Showing posts with label stella maris. Show all posts
Showing posts with label stella maris. Show all posts

Wednesday, August 24, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

 

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

தனபால் - விழுப்புரம்
ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 27 வரை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக அனுப்பலாம். அதற்கான ஆன்லைன் இணைப்புகள் ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் (ISR Ventures) நிறுவனத்தின் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் வெளியாகும். ஏற்கனவே தொடர்பில் உள்ளோருக்கு வாட்சப் வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள்.

Monday, August 22, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டியாளர்களுக்கு இந்தியா எக்ஸைட் நிறுவனம் வழங்கும் டெக்னாலஜி சப்போர்ட்.

5 நிமிட குறும்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ளவும், மற்ற இயக்குநர்களோடு உரையாடவும், தங்கள் அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளவும் தனது டெக்னாலஜி அனுபவத்தை வழங்குகிறது இந்தியா எக்ஸைட்.

இதன் மூலம் பங்கேற்பாளர்கள் நண்பர்களாக மாறவும், போட்டி முடிந்த பின்னும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இயங்கவும் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது.

இதனை சாத்தியப்படுத்தியுள்ளதற்காக ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்தியா எக்ஸைட் நிறுவனத்துக்கு நன்றி!

Happy for the association with India Excite IT Solutions PVT LTD.

For ISR 5 Minute Short film contest, India Excite will offer remote support for cloud-based interactions and submissions for the contestants via phone, email and chat.

#IndiaExcite #TNOU #StellaMaris #ISRventures #ISR5minuteShortFilmContest #TechSupport

Sunday, August 21, 2022

தோழமை அமைப்பின் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப்போட்டி

 


ISR 5 நிமிட குறும்படப் போட்டி! கை கொடுத்திருக்கும் ”தோழமை” அமைப்பு!

போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHTS" என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே அமைப்பின் தலைவர் தேவநேயன் தொடர்பு கொண்டார்.

குழந்தைகள் உரிமை என்றால் என்ன? என்பது பற்றி யுனிசெஃப் என்ன கூறியிருக்கிறது என்பதை அழகான தமிழ் விளக்கங்களுடன் அனுப்பி வைத்தார். போட்டி ஆரம்பித்தபின் போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை பற்றி எடுத்துச் சொல்லவும் ஒப்புக் கொண்டுள்ளார்.


எனவே குழந்தைகள் உரிமை பற்றி சந்தேகம் உள்ள போட்டியாளர்கள் அவருடைய ஆலோசனையை கேட்டுக் கொண்டு ஸ்கிரிப்ட் எழுதத் துவங்கலாம். இதற்கான ஒரு ஆன்லைன் சந்திப்பை ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும். தோழமைகள் அமைப்பு இதில் மிக மிக முக்கியப்பங்காற்றும். அவர்களுடைய ஆலோசனையும், ஆதரவும் குழந்தைகள் உரிமை பற்றி மிகத் தரமான தெளிவான படங்களை எடுக்க உதவியாக இருக்கும்.

போட்டியைப் பற்றியும், அது என்று நிறைவுக்கு வரும் என்பதையும், பரிசுகள் என்னென்ன என்பதையும் விரைவில் அறிவிக்கிறோம்.

மீண்டும் ஒரு முறை துணையாக கை கொடுத்திருக்கும் தோழமை அமைப்புக்கு நன்றி!

#Thozhamai #TNOU #MovieWood #StellaMaris #ISRventures #isr5minuteshortfilmcontest

Friday, August 19, 2022

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் வழிகாட்டுதலுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி

 

மற்றும் ஒரு பெருமை! ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியுடன் இணைகிறோம். இது ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு கிடைத்திருக்கும் மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சமூக சேவைக்கென்றே ஒரு பாடப்பிரிவு உள்ளது. (Department of Social Work). சமூக அக்கறையுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஒரு நேர்மறையான சமூகத்தை உருவாக்கும் பாடப் பிரிவு இது.
எனவே குழந்தைகள் உரிமை - CHILD RIGHT பற்றிய குறும்படப் போட்டியின் நல் நோக்கத்தை ஏற்று அதற்கு அங்கீகாரம் தந்து சிறப்பாக நடத்த உற்சாகம் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக் கழகத்துடன் (Department of Journalism and New Media Studies) இணைந்து செயல்பட ஒப்புதல் பெற்றிருக்கிறோம்.
இவ்விரு பெரும் கல்வி நிலையங்கள் தந்திருக்கும் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி ஆகஸ்டு 22, 2022 முதல் துவங்குகிறது. முதலில் கலந்து கொள்ள விரும்புபவர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்வோம். அடுத்தது அவர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை இவ்விரு கல்வி நிலையங்களின் உதவியுடன் தெளிவாக எடுத்துச் சொல்வோம். எனவே இப்போட்டியின் நோக்கம் சிறப்பாக நிறைவேறும் என்று உறுதி கூறுகிறோம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வுக்குழுவில் யார் யார் இருப்பார்கள்? பரிசுகள் என்ன? என்பது உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி (Department of Social Work) பிரிவுக்கும், எங்களுக்கு சிறப்பான அறிமுகம் தந்த நண்பர் தேவநேயனுக்கும் நன்றி!
மேல் விபரங்களுக்கு வாட்சப் எண் - 9962295636