Saturday, February 18, 2012

மாத்தியோசி - 10th மற்றும் +2 மாணவர்களுக்கு பயிற்சி முகாம்!

மாத்தியோசி!

உலக அரங்கில் இந்திய இளைஞர்களின் வீச்சு கவனம் பெற்று வருகிறது. அரசியல், கலை, இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் ராக்கெட் பாய்ச்சலாக அவர்களின் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அடுத்த வல்லரசாக நம்மை நினைத்து அமெரிக்கா அச்சம் கொள்கிறது. சபாஷ்! மிகவும் நல்லது!

ஆனால் இதனை இந்திய இளைஞர்கள் அனைவரும் உணர்ந்திருக்கின்றார்களா? அவர்களுக்கான வாய்ப்பையும், வசதிகளையும் பெற்றுக் கொள்கிறார்களா என்றால்... இல்லை என்பதுதான் பதில். இந்தியாவைப் பொறுத்தவரை, வணிக ரீதியான கலாச்சாரம் பரவி வருகிறது. இதனால் கிராமம், நகரம் என்ற எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டு வருகின்றன. இந்த உலகமயமாக்கலில் வெற்றி பெருவது 20 சதவிகித இளைஞர்கள் என்றால் இந்த அலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுவிடுவது 80 சதவிகித இளைஞர்கள்.

ஆனால் ஒரு வழிகாட்டி இருந்தால் அனைவரும் சாதிக்கக்கூடியவர்களே! மாத்தியோசி! இந்த சிந்தனையின் அடிப்படையில் உருவானதுதான். விரைவில் இளைய தலைமுறையின் எழுத்துக்களையும், கேள்விகளையும், வெற்றிகளையும் தாங்கி பத்திரிகை வடிவில் மாதா மாதம் வெளிவரப் போகிறது.

முதற்கட்டமாக திருவள்ளுர் மாவட்டத்தில் மாத்தியோசி தனது சிறகுகளை விரிக்கும். விரைவில் தமிழகமெங்கும் வானை அளக்கும்! பத்திரிகையாக அறிமுகமானாலும் இன்டர்நெட், ரேடியோ, தொலைகாட்சி என அனைத்திலும் முத்திரை பதிக்கும். இளைஞர்களின் படைப்புகளுக்கே முன்னுரிமை! இளைஞர்கள் தங்கள் படைப்புகளையும், எண்ணங்களையும் உடனே அனுப்பி வைக்கலாம். பெண்கள் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்று மாத்தியோசி விரும்புகிறது.


மாத்தியோசி பத்திரிகை வடிவில் உங்கள் கைகளுக்கு வருவதற்கு முன், உங்கள் மனதில் அமரும் முயற்சியாக ஒரு அறிவிப்பு!


சக்ஸஸ்!

பரிட்சையை பயம் இல்லாமல் எதிர்கொள்வது எப்படி?
10வது மற்றும் ப்ளஸ் டு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்!நாள்
பிப்ரவரி 19, 2012 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம்

காலை 9.30 முதல் 12.30 வரை

இடம்

கே.பி.வி.கே. கல்யாண மண்டபம் (பொன்னேரி)
அனுமதி இலவசம்!

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாத்தியோசி

மின்னஞ்சல் - mathiyocee@gmail.com

மொபைல்
சுரேஷ் - 9962523088
சந்தோஷ் - 9791085299

இழைப்பாறும் முத்தம்

கன்னங்களை முத்தங்களால் நிரப்பியபின் - இதழ்
மதுரம் சுவைத்து இளைப்பாறுவேன்.

குளிர் போர்வை முத்தம்

மழையில் குளித்த 
அவள் கூந்தலின் ஈரத்தால்
நடுங்கிய என் இதழ்களை,
அவள் இதழ்களால் போர்த்தினேன்.

பர்த்டே ஸ்வீட் முத்தம்அவள் அம்மா பர்த்டே!
அவள் தம்பி பர்த்டே!
அவள் நாய்குட்டி பர்த்டே!
அவள் பர்த்டே!
அனைவரின் பர்த்டேவுக்கும் ஒரே ஸ்வீட்தான்.
அவள் இதழ்கள்!
பச்சக்..

