விண்டோ ஷாப்பிங் போல விண்டோ ரீடிங் பழக்கம் எனக்கிருந்தது. முன் அட்டை, பின் அட்டை, சில பக்கங்களை புரட்டல், விலை பார்த்தல் என புத்தகங்களை கடப்பேன். கடந்த வருடத்திலிருந்து சிறு மாற்றம். மாற்றகர்த்தா முரளி.Muralikrishnan Chinnadurai தொணதொணவென்று புத்தகங்கள் பற்றிப் பேசி, எழுத்தாளர்களுடன் கைகுலுக்க வைத்து, இலக்கிய விழாக்களில் டீ கொடுத்து உட்கார வைத்து, புத்தக சந்தையில் சுண்டல் கொறிக்க வைத்து புத்தகங்களும் வாங்க வைத்துவிட்டான்.
புத்தகத்தையும், எழுத்தாளர்களின் கையொப்பத்தையும் ஒருசேரவாங்கி காலை நடைக்குப்பின் பின் புரட்டுவது நன்றாகத்தான் இருக்கிறது. மாதம் ஒரு புத்தகம் வாசித்தல் என்ற எனது புத்தாண்டு சுயசவால் நிறைவேறிடும் போலிருக்கிறது. இந்த மாதம் மட்டுமே இரண்டு புத்தகங்களை வாசித்துவிட்டேன்.
கவிஞர். சித்தலிங்கய்யா (கன்னடத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட 40 கவிதைகள்) மலர்விழி - மதுமிதா Madhumitha Raja
லண்டாய் - (ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்) தங்கை விஜயலட்சுமி Vijaya Lakshmi
வாசித்தேன் என்பதைச் சொல்வது எளிது. என்ன புரிந்து கொண்டேன் என்பதை எழுத மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே விரைவில் சினிமா விமர்சனம் போல நான் புத்தக விமர்சனமும் செய்வேன் என்ற எச்சரிக்கையுடன் ...
சியர்ஸ் மக்காஸ்!