Wednesday, July 29, 2009

ஆனந்த விகடன் - குமுதம் தமிழ் ஈழ அகராதி

ஆனந்த விகடன் - குமுதம் தமிழ் ஈழ அகராதி - ராஜீவ் கொலைக்குப் பின்

பிரபாகரன் கர்ஜித்தபோது
தமிழ் ஈழ ஆதரவு = அது கருணாநிதி பிரச்சனை. நமக்கேன் வம்பு?
பிரபாகரன் = ராஜீவ் கொலையாளி
இந்திய அரசு = ஜெ+சு.சுவாமி மிரட்டலுக்குப் பணிந்து ஈழ விவகாரத்தை கை கழுவ வேண்டிய அரசு.
கருணாநிதி = ஈழ தீவிரவாதிகளுக்கு துணை செல்பவர்
முதல்வர் பதவி = ஆட்சி கவிழ்க்கப்பட்டு கருணாநிதி இழக்க வேண்டியது
இலங்கைத் தமிழர்களின் தலைவர் = பிரபாகரன் இல்லை

பிரபாகரனின் கர்ஜனை அடங்கிய பின்
தமிழ் ஈழ ஆதரவு = கருணாநிதி எதிர்ப்பு. ஹையா தலையங்க மேட்டர்!
பிரபாகரன் = தனி ஈழத் தலைவர்
இந்திய அரசு = ஜெ+கம்யுனிஸ்டுகளுக்குப் பணிந்து இலங்கையின் மேல் படையெடுக்க வேண்டிய அரசு.
கருணாநிதி = ஈழம் அமைவதை தடுப்பவர்
முதல்வர் பதவி = கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டியது
இலங்கைத் தமிழர்களின் தலைவர் = அப்பாடா! பிரபாகரன் இல்லை.

ஆனந்த விகடன், குமுதம் மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிகைகளும் இந்த நிலையைத்தான் எடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் வீழ்வதற்கு முன் குறைந்தபட்சம் அரைப்பக்க கட்டுரை கூட இவர்கள் தனி ஈழத்தை ஆதரித்து எழுதியதில்லை. காரணம் என்ன தெரியுமா? தாங்களும் ராஜீவ் கொலையாளிகளின் கூட்டாளிகளாக சித்தரிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயம்.

தற்போது பிரபாகரன் இல்லை என்றான பின், பயம் தெளிந்து, தயக்கம் விலகி, தனி ஈழம் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பிரபாகரனும் இல்லை. இவர்களை மிரட்டக்கூடிய ஜெயலலிதாவும் தேர்தல் ஜீரம் வந்து தனி ஈழம் என்று பிதற்றிவிட்டார். அதனால் இவர்களுடைய தனி ஈழ கோஷம் தற்போது பயமில்லாமல் வெளிப்படுகிறது.

இதை வாசிக்கிற சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும். ஆனால், இந்த பத்திரிகைகளின் தனி ஈழ ஆதரவு மிகவும் காலம் கடந்து வெளிப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

இது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?