Monday, August 8, 2022

கமர்ஷியல் படம் மட்டுமல்ல கருத்துள்ள படமும் எடுப்போம் - துடிப்பான இளைஞர்களுக்காக 5 நிமிட குறும்படப்போட்டி

 

ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டி - ISR 5 minute short film contest

இளம் படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்பு! குறும்படம் எடுத்து உங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

ஐ.எஸ்.ஆர் வென்சர் தயாரிப்பு நிறுவனம் 5 நிமிட குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.

குறும்படம் எடுப்பவர்கள் எப்போதுமே காதல் படம், திரில்லர் அல்லது பேய்படம்தான் எடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அது உண்மையில்லை. நம் இளைஞர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களால் எந்த வகையிலான படத்தையும் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்தப் போட்டி.

எனவே அவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டியின் மையக் கருவாக ”குழந்தைகளின் உரிமைகள் - Child Rights" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டியாளர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கும்போது, அந்தக் குறும்படங்கள் வழியாக குழந்தைகளின் உரிமைகள் என்றால் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துகள் வெளியாகும்.

குறிப்பாக இளைஞர்களிடமிருந்து அது வெளிப்படும்போது மிக வேகமாக அது அனைவரையும் சென்றடையும். மிக மிக முக்கியமாக நமது இளைஞர்கள் நல்ல சிந்தனைகள் உள்ள படம் எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்பது நிரூபணமாகும்.

எனவே இளைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். கமர்ஷியல் படங்களும் எடுப்போம், கருத்துள்ள படங்களும் தருவோம் என்பதை நிரூபியுங்கள்.

போட்டி என்றிலிருந்து துவங்கும், அதில் எப்படி கலந்து கொள்ளலாம், பரிசுத் தொகை என்ன என்பது பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும்.

ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு  9962295636 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் அனுப்பி, உங்கள் ஆர்வத்தை தெரிவிக்கலாம். 

இளம் குறும்பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டி! போட்டியாளர்கள் அறிந்து கொள்ள சில முக்கியத் தகவல்கள்!

 


ISR 5 minute short film contest

Announcement : 07
கலந்து கொள்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்.
Theme : Child rights (குழந்தைகளுக்கான உரிமைகள்)
குழந்தைக்கான வயது வரையறை
-------------------------------------------------
18 வயதுக்கு உட்டபட்ட அனைவரும் குழந்தைகள்
18 வயது முடியும் வரை உள்ள பருவம் குழந்தைப்பருவம்
What age is considered a child?
---------------------------------------------
A child means every human being below the age of eighteen years, as defined by Article 1 of the The United Nations Convention on the Rights of the Child.
குழந்தைகளுக்கான உரிமைகள் எவை?
சுருக்கமாகச் சொன்னால் . . .
உணவு, உடை, இருப்பிடம், காற்று, குடிநீர், மருத்துவம், தேவையான தகவல், விளையாட்டு, ஓய்வு மற்றும் பாதுகாப்பு.
What are Child Rights?
Healthy water & food, Quality Education, Family Support, Freedom to express, Access to Child friendly information, Importance of Relaxation & Play, Exposure to culture & Art
Awards : Best 3 films, Best Director, Best Script Writer, Best performers, Best Cinematographer and Best Editor.
Next announcement : 09.08.2022
Hello film makers, keep watching this page for update. Very soon starting date will be announced.
வெகு விரைவில் போட்டி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். அதுவரையில் மற்ற அறிவிப்புகள் தொடரும்.

Friday, August 5, 2022

சிவாஜியுடன் ஏன் மணிரத்தினம், ஷங்கர் போன்றோர் பணியாற்றவில்லை?

இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம், தன் மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தியபோது எடுத்த படம் இது.

இதைப் பார்த்தவுடன் எனக்குள் எப்போதும் உள்ள கேள்வி மீண்டும் எழுகிறது. சிவாஜி - ஷங்கர், மணிரத்னம், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றோரின் காம்பினேஷனெல்லாம் ஏன் நடக்கவே இல்லை என்று எப்போது யோசித்தாலும் புரியவில்லை.

சிவாஜி அவர்களை தவிர்த்தாரா அல்லது சூழல் அவர்களை இணைய விடவில்லையா?