Saturday, June 19, 2010

001 : வலைபாயுதே - 4G வந்தாச்சு!

3Gயே புதுசு. இப்போது புத்தம் புதுசாக 4Gஎலக்ட்ரானிக் உலகில் லேட்டஸ்ட் என்று எதுவுமே கிடையாது. சந்தைக்கு வந்த அடுத்த நாளே அதை மிஞ்சிய புதுசு மறுநாள் வந்துவிடுகிறது. 3G போன்களுக்கும் இதே கதிதான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேசலாம், டிவி பார்க்கலாம் என பல நவீன கவர்ச்சிகளுடன் 3G இப்போதுதான் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அதற்குள் 4G என்கிற நவீன நுட்பத்தை HTC EVO என்கிற நிறுவனம் ஜீன் மாதமே சந்தையில் இறக்குகிறது. 3Gயை விட பத்துமடங்கு வேகம் அதுவும் குறைந்த சந்தாவிற்கு (மாதம் 1500ல் இருந்து 2000ம் வரை) என்று தகவல் வெளியாகியுள்ளது. வாசித்த அடுத்த வினாடியே உங்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன். 4G பற்றி மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்.

தட்டச்சு செய்ததை ஆண்/பெண் குரலில் பேசவைக்கும் இணையதளம்PDF கோப்புகளிலேயே இந்த வசதி உள்ளது என்றாலும், ஆன்லைனில் இந்த வசதி கிடைப்பது கூடுதல் சிறப்பு
.
www.vozme.com

இந்த தளத்திற்குச் சென்று நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யலாம்.
செய்த பின் ஆண்/பெண் குரல் தேர்வும் செய்யலாம்.
பிறகு அதையே MP3 ஆடியோவாக கேட்கலாம்.
நமது கணிப்பொறிக்கு டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.


விண்டோவை போட்டோ எடுப்பது (Screenshot) எப்படி?பிரவுசிங் செய்யும்போதும் டுடோரியல்களை உருவாக்கும்போதும், சில விண்டோக்களை அப்படியே போட்டோ போல சேமிக்க வேண்டியதிருக்கும். அதை எப்படிச் செய்வது?

பொதுவாக நாம் PrtScr என்ற கீயை அமுக்குவோம்.
பிறகு Paint மென்பொருளில் அதை பேஸட் செய்து தேவையற்ற பகுதிகளை குறிப்பாக ஓரங்களை செதுக்குவோம். இந்த செதுக்குகிற வேலை மகா போர். அதை தவிர்க்க சுலப வழி இருக்கிறது.
  • எந்த விண்டோவை Screen Shot எடுக்க வேண்டுமோ அதை திறந்து கொள்ளுங்கள்.
  • ALT + PrtScrn கீயை ஒன்றாக அழுத்துங்கள்.
  • Paint brush அல்லது Photoshop மென்பொருளை திறங்கள்
  • Ctrl+V - பேஸ்ட் செய்யுங்கள்.
வேலை முடிந்தது. மிகக் கச்சிதமாக, நமக்குத் தேவையான விண்டோ மட்டும் பதிவாகியிருக்கும்.