செயல் வழி கல்வி(Active Learning Method) இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இது போன்ற வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டால் கல்வி மேலும் சுலபமாகவும் ஜாலியாகவும் மாறிவிடும்.
நான் என்னுடைய வகுப்புகளில் முறையைத்தான் பயன்படுத்துகிறேன். Spoken English-க்கு இது போல வீடியோக்கள் இருந்தால் தயவு செய்து பரிந்துரைக்கவும்.
Saturday, August 16, 2008
திரு.கட்டுமானத்துறை அவர்களுக்கு பதில் - நாடு எப்ப திருந்தும்?
திரு.கட்டுமானம் அவர்களுக்கு,
'அப்போது எல்லாமே நல்லா நடந்தது'
எமர்ஜென்சியில் பாதிக்கப்படாத எல்லோருமே சொல்கிற ஒரே விஷயம் இதுதான்.
பாதிக்கப்பட வேண்டும் அல்லது பாதிப்பை புரிந்து கொள்கிற பக்குவம் வேண்டும், அப்போதுதான் வலிகள் புரியும். இன்றைக்கு காந்தி கேலி செய்யப்படக் காரணம் வலி புரியாத தன்மைதான். இன்றைக்கும் எமர்ஜென்சிக்கு சிலர் கொடி பிடிக்கக் காரணம் வலியும் கிலியும் அவர்களுக்கு வந்ததில்லை.
மனிதன் அதிகாரத்திற்கு அடிமை ஆகிவிட்டால் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும், நாம் சுதந்திரமாக சுவாசிப்பதைத் தவிர.
இன்றைக்கு விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.
என் கல்யாண மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று அரசாங்கத்தை எதிர்த்து விஜயகாந்த் கூப்பாடு போட முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.
இது போல இன்னம் எவ்வளவோ சொல்லலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்வேன். ஏனென்றால் இன்று எமர்ஜென்சி இல்லை.

நானே கேள்வி - நானே பதில்
61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த உறுதி மொழி என்ன?
தமிழன், கன்னடன், மலையாளத்தான், தெலுங்கன், சிங்கு, ஹிந்திக்காரன் என்று தனித் தனி அடையாளங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாது.
ஆனாலும் தமிழனை கன்னடன் வெறுப்பதையும், பதிலுக்கு கன்னடனை தமிழன் வெறுப்பதையும் தவிர்க்கலாம். இது நாடு முழுவதும் வெவ்வேறு மொழி பேசும் அனைவருக்கும் பொருந்தும். வல்லரசாக மாறிவரும் இந்தியா, நல்லரசாகவும் குடியரசாகவும் திகழ எல்லலோருமே இணக்கமாக வாழ வேண்டியது அவசியம்.
61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த முடிவு இதுதான். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே மொழியை காரணமாக வைத்து மனிதர்களையும், மண்ணையும் நான் வெறுக்க மாட்டேன்.

Friday, August 15, 2008
வித்தியாசமான லே அவுட் செய்வது எப்படி? உதவி ப்ளீஸ்
நான் பிளாக்ஸ்பாட் வலைப்பூவுக்கு புதுசு.
பலபேருடைய வலைப்பூ விதவிதமா ரொம்ப ஸ்டைலா, அழகான லே அவுட்டோட இருக்கு.
என்னுடைய வலைப்பூவையும் சிங்காரப் பூவாக மாற்ற ஆசையாக இருக்கிறது.
டுடோரியல் மாதிரி ஏதாவது உதவிப் பக்கங்கள் உள்ளதா?
யாராவது எனக்கு உதவுங்களேன்.

காதல் அன்றும் இன்றும் - ஜாலி கவிதை
அன்று
காதல் கண்களில் ஆரம்பித்தது
பரிசுகளில் வளர்ந்தது
கண்ணீரில் முடிந்தது
இன்று
காதல் மொபைலில் ஆரம்பிக்கிறது
'டாப் அப்' பில் வளர்கிறது
நம்பர் பிஸியில் முடிகிறது
காதல் கண்களில் ஆரம்பித்தது
பரிசுகளில் வளர்ந்தது
கண்ணீரில் முடிந்தது
இன்று
காதல் மொபைலில் ஆரம்பிக்கிறது
'டாப் அப்' பில் வளர்கிறது
நம்பர் பிஸியில் முடிகிறது
இந்த வார 'நச்'
'முதல்வர் பதவியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டினால், பொது வாழ்க்கைப் பணி செய்வேன், இல்லையேல், எஸ்டேட்டில் ஓய்வெடுப்பேன்' என்றால் எப்படி?
-ஜெயலலிதாவின் எஸ்டேட் வாசம் பற்றி ஆனந்தவிகடன் தலையங்கம் (20.8.08)
ஆகஸ்ட் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் ஏராளமான கர்நாடக மாநில ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்.
-கர்நாடக மாநில சிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் மா.நடராஜ் அறிக்கை.
ஸ்டாலின் சிறுவயதில் ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் தெரிகிறது அவன் ஊக்கை விழுங்கவில்லை, ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான்.
-தெற்கு உஸ்மான் தெரு மேம்பாலத் திறப்புவிழாவில் கருணாநிதி
என்னை சீனியர் மோஸ்ட் நடிகை என்கிறார்கள். தீபிகாவை விட நான் தான் செக்ஸி என்று ரன்பீர் கபூரே சொன்ன பின்பும் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்.
ஒரு பத்திரிகை பேட்டியில் பிபாஷா பாசு
ப.சிதம்பரம் தான் இந்தியாவின் செக்ஸியான ஆண்.
ஒரு பத்திரிகை பேட்டியில் எழுத்தாளர் ஷேபா டே
தனுஷ் கலந்து கொண்டால் 10க்கு 11 மார்க் தருவேன்.
ஜோடி நம்பர்.1 நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா தனுஷ்

