Saturday, February 10, 2007
காதல் பிரார்த்தனை
கடவுளே!
தூரிகையைக் கொடு
அவளை ஓவியமாகத் தீட்டுகிறேன்.
ஸ்வரங்களைக் கொடு
அவளை இசையாகப் பாடுகிறேன்
வார்த்தைகளைக் கொடு
அவளை கவிதையாக வடிக்கிறேன்
உளியைக் கொடு
அவளை சிற்பமாக செதுக்குகிறேன்.
விருப்பமில்லாவிட்டால்
காதலைக் கொடு
எல்லாவற்றையும் செய்கிறேன்.
Friday, February 9, 2007
காதல் அதிசயம்
- அதிசயம் - 1
கண்ணை மூடிக்கொண்டு வலது கை சுட்டு விரலால் நுனி மூக்கை தொட முடிந்தால், அழகான யாரோ உங்களை காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிசயம் - 2
முதல் அதிசயத்தைப் படித்த அனைவருமே கண்ணை மூடிக்கொண்டு மூக்கைத் தொட முயற்சித்திருப்பீர்கள்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிசயம் - 3
முதல் அதிசயம் வெறும் கப்சா.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிசயம் - 4
காதலிக்காத எல்லோருமே காதல் எப்படி வந்தாலும், கப்சா என்றுதான் சொல்வார்கள்.
முத்தம்
கொடுத்த முத்தத்தை விட
கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம்.
முத்தமிட்டது சில வினாடிகளே!
முத்தம் தந்த பரவசம்
தினம் தினம்.
சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன்
அவளை முத்தமிட.
ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன்
முதல் முத்தம்.
முதலில் கை
பின் கன்னம்
அப்புறம் உதடுகள்
இந்த வரிசையில் முத்தமிட நினைத்தேன்.
அவள் என் உதடுகளை கவ்வியதும்
எல்லாமே மாறிப்போனது.
Thursday, February 8, 2007
தாமிரபரணி - திரைவிமர்சனம
ஆக்சன் காரம் பூசிய பேமிலி ஐஸ்கிரீம்.
மனைவியை பிரிந்து வாழும் தூத்துக்குடி உப்பு வியாபாரி - பிரபு, அவருடைய தங்கை ரோகிணியின் மகன் - விஷால். தனது மாமா பிரபுவை தெய்வமாக நினைக்கிறார். பிரபுவிற்கு ஏதாவது என்றால் அரிவாளை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்.
ஒரு கட்டத்தில் பிரபு தனது மனைவியை பிரிந்ததற்க்கு காரணமே தான் எனத் தெரியும்போது அதிர்கிறார். அது வரையில் விளையாட்டுப் பிள்ளையாக திரியும் விஷால்(படத்தில் அவர் பெயர் கெட்டவன்), பொறுப்பான பையனாக மாறி தனது மாமா பிரபுவின் வாழ்க்கை சீராக போராடுகிறார். அப்போது அவரும் அவருடைய குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளும், போராட்டங்களும்தான் கதை.
விஷால் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கு ஏற்ற கதை. கொஞ்சம் பெரிய நடிகரை போட்டிருந்தால் கூட தியேட்டர் காலியாகியிருக்கும். (உதாரணமாக விக்ரம் நடித்த மஜா, நல்ல படம் என்றாலும் இது போன்ற படம் விக்ரம் போன்ற பெரிய நடிகர்களுக்கு சறுக்கலைத் தரும்.) இயக்குனர் Hari கதாநாயகனாக விஷாலை தேர்வு செய்ததிலேயே பாதி ஜெயித்துவிட்டார்.
துணைக்கு பிரபு (பாந்தமான நடிப்பு, ரொம்ப நாளைக்கப்புறம் 'விக்' சரியாக செட் ஆகியிருக்கிறது) மற்றும் நதியா (நல்ல கதாபாத்திரம் - கோபக்கார இளம் அம்மாவாக கச்சிதமாக நடித்திருக்கிறார்). நாசர் வழக்கமான வில்லன்(பாவம் அவருடைய திறமைக்கு தீனி இல்லை)
நயனதாராவை ஞாபகப்படுத்தும் புதுமுக நாயகி. வேஸ்ட். விஷால் இதில் புதிதாக எதையும் செய்யவில்லை. இருந்தாலும் கதையோட்டம் காரணமாக அலுக்காமல் அவரை பார்க்க முடிகிறது.
அமரன் படத்தில் வரும் ஐசாலக்கடி மெட்டுதானுங்க பாடலையும், கற்பூர நாயகியே என்ற எல்.ஆர்.ஈஸ்வரியிலன் அம்மன் பாடலையும் யுவன் ஷங்கர் ராஜா ரீ மிக்ஸ் செய்திருக்கிறார். இப்படியே படத்துக்குப் படம் செய்தால் ரீ மிக்ஸ் ராஜா என்று பெயர் வாங்கிவிடுவார். புதுப்பேட்டை படத்திற்குப் பின் பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் யுவன் சரியான பழைய பேட்டையாகிக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் Hari படத்துக்குப் படம் புதிய களம் தேர்ந்தெடுக்கிறார். இதில் தூத்துக்குடியின் உப்பளம். எமோஷன்களை கையாளும்போது சரேலென அடுத்தக் காட்சிகளுக்கு தாவிவிடுகிறார். ஆக்சன்களை கையாளும்போது பரபரவென நீட்டி முழக்குகிறார். படத்தில் அடிக்கடி அரிவாள் வருவதால், ஆக்ஷன் படமோ எனத் தோன்றுகிறது. ஆனால் பிண்ணனியில் உள்ள குடும்பக் கதைதான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. இதை இயக்குனர் சரியாக பேலன்ஸ் செய்துள்ளார்.
கொஞ்சம் பாசம், கொஞ்சம் இரத்தம் இரண்டும் கலந்த குடும்பக் கலவை - தாமிரபரணி. எல்லோரும் பாருங்கள் என்று சிபாரிசு செய்ய மனமில்லை. போகாதீர்கள் என்று தடுக்கவும் மனமில்லை. அதுதான் தாமிரபரணி.
Wednesday, February 7, 2007
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் தவிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி விழிக்கிறேன்
இருந்தாலும் சொல்கிறேன்
வணக்கம்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி விழிக்கிறேன்
இருந்தாலும் சொல்கிறேன்
வணக்கம்
Subscribe to:
Posts (Atom)