Saturday, July 27, 2024

தினம் ஒரு ஏ.ஐ - 4

உங்கள் அறிவை பணமாக்க ஒரு ஏ.ஐ

இ-புக், ஆன்லைன் கோர்ஸ், ஆன்லைன் ஒர்க் ஷாப், ஆன்லைன் ஆலோசனை, ஆன்லைன் படம் வரைதல், வீடியோ உருவாக்குதல் என்று எல்லாமே வரிசையாக ஆன்லைனில் வந்துவிட்டது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட பலருக்கும் தெரியாது. அவர்களுக்கு உதவத்தான் இந்த குவாகுவா (Kwa Kwa) ஏ.ஐ.
அதாவது கிட்டத்தட்ட ஓரு வீடு புரோக்கர் போல இந்த ஏ.ஐ செயலி செயல்படுகிறது. புரோக்கர் வீடு தேவைப்படுவோரையும், வீடு விற்பவரையும் சந்திக்க வைக்கிறார். விற்பனை நடந்தால் அதில் ஒரு குறிப்பிட்ட சதம் கமிஷனாகப் பெற்றுக் கொள்கிறார்.
கிட்டத்தட்ட இதே பாணியில் உங்கள் இ-புக், ஆன் லைன் கோர்ஸ், ஆன் லைன் ஒர்க்ஷாப், ஆன்லைன் படம், ஆன்லைன் வீடியோ யாருக்குத் தேவைப்படும் என்று கண்டறிந்து அவர்களையும் உங்களையும் ஒன்றிணைக்கிறது. ஏதாவது விற்பனை நடந்தால் அதிலிருந்து ஒரு 10% கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு உங்களுக்கு வரவு வைக்கிறது.
முயற்சித்துப் பாருங்கள்!

மைக்ரோசாஃப்ட் வழங்கும் இலவச படிப்பு

மைக்ரோசாஃப்ட், கூகுள், என்வீடியா போன்ற நிறுவனங்கள் பல முக்கிய படிப்புகளை இலவசமாகவே சொல்லித்தருகின்றன. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாகக் கற்றுக்கொண்டு, சான்றிதழும் பெறலாம். டேட்டா அனலிட்டிக்ஸ் தற்போது பிரபலமாகிவரும் படிப்பு. மைக்ரோசாஃப்ட் இதனை இலவசமாகக் கற்றுத் தருகிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
MICROSOFT IS OFFERING FREE COURSES ON DATA ANALYTICS.

1. Get started with Microsoft data analytics

https://learn.microsoft.com/en-us/training/paths/data-analytics-microsoft/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmH9leHRuA2FlbQIxMAABHYVNvQG_KzTj48GY6arTxpc2LVWKm7SDwifO4N4evPYiqxnH5IW2jtpxsQ_aem_UP1QSrDoQxxtiVUs0yFjZA

2. Create and use analytics reports with Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/create-use-analytics-reports-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmK9leHRuA2FlbQIxMAABHWnsKq4mjg8cr9PtHif1-kcIMTo-q7s51uef2wYAwPynt4mnt9ant_URiw_aem_-vVPlp2mce7ZazB0c9f-Uw

3. Delivelop dynamic reports with Microsoft Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/develop-dynamic-reports-microsoft-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmOBleHRuA2FlbQIxMAABHY0IcMsVDTzoSN7dJ8EJc6Yzf6sHuMP9eiRVkXaWryk53FwwVCeQrdSEkw_aem_uPwsrVH4YHeLohtmp-rvAw

4.Design and build tabular models

https://learn.microsoft.com/en-us/training/paths/design-build-tabular-models/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmQFleHRuA2FlbQIxMAABHRlJBSqXQe8f7Ay2WDlAZmDeSD_X6A2YSrCxbB2T0IYX4sqPmRi8BOk-JQ_aem_rl456PMCENf4R15VA525vQ

5. Model data with Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/model-data-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmShleHRuA2FlbQIxMAABHca1GMW9cZJRuyRkq4lDGqBVlskYPa_tVzqw0fHsvMzeDOcpxpyUUa5kxA_aem_DCloPo9l8c7QGV-MJs_0sw

6. Manage workspaces and datasets in Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/manage-workspaces-datasets-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmT9leHRuA2FlbQIxMAABHabnTO0sQRGWgkT6z_Be3QUcOrDy2mA1IG-M1uhR1NfrVOr2dG6zzoPagA_aem_9LXzYUESDFb8W5Tzjy9__A