Thursday, August 14, 2008
சீன ஒலிம்பிக்கிஸ் : தங்கப் பதக்கங்களுக்கிடையில் நசுங்கிய இரு குழந்தைகள்.
ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழா நடக்கும்போது மழை வரக்கூடாதென்று மேகங்களை விரட்டியடித்தது சீனா - இது அறிவியல்
இதனை மன்னிக்கலாம்.
வாண வேடிக்கைகளை காமிராக்கள் சரியாக படம் பிடிக்க முடியாதென்று ஏற்கனவே டேப்பில் இருந்த கிளிப்பிங்குகளை காட்டியது சீனா - இது போலி இயல்
இதையும் மன்னிக்கலாம்.
ஆனால் விழாவில் பாடவிருந்த குழந்தை அழகாக இல்லையென்று அக்குழந்தையை யார் கண்ணுக்கும் படவிடாமல் விரட்டியடித்திருக்கிறது - இது என்ன இயல்?
இதை மன்னிக்கலாமா?
இதை விட குருரமாக ஒரு குழந்தையை தண்டிக்க முடியாது. அந்தக் குழந்தையின் குரலை உலகமே கேட்கிறது, வியக்கிறது, பாராட்டுகிறது. ஆனால் பாராட்டுகள் அத்தனையும் வெறுமனே வாயசைத்த ஒரு குழந்தைக்குப் போய்ச் சேருகிறது. பாடிய குழந்தை இருளில். வாயசைத்த குழந்தை பாராட்டு வெளிச்சத்தில். பாடிய குழந்தையின் மனது என்ன பாடுபட்டிருக்கும்? ஏக்கத்திலும், ஏமாற்றத்திலும், அவமதிப்பிலும், அவமானத்திலும் கூனி குறுகியிருக்கும். அழகாக இல்லாதது ஒரு குற்றமா?
இந்த குருரச் செயல் வெளியே வராத வரையில் மனதளவில் பாதிப்பு பாடிய குழந்தைக்கு மட்டுமே. ஆனால் தற்போது வாயசைத்த குழந்தையும் போலி என அதே காமிராக்களின் முன் மனதளவில் பாதிக்கப்படுவாளே?
இந்த இரு குழந்தைகளின் மனச்சிதைவுகளை யார் சரி செய்ய முடியும். அழகை ஒரு அளவுகோலாக வைத்து இரு குழந்தைகளின் ஆழ்மனதில் தீராத வடுக்களை ஏற்படுத்திவிட்ட இந்த சமுக அவலத்தை நமது நாட்டிலும் பரவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நமது இந்தியாவிலும் அழகு . . . அழகு என ஆண்களும், பெண்களும் பியூட்டி பார்லர்களில் பணத்தையும் நேரத்தையும் இழக்கும் காலம் இது. இது முகத்தை மட்டும் பாதிக்கிற விஷயம் - நமது அகத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த சுதந்திர தினத்தில் சீன ஒலிம்பிக்ஸ் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிற பாடம்.
ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் இந்த இலவச பாடத்தின் விலை, இரு இளம் பிஞ்சுகளின் நசுங்கிய உள்ளங்கள்.

ரஜினி படம் போட்டு சம்பாதித்த சீனியர்-ஜீனியர் விகடன்கள்
ரஜினியை தமிழ் விரோதியாக சித்தரிப்பதில் ஈடுபட்டிருக்கும் சீனியர் மற்றும் ஜீனியர் விகடன்கள் மற்றும் குமுதம் வகையறாக்கள் ரஜினி படத்தை போட்டு எப்படி எல்லாம் பணம் சம்பாதித்தார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு சாம்பிள்.
நன்றி இட்லி வடை
இதே போல ரஜினி-குமுதம் அட்டை படங்களையும் யாராவது கலெக்ட் செய்தால் இவர்கள் எல்லாம் வெகு ஜன பத்திரிகை என்ற பெயரில் ரஜினி ரசிகன் பத்திரிகையை நடத்தி பணம் சம்பாதித்தது அம்பலமாகும்.
நானே கேள்வி - நானே பதில்
ஞானியின் 'ஓ' பக்கங்கள் என்றால் என்ன?
- வாசகர்களை கருணாநிதிக்கு எதிராக சிந்திக்கத் தூண்டும் பக்கங்கள்.
- அது முடியாமல் போகும்போது, அதையே இந்த வார ஆச்சரியம் என்று அறிவித்துக் கொள்ளும் பக்கங்கள்.
- வாரா வாரம் நடிகைளின் ஆடை விலகிய படங்களைக் கொண்டு பக்கங்களை நிரப்பும் குமுதத்தை விமர்சிக்க திராணியில்லாத, குமுதம் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு எழுதப்படும் பக்கங்கள்.
- குமுதத்தை தவிர வேறு எங்கு எழுதினாலும் போணியாகாத பக்கங்கள்.
Subscribe to:
Posts (Atom)