பாம்பா பாக்யாவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்றைய இரவுப் பயணம் ஒன்றில் அவருடைய புள்ளினங்காள் பாடல் ஏனோ ஞாபகம் வந்தது. நண்பர் இயக்குநர் கிரிஷ் கடந்த வாரம்தான் இவருடைய குரலில், தனது படத்துக்கான பாடலை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து வேறு ஒரு பாடலுக்காக அவரை அணுகலாம் என்று இசையமைப்பாளர் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இது தொடர்பாக நேற்று கூட எங்கள் குழுவினர் அவரிடம் பேசியிருக்கிறார்கள். நான் பயணத்தில் இருந்ததால் பேச இயலவில்லை. இன்று இந்த துயரச் செய்தி.
அடுத்து நடக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் அவரும் பாட திட்டமிருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் பொன்னி நதி பாடலில் காவிரியாள் நீர் மடிக்கு எனத் துவங்கும் அவருடைய குரலை இனி நேரில் கேட்க முடியாது.
திடீரென மறைந்த சாஹுல் அமீதின் மறைவை ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது.
ஆழ்ந்த இரங்கல்!