- அழகிரியின் அசுர மதுரை பலம்.
- ஆளுங்கட்சியின் அருவருப்பான பணப்பட்டு வாடா. அதை நியாயப்படுத்திய எதிரி மற்றும் உதிரிகட்சிகளின் ஏட்டிக்குப் போட்டி பிரியாணியும், பணப் பட்டுவாடாவும்.
- வெள்ள நிவாரண 2000ம் ரூபாய் - ஒரு ரூபாய் அரிசி - இலவச டிவி - ரேஷனில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள், இலவச பொங்கல் பொருட்கள். அதைக் கிண்டலடித்த எதிர்க்கட்சிகள்.
- தேர்தலுக்கு முன் வரை தூங்கி வழிந்துவிட்டு, திடீரென உறக்கம் கலைந்த ஜெயலலிதா, லட்டு மாதிரியான விலைவாசி, மின்சாரப் பிரச்சனைகளை கையிலெடுத்து (முன்னேறி பாய்வதற்குப்) பதிலாக "ஓட்டு மெஷினில் எல்லா ஓட்டும் தி.மு.கவுக்கே விழற மாதிரி பண்ணிட்டாங்க" என்று (பின்வாங்கிப்) பிதற்றியது.
- "எல்லா பிரச்சனைக்கும் என்கிட்ட திட்டமிருக்கு. ஆனா வெளியில் சொன்னா அவங்க காப்பி அடிச்சிடுவாங்க" என்கிற விஜயகாந்தின் 'லூசுத் தனமான' வெற்று உதார்.
- எதற்க்காக தி.மு.வை விட்டு அ.தி.மு.கவிடம் வந்தோம் என்பதை கம்யூனிஸ்டுகளால் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
- ஈழம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்த ஜெயலலிதாவின் தமிழனப் பற்று மற்றும் உலக அறிவு.
- சொந்த தொகுதியை கூட்டணிக் கட்சியே பிடுங்கிக் கொண்டதால் ஏற்பட்ட (வெளியில் சொல்லிக்க முடியாத) ம.தி.மு.வின் தளர் நடவடிக்கை.
- பேரன்-அண்ணன்-தளபதியின் கூட்டு பிரச்சாரத்தால் தி.மு.வின் வாக்கு தி.மு.கவிடமே நிலை கொண்ட மனநிலை.
- கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை எட்டிய வாக்குப் பதிவு.
பொதுவாக வாக்குப்பதிவுகள் அதிகமானால் அது ஆளுங்கட்சிக்கு ஆப்பு என்று சொல்வார்கள். இங்கேயோ கிட்டத்தட்ட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் தி.மு.க ஜெயித்திருக்கிறது. இத்தனைக்கும் சென்ற தேர்தலில் இது தி.மு.க தோற்ற தொகுதி.
தி.மு.கழக குடும்பங்கள் இணைந்துவிட்டால் இனிமேல் சன் டிவியில் ஜெயலலிதா, வை.கோ, விஜயகாந்த்தை காட்ட மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மீடியா மைலேஜ் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை சன் வழக்கம்போல எல்லோரையும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரிசல்டில் பாதிப்பில்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் திருமங்கலம் தி.மு.கவுக்குத்தான் திருப்புமுனை. மற்ற (அ.தி.மு.க ஆதரவு காங்கிரஸ் உட்பட) எல்லா கட்சிகளுக்கும் இது கடுப்பு முனை.