7. Build Power BI visuals and report

https://learn.microsoft.com/en-us/training/paths/build-power-bi-visuals-reports/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmVhleHRuA2FlbQIxMAABHRaSLsvyQadiPRD-DXJRNofT6nwIiNGyI0bcj808SNzW5bG07d8ZpX2j1Q_aem_Nl-s3vSwLB9BlVsMIovbQw

For full Data Analytist Career Path

https://learn.microsoft.com/en-us/plans/xe27izpkg328oy/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmW1leHRuA2FlbQIxMAABHcw6mSt3ITSwN1MF6eC05QpUZcI-WlcovVCOHhQVjPHIv2vVaYC96kdbfQ_aem_rbS4SnVUAoJcAghnDzV1xA


Thursday, July 25, 2024

தினம் ஒரு ஏஐ - 3

ஒரே சொடுக்கில் பயோடேட்டா தயாரிக்கலாம்.

இதுவரை எனக்கு நானே எழுதிக்கொண்ட எந்த பயோடேட்டாவும் எனக்குப்பிடித்ததில்லை. எதிரில் வரப்போகிற பெண்ணுக்கு பிடிக்கணுமே என்பதற்காக ஹேர்ஸ்டைலை மாற்றி மாற்றி சலிப்பது போல, பயோடேட்டாவை திருத்திக் கொண்டே இருப்பேன். என்னைப் போன்ற சலிப்பர்களுக்காகவே பயோடேட்டாவை உருவாக்கித் தரும் ஏஐ செயலிகள் நிறைய வந்துவிட்டன. தேவையான தகவல்களை தந்துவிட்டு, சொடுக்கினால் போதும். விதம்விதமாக பயோடேட்டாக்கள் தயாராகிவிடுகின்றன.
பின்வரும் ஏ.ஐ செயலிகள் அல்லது ஏ.ஐ இணைய தளங்களை முயற்சி செய்துபாருங்கள்.
- ISR Selvakumar

தினம் ஒரு ஏ.ஐ - 2

 50 பக்க PDF ஃபைலை 50 வரிகளாக சுருக்க உதவும் ஏ.ஐ.

மிகப்பெரிய நிறுவனத்தில் ஹெச் ஆர் பதவியில் இருக்கும் நண்பர் அழைத்தார். ரெஸ்யூம்களை வாசித்து ஒரு நபர் வேலைக்கு தகுதியானவர் தானா என்று முடிவு செய்ய செயற்கை நுண்ணறிவில் ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டார்.
ரெஸ்யூம்களை PDF வடிவில் கொடுங்கள் என்று கேட்டேன். பிறகு ஒரு ஏ ஐ செயலியை பயன்படுத்தி அந்த ரெஸ்யூமில் உள்ள நபர் பற்றிய விபரங்களை சுருக்கமாக ஐந்தாறு வரிகளில் கேட்டேன். உடனே தந்துவிட்டது. பிறகு நண்பர் எதிர்பார்க்கும் தகுதிகள், அந்த ரெஸ்யூமில் உள்ளதா என்பதையும் கேட்டேன். அதையும் உடனே தந்து விட்டது.
எனவே மத்திய பட்ஜெட், நாவல், கவிதை தொகுப்பு, ஆராய்ச்சி கட்டுரைகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட எதுவும் PDF வடிவில் இருந்தால் போதும். அவற்றை வாசித்து உடனே சுருக்கலாம், உங்கள் பாணியில் விளக்கமாக எழுதலாம் அல்லது விமர்சிக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை சில வினாடிகளில் செய்து கொடுக்க ஏ ஐ இருக்கிறது.
இனி நாம் வாசிக்காமலேயே அதில் என்ன உள்ளது என்பதை நம்மால் கேட்டுப் பெற முடியும் அதை சுருக்கி வழங்குவோம் விமர்சனமும் செய்ய முடியும்.
சில ஏ.ஐ செயலிகளின் பட்டியல்.
PDFflex - இலவசம்! ஆனால் PDFன் அளவு அதிகபட்சம் 15 MB மட்டுமே.
ChatPDF - ஓரளவு இலவசம்
PDF.ai - Trial version
Coral Ai - மிகப் பிரபலம்
Microsoft Copilot - முற்றிலும் இலவசம்
- ISR Selvakumar

சித்ரா லட்சுமணனுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கா?


சார் வணக்கம்! நல்லா இருக்கீங்களா?

