கே.பி சார்!
என் தந்தையின் குரு. எனக்கும் (மானசீக) குரு.
என் தந்தையின் குரு. எனக்கும் (மானசீக) குரு.
அதனாலேயே என் தந்தைக்கு நிகராக அவர் மேல் எனக்கு மரியாதை. அவரை ஒரு முறை கூட சந்திக்க முயற்சி செய்ததில்லை. ஏனென்றால் என் தந்தையின் மேலிருந்த அதே மரியாதை கலந்த பயம் எனக்கு கேபி சாரிடமும் இருந்தது.
ஆனால் இந்தக் கணத்தில் என் மனதில் இருப்பது பயம் அல்ல. அவரை சந்திக்கவே இல்லையே என்ற ஏக்கம். அதன் வடிகாலாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட (அ) புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நட்சத்திரங்களை ஒரு பட்டியலிட்டிருக்கிறேன். அதில் என் தந்தை ISR-ன் பெயரும் இருக்கிறது. பட்டியலின் இறுதியில் என் பெயரையும் விரும்பி இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால் நான் முதலிலேயே சொன்னது போல கே.பி சார், என் தந்தைக்கு மட்டுமல்ல எனக்கும் குரு.
எனது எண்ணத்துக்கு உடனே வடிவம் கொடுத்த நண்பர் முரளிக்கும், இசை கோர்த்த நண்பன் நாராயணணுக்கும் அவரே குரு. Vivek Narayan Ram Nathan SVe Shekher Delhi Ganesh
சூப்பர் ஸ்டார் முதல் நம் வீட்டு ஸ்டார்கள் வரை குரு-சிஷ்யன் உறவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கே.பி சாருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.