Wednesday, February 21, 2007

முத்தம்

தந்தால் திருப்பித் தருகிறேன்
தராவிட்டால் நானே தருகிறேன்
முத்தம்

Monday, February 12, 2007

எப்போதும் அவள் . . .

அவளுக்காக பூங்காவில்
கர்திருந்தேன்
அவளுக்காக கோவிலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பள்ளிக்கூட வாசலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பஸ்நிறுத்தத்தில்
கர்திருந்தேன்

ஆனால் அவள் எப்போதும்
ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்
தோன்றி மறைந்துவிடுகிறாள்

Saturday, February 10, 2007

காதல் பிரார்த்தனை


கடவுளே!

தூரிகையைக் கொடு
அவளை ஓவியமாகத் தீட்டுகிறேன்.

ஸ்வரங்களைக் கொடு
அவளை இசையாகப் பாடுகிறேன்

வார்த்தைகளைக் கொடு
அவளை கவிதையாக வடிக்கிறேன்

உளியைக் கொடு
அவளை சிற்பமாக செதுக்குகிறேன்.

விருப்பமில்லாவிட்டால்
காதலைக் கொடு
எல்லாவற்றையும் செய்கிறேன்.