பாதுகாப்பு முத்தம்
லிப்ஸ்டிக் கறை படிந்து
சட்டை வீணாகாதிருக்க,
அவள் இதழ்களை
என் இதழ்களை விட்டு அகலாமல்
புதைத்துக் கொண்டேன்.

அரங்கேற்ற முத்தம்மல்லிகை உலவிய தோள்களிலும்,
என் விரல்கள் உலவிய கன்னங்களிலும் 

ஒத்திகை பார்த்து,
அவள் இதழ்களில் என் இதழ்களின் 
நடன அரங்கேற்றம் செய்தேன்.

Friday, February 17, 2012

தோனி - விமர்சனம்

நான் பெஞ்ச் மேல் நின்ற 9ம் வகுப்பு நினைவில் இருந்து ஆரம்பிக்கிறேன். செட் தியரி, தியரங்கள் போன்ற புது சமாச்சாரங்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்திருந்தன. சார் இதெல்லாம் நம்ம நிஜ வாழ்க்கையில எப்படி பயன்படுதுசார்னு ஒரே ஒரு கேள்விகேட்டேன். பத்து பிரம்படிக்குப் பின் 5 மணி நேரம் பெஞ்சில் நிறுத்தப்பட்டேன். நான் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை எந்த வாத்தியாரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பெஞ்சில் நிறுத்துவதிலும், வகுப்புக்கு வெளியிலே முட்டி போட வைப்பதிலுமே குறியாக இருந்தார்கள்.

தெரியாது என்று சொல்கிற மாணவன் மக்கு, கேள்வி கேட்கும் மாணவன் ரௌடி என்று முத்திரை குத்துவதில் நமது வகுப்பறை வாத்தியார்கள், அவர்கள் சொல்வதை வேதமாக நம்பும் பெற்றோர்கள் என எல்லோருக்குமே பங்கு இருந்தது, இன்னமும் இருந்து வருகிறது.

இந்தக் கல்வி முறையை தோனி படம் மூலமாக பெஞ்சில் ஏற்றியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமா திடீரென்று நமது கல்வி முறையின் குறைகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறது. முதலில் நண்பன் அப்புறம் தோனி. (மெரினா இன்னும் பார்க்கவில்லை) இரு படங்களுமே ரீ மேக் என்றாலும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

சமச்சீர் கல்வி, செயல்வழிக் கல்வி என்று நமது கல்வி முறையில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும்போது, தமிழ் சினிமாவில் அந்த மாற்றங்களை ஒட்டிய சிந்தனைகள் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு மாணவன் பள்ளிக்கு எதற்குப் போகிறான். தனக்குத் தெரியாது என்பதை தெரிந்து கொள்ளவே பள்ளிக்குச் செல்கிறான். ஆனால் பள்ளியில் தெரியாது என்று சொன்னால் பனிஷ்மெண்ட். அதனால் வாயே திறக்காமல் கடைசி வரை ஊமையாகவே இருந்து, பயந்து பயந்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலேயே பாஸ் செய்கிறான்.

ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் எது பிடிக்கும் என்று மகனையோ மகளையோ கேட்கிறோம். ஆனால் அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய கல்வியோ, அவர்களுக்கு பிடிக்காத அனைத்தையும் அவன் மேல் திணிக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால், அவன் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே புத்தகத்தில் இருப்பதையெல்லாம் படிக்கச் சொல்லி அவனை ஒரு மார்க் வாங்கும் இயந்திரமாக மட்டுமே மாற்றுகிறது. இதனால் மாணவர்கள் தனக்கு விருப்பமானதையும் தொடர முடியாமல், விருப்பமில்லாததையும் தொடரமுடியாமல் மக்கு பிளாஸ்திரிகளாக சித்தரிக்கப்பட்டு பள்ளியிலிருந்து வெளியே துப்பப்படுகிறார்கள்.

