கள்

வாட்ஸ்அப்பிலோ, டெலிகிராமிலோ யாருடனோ கொஞ்சிக் கொண்டிருக்கும்போது நாம் வெறும் திரையைப் பார்ப்பதில்லை. கொஞ்சல் முகத்தின் சொந்தக்காரரை மனதுக்குள்ளே திரையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் கொஞ்சித்திரிந்த பீச், மால்கள், மறைவுப்பிரதேசங்கள், இசிஆர் பைக் ரைடுகள் என எல்லாம் வந்து போகும். இந்த அனுபவங்களை அப்படியே 3Dயாக்கினால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். இதற்கான நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. இப்போது எக்ஸ்ட்ரா லார்ஜாக ஒரு கற்பனை. அந்த 3D பிம்பங்களுக்குள் நான் அவ்வப்போது உள்ளே சென்று வரமுடியுமா? நிஜத்தில் சாத்தியமில்லை. ஆனால் உள்ளே நுழைந்து வெளிவரும் நிஜ நம்மையும் 3D பொம்மை(Virtual Reality)யையும் கலக்கிற நுட்பம் ஏற்கனவே கலக்கிக் கொண்டிருக்கிறது. Augmented Reality என்று பெயர். சுருக்கமாக AR.

இந்த நுட்பத்தை கொஞ்சம் மாற்றி 3Dக்கு பதில் உண்மையான பிம்பங்கள். மண்ணில், விண்ணில், கடலில் என பிடித்த இடங்களையெல்லாம் ஒரு சிலிக்கன் சில்லில் பதித்துவிட்டு அதை ஒரு ஹெட் செட்டுக்குள் பதித்து நம் தலையில் மாட்டிவிட்டால் என்ன ஆகும்? ஒரு மாயாபஜார் நம் கண்முன்னே உருவாகும். அந்த பிம்பங்களுக்குள் நாமும் நடப்போம், ஓடுவோம், தொடுவோம், படுவோம், சுடுவோ இன்னும் என்னென்னவோ செய்வோம்.

இந்த மாய 3D ஹெட்செட்டுகளை  ஃபேஸ்புக்கும் (Oculus rift), சோனியும்(Morpheous) ஏற்கனவே தயாரித்துவிட்டன. தற்போது HTC போட்டியாக தனது ஹெட்செட்டுடன்(Vive) களத்தில் குதித்துள்ளது.

எதிர்காலத்தில் AR + VR சேர்ந்த நாமும் பங்கேற்கிற Interactive சினிமாக்கள் வந்துவிடும். தயாராக இருங்க.



Saturday, August 16, 2014

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் 9 மொழிப்பாடல் - என்னுடைய மொழி எங்கே?

ஏ.ஆர்.ரகுமானின் வந்தேமாதரம் பாடல் வெற்றிக்குப்பின், தேசிய ஒருமைப்பாட்டை மையமாக வைத்து பல பாடல் முயற்சிகள். #MicromaxUniteAnthem அந்த வரிசையில் லேட்டஸ்ட். மைக்ரோமேக்ஸ் - சோனி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தப்பாடல் தயாராகியிருக்கிறது. தயாராகியிருக்கிறது என்பதை விட சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.

முதல் காரணம் பழைய டியூன். இதற்காக புதிதாக எதையும் கம்போஸ் செய்யவில்லை. ரங்தேபசந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள Roobaroo என்ற பாடலை சற்றே வடிவம் மாற்றியிருக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. இந்த சிங்கிள் ஆல்பத்தில் 10 பாடகர்கள் 9 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்கள். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாடுதான் தீம் என்றால் ஏன் 9 மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும். எங்கள் மொழியை ஏன் நிராகரித்தீர்கள் என்று பாடலில் இடம் பெறாத மொழி பேசுபவர்கள் ஆன்லைனில் கோபமாக தங்கள் கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

எனக்கும் அதுதான் தோன்றுகிறது. மைக்ரோமேக்ஸ் - சோனி போன்ற பெரிய நிறுவனங்கள் கைகோர்க்கும்போது நிச்சயமாக ஒரு புதுப்பாடலை உருவாக்கியிருக்க முடியும். அதைச் செய்யாததே ஏனோதானோ என்ற எண்ணத்தையே குறிக்கிறது. அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை இடம்பெற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது சிந்தனையில் ஆழமில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் இந்தியாவில் பரவலாக பேசப்படும் அத்தனை மொழிகளையும் இதில் இடம்பெற வைப்பது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தப் பாடலில் இடம்பெறாத மொழியைப் பேசுபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் நாட்டின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவரையும் உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதோ, முக்கியத்துவம் தருவதோ தவறு. ஆனால் இந்தப்பாடல் இந்தக் குளறுபடியான எண்ணங்கள் அனைத்தையும் தருகிறது. பாடலுக்கான வீடியோவிலும் எந்தக் க்ரியேட்டிவிட்டியும் இல்லை. பாடல் வரிகளில் இடம்பெறாத மொழிகளை எழுத்து மற்றும் காட்சி வடிவிலாவது வீடியோவில் கொண்டு வர முயற்சித்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் தங்கள் விளம்பரத்துக்காக இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு சாதாரண வீடியோதான் இது. இதற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்பே இல்லை.

Saturday, March 1, 2014

வீட்டிலிருந்தபடியே ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் விளம்பர டெக்னிக்

ஒருவழியாக கோச்சடையான் டீம் நவீன விளம்பர டெக்னிக்கை கண்டுபிடித்துவிட்டது. இனி படம் வெளியாவதில் உள்ள தயக்கம் குறையும் என்று நினைக்கிறேன்.

INGAGE என்ற நவீன 4D டெக்னிக்கை கார்போன் ஃபோன் நிறுவனத்துடன் கோச்சடையான் அறிமுகப்படுத்துகிறது. INGAGE என்பது 3D அனிமேஷன்களையும், (ரியலாக)நம்மையும் இணைக்கும் நவீன 4D. 


அனிமேஷனில் தோன்றும் 3D கோச்சடையான் ரஜினியும், நாமும் ஒன்றாக நின்று இன்ஸ்டன்ட் 4D போட்டோ எடுத்துக் கொள்ளும் விளம்பர டெக்னிக். ரஜினியைப் போலவே சூப்பர்.


ரஜினியை 3Dயில் தோன்றச் செய்வது எப்படி?
  • INGAGE என்ற Appஐ கூகுள் ஸ்டோரில் இருந்து Download - Install and Run
  • பிறகு இடப்பக்கத்தில் உள்ள விளம்பரத்தை உங்கள் ஃபோனால் ஸ்கேன் பண்ணுங்கள்
  • ரஜனி 3Dயில் உங்கள் ஃபோனில் தோன்றுவார். அவர் கூட நீங்களும் நின்று கொள்ளலாம்.
  • அதனை அப்படியே ஒரு ஃபோட்டோவாக நீங்கள் க்ளிக்கிக்கொள்ளலாம்.
  • இந்தப்படத்தை பிரிண்ட் செய்தும் ஸ்கேன் செய்யலாம். 
கீழே உள்ளவை என் டெஸ்க்டாப்பிலும், பேப்பரிலும் ஸ்கேன் செய்து நான் க்ளிக்கிய சில ஃபோட்டோக்கள். 



இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இந்தியா முழுவதும் பேனர் வைக்கப்

போகிறார்களாம். அதன் முன் நின்று நீங்கள் ஸ்கேன் செய்தால் உங்கள் உயரத்திற்கு ரஜினி தோன்றுவார், நடனமாடுவார், பேசுவார். நீங்களும் உடன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்.