நேற்று இனிய ஆச்சரியமாக சித்ரா லட்சுமணன் அழைத்தார். நான் வணக்கம் சொல்வதற்கு முன், மளமளவென்று அவருடைய பாணியில் நலம் விசாரித்தார்.
அப்பாவின் திரைப் பெயர் ஐ.எஸ்.ஆர், முழுப்பெயர் ஐ.எஸ்.ராமச்சந்திரன்தானே என்றார்.
ஆமாம் சார், என்ன விஷயம் என்றேன்.
அப்பாவின் முழுப்பெயரைக் கேட்டு கேள்வி வந்திருக்கிறது. அதனால் முழுப்பெயரை உறுதி செய்வதற்காக உங்களை அழைத்தேன் என்றார்.
இரண்டு ஆச்சரியங்கள். இன்னமும் யாரோ ஒருவர் எங்கள் தந்தையை நினைவு வைத்திருக்கிறார். அதைவிட ஆச்சரியம், கூகுள், விக்கிபீடியாவைத் தேடி பதில் தராமல், மெனக்கெட்டு குடும்பத்தாரை அழைத்து உறுதி செய்து கொண்ட திரு. சித்ரா லட்சுமணன்.
”எப்படியெல்லாம் கேள்விகள் வருது பாருங்க”, என்றார்.
”சார் அந்தக் கேள்விகள் உங்களிடம் வருவதற்கு காரணமே, நீங்கள் எப்படியும் (உறுதி செய்யப்பட்ட) பதில் தந்து விடுவீர்கள் என்று நாங்கள் எல்லோருமே நம்புகிறோம்”, என்றேன்.
ஆபிஸ் வாங்க, என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
விரைவில் சந்திப்பேன். அவரிடம் கேட்பதற்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பதில்கள் வாங்கி வருகிறேன்.

Tuesday, July 23, 2024

புராணத்திலேயே ஏஐ


தலைப்பை பார்த்து இது ஏதோ செருகல் என நினைத்துவிடாதீர்கள்.

ஏ.ஐ கல்வி பற்றி நீயே கற்பனை செய்து, அக்கற்பனைகளை ஒன்றாகக் கலந்து ஒரு படம் தயாரித்து தா என்றேன்.

மைக்ரோசாஃப்ட் கோ பைலட் எனக்கு இதனை வரைந்து கொடுத்துள்ளது.

தன்னுடைய கற்பனை என்ன என்பதையும் கொடுத்துள்ளது.

a collage image for AI education inspired by Indian mythology, historical figures, and traditional attire, with warm, muted colors and soft textures

ஒரு நிறுவனம் இந்திய புராணங்கள் தொடர்பாக சில ஏ.ஐ படங்களை உருவாக்கித் தரும்படி என்னிடம் கேட்டிருந்தது. எனவே கடந்த இரு வாரங்களாக நான் கோபைலட்டை பயன்படுத்தி அப்படங்களை வரைந்து கொண்டிருக்கிறேன். 

அதன் தொடர்ச்சியாக, ஏ.ஐ கல்வி பற்றி நீயே கற்பனை செய்து, அக்கற்பனைகளை ஒன்றாகக் கலந்து ஒரு படம் தயாரித்து தா என்றதும் அதிலும் புராணங்களின் சாயலைக் கொண்டு வந்துவிட்டது.

பி.கு - ஏனோதானோ என்றிருக்கும் படங்களை பொறுத்தருள்க. ஏ.ஐ பயன்படுத்தும்போது, அவற்றை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கடிவாளத்தை விட்டுவிட்டால் இப்படித்தான் தாறுமாறாக நடக்கும் என்பதற்காக, நான் இப்படங்களை தந்திருக்கிறேன்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

 

தினம் ஒரு ஏ.ஐ - 1

10 நொடிகளில் 10 நிமிட வீடியோவை பார்த்து எழுதிவிடலாம்.

இதற்கு Youtube Video Summarizer என்று பெயர்.


நான் ஆன்லைன் கோர்ஸ் படிக்கும் முறை இதுதான். வீடியோவின் லிங்கை எடுத்து பின்வரும் தளங்களில் கொடுத்தால் போதும், அடுத்த சில வினாடிகளில் அதில் என்ன இருக்கிறது என்று டைப் செய்து கொடுத்துவிடுகின்றன. நான் மைக்ரோசாஃப்ட் கோ-பைலட்டை அதிகம் பயன்படுத்துகிறேன். 100 பக்கங்களுக்கு மேல் உள்ள இணையதளத்தின் முகவரியைக் கொடுத்தாலும், உடனே வாசித்து சுருக்கமாகத் தந்துவிடும்.


https://copilot.microsoft.com/ (இலவசம்)
https://writer.hix.ai/summarizer/video (மாதம் ரூ.399-லிருந்து)
https://www.descript.com/tools/video-summarizer (மாதம் ரூ. 1000லிருந்து)

மேலும் விளக்கம் தேவைப்பட்டால் என்னை அணுகலாம்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்