பிரகாஷ்ராஜின் மகனுக்கு தோனி போல பெரிய கிரிக்கெட் வீரனாக வர விருப்பம். ஆனால் தந்தை பிரகாஷ் ராஜிம், பள்ளியும் அவனுக்குப் பிடிக்காத கணக்குப்பாடத்தை படிக்கச் சொல்லி இம்சிக்கிறார்கள். அது பிடிக்காமல் அவன் மேலும் மக்கு மக்கு என்று பெயரெடுக்கிறான். இப்படியே விட்டால் அவன் ஃபெயில் ஆகிவிடுவான், பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சி போய்விடும் என்று ரெக்கார்ட் பற்றி கோபப்படுகிறது நிர்வாகம். எனவே டிசி கொடுத்துவிடுவேன் என பயமுறுத்த பயந்து போகும் பிரகாஷ்ராஜ் மகனை டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என இன்னமும் மூச்சுத் திணறத் திணற புத்தகத்துக்குள் அழுத்துகிறார்.

மகனைப் புரிந்து கொள்ளாத அப்பாவாக இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களே இருக்கக் கூடும். மாணவனின் படிப்பை பற்றிக் கவலைப் படாமல் தனது 100 சதவிகித தேர்ச்சி விகிதத்துக்காக மட்டும் பள்ளி, உங்கள் மகனோ மகளோ படிக்கும் பள்ளி இருக்கக் கூடும்.

விரும்பியதைப் படிக்கும் சுதந்திரத்தை ஒரு மாணவனுக்கு நமது கல்வி முறை தர வேண்டும் என்று வாதாடுகிறது தோனி திரைப்படம். அதற்காக சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும், மார்க் மார்க் என்று மிகைப்படுத்தப்பட்ட மனப்பாட முறை கல்விக்கு எதிரானது என்பதால் தோனி திரைப்படத்துக்கு என் ஆரவாரமான வரவேற்புகள்.

கடைசியாக ஒரு கேள்வி - செட் தியரியை நாம் நிஜ வாழ்க்கையில் எங்கு பயன்படுத்துகிறோம்? பதிலை நீங்கள் சொல்ல வேண்டாம். என்னை பெஞ்சில் ஏற்றிய அந்த 9ஆம் வகுப்பு வாத்தியார்தான் சொல்ல வேண்டும்.

காதல் என்பது - 10காதலர் தினம் ஸ்பெஷல் - 10
---------------------------------------
காதல் என்பது
இறுதி நாள் வரை
தொடரும் முதல் அணைப்பு!காதல் என்பது - 9காதலர் தினம் ஸ்பெஷல் - 9
---------------------------------------
காதல் என்பது
காத்திருந்து அடைந்த தேவதைகள்
காத்திருக்கும் மாயங்கள்!காதல் என்பது - 8காதலர் தினம் ஸ்பெஷல் - 8
---------------------------------------
காதல் என்பது
அருகில் இருக்கும் தொலைவு!காதல் என்பது - 7காதலர் தினம் ஸ்பெஷல் - 7
---------------------------------------
காதல் என்பது
கடற்கரையை அளந்து சலித்தபின்,
கடல்நுரையை எண்ணியபடி காத்திருப்பது!காதல் என்பது - 6காதலர் தினம் ஸ்பெஷல் - 6
---------------------------------------

காதல் என்பது 
மடி தேடி ஏங்குவதும்,
மடி ஏந்தித் தாங்குவதும்!

Thursday, February 16, 2012

உதவி செய்ய நல்ல மனது மட்டும் போதாது!சார் ஒரு உதவி!

முதன் முதலாக அந்தக் குரலை ஃபோனில் கேட்கிறேன். இணையத்தில் பல மாதப் பழக்கம் என்றாலும், அந்த போன் தான் முதல் ஃபோன் உரையாடல். தொடர்பு எல்லைக்கு அருகில் இருந்த ஃபோனின் கரகரப்பும், அவருடைய குரலில் இருந்த தயக்கமும் வார்த்தைகளை விழுங்கின. ஆனாலும் விஷயம் புரிந்துவிட்டது. நண்பருக்கு உடனடி பணத் தேவை!

