Thursday, October 2, 2008

வெற்றிகரமான பதிவர் சந்திப்புக்கு 10 யோசனைகள்

ஒரே ஒரு பிளாக் எழுதுவதன் மூலம் ஒரு பதிவர் சந்திப்பை அறிவித்துவிட முடியும். ஆனால் வெற்றிகரமான சந்திப்பிற்கும், மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும். இதோ என்னுடைய 10 யோசனைகள். வெளிநாடுகளில் இது போன்ற பதிவர் சந்திப்புகள் "வெற்றிகரமான பிசினஸ் நெட்வொர்க் சந்திப்புகளாகவும்" நிகழ்த்தப்படுகின்றன. கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. இதன் மூலம் வெறும் வெட்டிச் சந்திப்பாக இல்லாமல், ஏதோ ஓரளவிற்கு உபயோகமான சந்திப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ryze.com
  1. மீண்டும் . . . மீண்டும் . . .சந்திப்பை முன் நின்று நடத்துபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
  2. அவருடன் உரையாட வசதியாக ஒரு தொலைபேசி எண் அவசியம் தேவை
  3. நடத்துபவரும், அவருடைய குழுவும் அறிவிக்கப்படவேண்டும்
  4. சந்திப்பின் காரணம் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது.
    உதாரணமாக ஒரு டாப்பிக் - "பதிவுகளின் பலன்களும், பாதகங்களும்"
  5. இது குறித்து யார், யார் பேசலாம் என்பதை முன் கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  6. சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் தேவை. உதாரணமாக . .
    வரவேற்புரை
    விருந்தினர் அறிமுகம்
    இன்றைய தலைப்பு ஒரு அறிமுகம்
    முதல் 5 பேச்சாளர்கள்
    டீ பிரேக்
    அடுத்த 5 பேச்சாளர்கள்
    நன்றியுரை மற்றும் முடிவுரை
  7. யார் வரவேற்புரை, யார் தலைப்பை அறிமுகம் செய்வது, யார் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவது, யார் நன்றியுரை மற்றும் முடிவுரை வழங்குவது போன்ற அனைத்தும் முதலிலேயே தீர்மானிக்கப்படவேண்டும்.
  8. சந்திப்பிற்கான செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற தெளிவான சிந்தனை தேவை.
  9. அடுத்த பதிவர்கள் சந்திப்பு எப்போது இருக்கலாம் என்பதற்க்கான உத்தேச தேதிகள் இருக்க வேண்டும்.
  10. பதிவர் சந்திப்பிற்கென 'தனி வலைப்பூ' இருக்க வேண்டும்.

விஜயகாந்த் சார், போலீஸ் யூனிஃபாரம் என்றால் அருவருப்பு, முதல்வர் நாற்காலி என்றால் தகதகப்பா?

விஜயகாந்த் வாய்விட்டு சொன்னது
தமிழக போலீஸ் அராஜகங்களைப் பார்க்கும்போது,
திரைப்படத்தில் கூட யூனிஃபார்ம் அணியும்போது அருவருப்பாக இருக்கிறது.

விஜயகாந்த் மனசுக்குள் ஜபிப்பது
முதல்வர் நாற்காலியிலிருப்பவர் செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது,
2011ல் நான் எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் போலிருக்கிறது.

அதாவது . . .
போலீசெல்லாம் கெட்ட போலீசாம்.
அதனால் போலீஸ் வேஷம் போடக்கூட அருவருப்பாக இருக்கிறதாம்.
அதே போல தற்போதைய முதல்வர் நாற்காலியும் கெட்ட நாற்காலியாம்.
ஆனால் அந்த நாற்காலி 2011ல் வேண்டுமாம்.

போலீஸ் உடை என்றால் அருவருப்பு, முதல்வர் பதவி என்றால் தகதகப்பா? அட்டுழியம் செய்வதாகச் சொல்லி போலீஸ் என்றாலே அருவருக்கும் விஜயகாந்த், அதே போல அட்டூழியம் செய்வதாகச் சொல்லும் முதல்வர் பதவியைக் கண்டும் அருவருப்பாக இருக்கிறது ஏன் சொல்லவில்லை?

வெரி சிம்பிள் லேடீஸ் அண்டு ஜென்டில்மென்.
பதவி என்பது ஒரு வெறி. விஜயகாந்துக்கு அந்த வெறி தலைக்கேறிக்கொண்டிருக்கிறது.

Wednesday, October 1, 2008

ஞானி வைக்க மறுத்த குட்டு

"விஜயகாந்த்துக்கும் இவருக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக இவரும் தேர்தலில் குதித்து, அவருக்கு எதிராக போட்டி போட்டு, நம்மையெல்லாம் வம்புக்கு இழுப்பாராம். அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி வடிவேலுவுக்கு வைத்த குட்டு

"இவருக்கும், வடிவேலுவுக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக கருணாநிதியை சன் டிவி லைவ் பிரஸ் மீட் வைத்து திட்டுவாராம்.  படத்துல கூட  யூனிபாரம் போடவே அருவருப்பா இருக்கு என்று தமிழக போலீஸை அசிங்கப்படுத்துவாராம்.அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி விஜயகாந்துக்கு வைக்க மறுத்த குட்டு

அதனால் அந்தக் குட்டை நான் ஞானிக்கே வைக்கிறேன்.  'டங்'