தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,
அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.
ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!
இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.
இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!
வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.