அவர் கேட்ட தொகை முழுவதையும் தரக்கூடிய சூழலில் நான் இருக்கவில்லை, ஆனாலும் மற்ற நல் உள்ளங்களைக் கேட்டு அந்த தொகையை திரட்டிவிட முடியும் என்பதால், உதவி செய்வதாக சம்மதித்தேன். 
ஆனால் . . .

அதன் பிறகு வேலை அழுத்தத்தில் அவருடைய குரலையும், தேவையையும் மறந்தே போனேன். மறுநாள் மீண்டும் ஒரு வெளியூர் பயணத்தில் இருந்தபோது, நள்ளிரவில் பஸ்ஸில் இருக்கும்போது, அவருடைய ஞாபகம் வந்துவிட்டது. 

அடடா... உதவியும் செய்யாமல், மறுக்கவும் இல்லாமல் இப்படி அவரை தவிக்க வைத்துவிட்டோமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நல்ல வேளையாக அதிகாலையிலேயே அவருக்கு தேவையான உதவி கிடைத்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அதில் ஒரு நிம்மதி என்றாலும், இப்படி சொதப்பி விட்டோமே என்ற உளைச்சலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

நீதி -  உதவி செய்வதற்கான மனம் இருந்தால் மட்டும் போதாது. சரியான நேரத்தில் உதவ வேண்டும்.

விளையாட்டு முத்தம்
விரல்கள் அவள் இடையில்
சறுக்கி விளையாடும்போது,
இதழ்கள் அவள் இதழ்களை
இறுகப் பற்றி விளையாடும்!

ராட்சஸி முத்தம்
என் கன்னங்களில் 
தன் இதழ்கள் பதித்துவிட்டு
என் இதழ்களில்
பற்கள் பதிப்பாள் . . .
முத்த ராட்சஸி!

இசை முத்தம்
சத்தங்கள் எழாத முத்தங்களால்
இதழிசை பிறந்தபோது,
வளையல்களும், கொலுசுகளும்
உடன் பாடிக் களித்தன!

நகை முத்தம்
அவள் மேனி உரசும்
நகைகளைக் கழற்ற
உதவும்போதெல்லாம்,
அவள் அதரங்களுடன்
என் அதரங்கள்
எப்படியோ உரசிக் கொள்கின்றன!

முதுகு முத்தம்
இப்போது வேண்டாம் 

எனச் சிணுங்கும் பொழுதுகளில்
ஈர முத்தங்களை
அவள் மல்லிகை முதுகில் 
மலர்த்தி வைப்பேன்!

களவு முத்தம்
துப்பட்டா அவள் கழுத்துக்கு
காவல் இருக்கும்போது
என் இதழ்கள் அவள் இதழ்களை களவாடும்!

கன்னக்கடி முத்தம்
மல்லிகைச் சரம் பற்றி 
அவள் இதழ் நோக்கி முன்னேறும்போது
வழுக்கிவிடாதிருக்க 
அவள் கன்னங்களை
கடித்துக் கொள்கிறேன்.

குடை ஜிமிக்கி முத்தம்
முத்த மழையில் நனைவதற்காகவே
அவள் குடை ஜிமிக்கியில் மினுக்குகிறாள்!

கற்கண்டு முத்தம்


விரல்கள் பிசுபிசுக்கும் என்பதால்

கற்கண்டுகளை
அவள் இதழ்களில் சேமித்து
என் இதழ்களால் சுவைக்கிறேன்!

வளையங்கள் முத்தம்
குளத்தில் பூ விழுந்து

நீர் வளையங்கள் பிறப்பதுபோல
அவள் இதழ் குளத்தில்
என் இதழ் விழுந்ததும்
முத்த வளையங்கள் பிறக்கும்!

