Saturday, August 3, 2024

தினம் ஒரு ஏ.ஐ - 6 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதவும் பகிரவும்

ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு என்று சிறப்பு குணங்கள் உண்டு. தலைப்பு சுருக்கம் அறிமுகம் விரிவாக்கம் மேற்கோள் முடிவு தீர்வு என்று பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கும்.

அவற்றில் அட்டவணைகள், படங்கள், ஆவணக் குறிப்புகள், குறிப்பிட்ட சில எழுத்து உருக்கள், அடிக்கோடு, நிறங்கள், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான சிறப்பு குறிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேவைப்படும்.
இவற்றை எழுதும்போதே அதில் தானும் பங்கு கொண்டு உதவக்கூடிய ஆலோசகர் மற்றும் வழிகாட்டிகளுக்கான சிறப்பு வசதிகள் தேவைப்படும்.
இவை அனைத்தும் வழங்கக்கூடிய சிறப்பு ஏ ஐ செயலி ஒன்று உள்ளது அதன் பெயர் பேப்பர் பிரைன். இது முற்றிலும் இலவசம்.
ஆராய்ச்சி கட்டுரை எழுதுவோர் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.
சிலாடஸ் - மற்றும் ஒரு செயலி
https://app.silatus.com/login (30 நாட்கள் இலவசம்)
குறிப்பிட்ட இணைய தளங்களை மட்டும் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடலாம்
உங்களுடைய தரவு(Data)களை மட்டும் பயன்படுத்தவும் வசதிகள் உண்டு.
பொது தரவு + சொந்த தரவுகளை இணைத்தும் ஆராயச்சியில் ஈடுபடலாம்.
- ISR Selvakumar

கான்சரை கண்டுபிடிக்கும் ஏ.ஐ

மார்பகப் புற்று நோய் வரக்கூடும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பே நம்மை எச்சரிக்கும் திறன் ஏ.ஐ நுட்பத்துக்கு இருக்கிறது.

AsymMirai - என்று இந்த ஏ.ஐ அழைக்கப்படுகிறது. சுருக்கமாக Mirai.
இது எப்படி செயல்படுகிறது. எந்த அளவுக்கு துல்லியம் என்பது பற்றியெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தெளிவு கிடைத்தவுடன் மேலும் பகிர்கிறேன்.
பி.கு - Medscape உள்ளிட்ட பல்வேறு மருத்துவ இணைய தளங்களில் உறுதி செய்து கொண்டபின்னரே இந்த தகவலை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
- ISR Selvakumar

தினம் ஒரு ஏ.ஐ - 5 தொழில் துவங்க ஆலோசனை தரும் ஏ.ஐ

நீங்கள் தயாரிக்கும் பொருள் உலகிலேயே சிறப்பானதாக இருக்கலாம்.

ஆனால் அதனை விற்பனை செய்ய அதன் தரம் மட்டுமே போதாது.
சில கடைகளில் கூட்டம் மொய்க்கும். அதே பொருளுடன், அதே விலையுடன் பக்கத்திலிருக்கும் கடையில் கூட்டமிருக்காது.
இதனை புரிந்து கொள்ள சந்தையை புரிந்து கொள்ள வேண்டும். விலையா? தரமா? எது வாடிக்கையாளரை ஈர்க்கிறது என்பதை உணர வேண்டும். ஒரு வியாபாரிக்கு பொருந்தும் சந்தை குணங்கள் வேறொருவருக்கு பொருந்தாது என்பதை அறிய வேண்டும். ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்தும் ஒருவர், டீ குடிக்க ஒரு சாதாரண சந்து முனை கடைக்கு வருவார். அது ஏன் என்பதை ஆராய வேண்டும். வியாபாரம் துவங்கும் முன் இப்படி பல காரணிகளையும், நுணுக்கங்களையும் அறிந்த பின்தான் தொழில் துவங்க வேண்டும்.
குறிப்பாக startup எனப்படும் புதுத்தொழில் தொடங்குபவர்கள் வெற்றி அடைய வேண்டுமென்றால் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தொழிலைத் துவங்கும் முன் பல நூறு கேள்விகளுக்கு நம்மிடம் விடை இருக்க வேண்டும்.
https://stratup.ai/en என்ற இந்த AI தளம், நீங்கள் துவங்கப்போகும் தொழில் பற்றி உங்களை கேள்விகளால் துளைத்தெடுத்துவிடும். உங்கள் பதில்களைக் கொண்டு, உங்களுக்கு உங்கள் தொழில் தோல்வியா வெற்றியா என்று ஆலோசனை தரும். முதலீடும், நல்ல பொருளும் இருந்தால், அவை மட்டுமே தொழில் தொடங்க போதாது என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
பி.கு :
இது போல பல ஏ.ஐ தளங்களும், செயலிகளும் இருக்கின்றன. தினம் ஒரு செயலியை அறிமுகம் செய்வதன் மூலம் நீங்களே அதே போன்ற செயலிகளை தேடி அலசி, அரசி ஆராய்ந்து கொள்வீர்கள் என்று நம்பகிறேன்.
- ISR Selvakumar