வீட்டுவாடகை, கரண்ட்பில், மளிகை கடை என எக்கச்சக்க செலவு காத்திருக்கிறது. ஆனால் கையில் நயா பைசா இல்லை. சுமதி தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள். கணவன் சுரேஷ் கவலையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
டிங் டாங்
வாசலில் காலிங் பெல் ஒலித்தது. சுமதி ஆடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டே கதவைத் திறந்தாள். வாசலில் ரமேஷ். கணவனின் ஸ்மார்ட்டான நண்பன்.
என்ன என்று அவள் விசாரிப்பதற்குள் அவள் கையில் 5000 ரூபாயை திணித்தான்.
இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு ஒரே ஒரு முத்தம் தருவியா?
ஒரு கணம் யோசித்து அடுத்த கணம் கொடுத்தாள்.
“இச்”
யாரது? கணவன் சுரேஷ் எழுந்து வரவும், ரமேஷ் விரைந்து மறைந்தான்.
உங்க பிரண்டு ரமேஷ் வந்திருந்தார், நீங்க தூங்கறீங்கன்னு சொன்னவுடனே போய்விட்டார்.
”அப்படியா, அவனுக்கு நான் 5000 ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பித் தர வர்றேன்னு சொல்லியிருந்தான். அதைப் பத்தி எதாவது சொன்னானா?”
ஜாலி அட்வைஸ்
கணவர்களுக்கு - மனைவிக்குத் தெரியாமல் யாருக்கும் கடன் தராதீர்கள்
மனைவிகளுக்கு - கணவனுக்குத் தெரியாமல் யாரிடமும் பணம் வாங்காதீர்கள்
(ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்த கதை)
3 comments:
இவ்ளோ டீசண்ட்டாவா அந்த வெப்சைட்ல இருந்தது. வேற வெர்ஷன்ல படிச்சா மாதிரி ஞாபகம்
:)))))))))))))
பணம் பத்தும் செய்யும் . முத்தமும் கிடைக்க செய்யும்
ம். தேவையான அட்வைஸ்தான்.
Post a Comment