தாவணிக்காற்று முத்தம்

தாவணிக் காற்றில்
முத்தங்கள் பறந்துவிடாதிருக்க

அவள் இதழ்களை

என் இதழ்களால் மூடினேன்!

எக்ஸ்பிரஸ் முத்தம்லேட்டாகச் சென்றால்

அம்மா திட்டுவாங்க என்றாள்!
அதனால் விரைவாக
நூறு எக்ஸ்பிரஸ் முத்தம்!

Wednesday, February 15, 2012

வணக்கம் தமிழ் மிஸ்!


நேற்று பொன்னேரியில் இரண்டு மணி நேரம் டிராபிக் ஜாம். நண்பர் அலுத்துப் போய் காரை, ஏதோ வயல் வழி ரூட்டில் திருப்பிக் கொண்டு, நீங்க பஸ் பிடிச்சுக்கோங்க என்று டாட்டா காண்பித்துவிட்டார்.

காலியாகத் தெரிந்த ஒரு கோயம்பேடு பஸ்ஸாகப் பார்த்து, ஏற முயன்றபோது படியில் இரண்டு பெண்கள்! மிதமான இளம் என்பதை அடைப்புக் குறிக்குள் எழுதிக் கொள்ளவும். நான் ஜெர்க் ஆகி, வழி விடுங்க நான் மேல போகணும் என்றேன்.
அதுக்குள்ள ஏன் மேல போறீங்க? இன்னும் வயசு இருக்குல்ல.
ஹலோ...
சரி.. சார் அவரசப்படறாரு.. வழி விட்டுடுடி..அந்த பஸ்ஸில் அவர்கள் ரெகுலர் போலிருக்கிறது. பஸ் முழுவதும் அதே மிதமான இளம் பெண்கள் கலகலவென்று கொண்டிருந்தார்கள். மேலும் 30 நிமிட டிராபிக் காத்திருப்பில், முதலில் ஒரு வயலெட் கலர் புடவைப் பெண், கண்டக்டருக்கு சில்லறை அனுப்பும்போது சிநேகமானார். அதற்குப் பின் கோயம்பேடு வரை தொடர் கடலை..

இறங்குவதற்குள் அவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியைகள் என்பதை (கெமிஸ்ட்ரி மிஸ்.. கம்ப்யூட்டர் மிஸ்) தெரிந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட 3 மணி, 30 கி.மீ பயணம். இரவு மணி 8. மறுநாள் காலை மீண்டும் 8 மணிக்கே வர வேண்டுமாம்.

அவர்களின் குரலில் அலுப்பு தெரிந்தாலும், குடும்பத்தின் நிதி நிலையை சமாளிக்க தூரங்கள் கடந்து தினம் தினம் களைப்பு ஒதுக்கி, நம்பிக்கையுடன் உழைக்கும் அவர்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் தமிழ் மிஸ்!

காதல் என்பது - 5
காதலர் தினம் ஸ்பெஷல் - 5
---------------------------------------
காதல் என்பது 
ஸ்பரிசங்களால்
வருஷங்கள் கடப்பது!

காதல் என்பது - 4காதலர் தினம் ஸ்பெஷல் - 4
---------------------------------------

காதல் என்பது 

இரவுகளுக்கு
வானவில்லை அறிமுகப்படுத்துவது!

காதல் என்பது - 3
காதலர் தினம் ஸ்பெஷல் - 3

---------------------------------------

காதல் என்பது 
மின்னல் நொடிகளுக்காக
ஜன்னல் வெளிகளில்
கண்கள் உறைவது!

காதல் என்பது - 2


காதலர் தினம் ஸ்பெஷல் - 2

---------------------------------------
காதல் என்பது ...
பூக்களின் தேசத்தில்,
அவள் கூந்தலில் இருந்து உதிரும்
ஒற்றைப் பூவை நேசிப்பது!

காதல் என்பது - 1
காதலர் தினம் ஸ்பெஷல் - 1

---------------------------------------
காதல் என்பது 
வானில் பறப்பது!
இறக்கைகள் இல்லாமல் . . .