- அழகிரியின் அசுர மதுரை பலம்.
- ஆளுங்கட்சியின் அருவருப்பான பணப்பட்டு வாடா. அதை நியாயப்படுத்திய எதிரி மற்றும் உதிரிகட்சிகளின் ஏட்டிக்குப் போட்டி பிரியாணியும், பணப் பட்டுவாடாவும்.
- வெள்ள நிவாரண 2000ம் ரூபாய் - ஒரு ரூபாய் அரிசி - இலவச டிவி - ரேஷனில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள், இலவச பொங்கல் பொருட்கள். அதைக் கிண்டலடித்த எதிர்க்கட்சிகள்.
- தேர்தலுக்கு முன் வரை தூங்கி வழிந்துவிட்டு, திடீரென உறக்கம் கலைந்த ஜெயலலிதா, லட்டு மாதிரியான விலைவாசி, மின்சாரப் பிரச்சனைகளை கையிலெடுத்து (முன்னேறி பாய்வதற்குப்) பதிலாக "ஓட்டு மெஷினில் எல்லா ஓட்டும் தி.மு.கவுக்கே விழற மாதிரி பண்ணிட்டாங்க" என்று (பின்வாங்கிப்) பிதற்றியது.
- "எல்லா பிரச்சனைக்கும் என்கிட்ட திட்டமிருக்கு. ஆனா வெளியில் சொன்னா அவங்க காப்பி அடிச்சிடுவாங்க" என்கிற விஜயகாந்தின் 'லூசுத் தனமான' வெற்று உதார்.
- எதற்க்காக தி.மு.வை விட்டு அ.தி.மு.கவிடம் வந்தோம் என்பதை கம்யூனிஸ்டுகளால் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
- ஈழம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்த ஜெயலலிதாவின் தமிழனப் பற்று மற்றும் உலக அறிவு.
- சொந்த தொகுதியை கூட்டணிக் கட்சியே பிடுங்கிக் கொண்டதால் ஏற்பட்ட (வெளியில் சொல்லிக்க முடியாத) ம.தி.மு.வின் தளர் நடவடிக்கை.
- பேரன்-அண்ணன்-தளபதியின் கூட்டு பிரச்சாரத்தால் தி.மு.வின் வாக்கு தி.மு.கவிடமே நிலை கொண்ட மனநிலை.
- கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை எட்டிய வாக்குப் பதிவு.
பொதுவாக வாக்குப்பதிவுகள் அதிகமானால் அது ஆளுங்கட்சிக்கு ஆப்பு என்று சொல்வார்கள். இங்கேயோ கிட்டத்தட்ட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் தி.மு.க ஜெயித்திருக்கிறது. இத்தனைக்கும் சென்ற தேர்தலில் இது தி.மு.க தோற்ற தொகுதி.
தி.மு.கழக குடும்பங்கள் இணைந்துவிட்டால் இனிமேல் சன் டிவியில் ஜெயலலிதா, வை.கோ, விஜயகாந்த்தை காட்ட மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மீடியா மைலேஜ் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை சன் வழக்கம்போல எல்லோரையும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரிசல்டில் பாதிப்பில்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் திருமங்கலம் தி.மு.கவுக்குத்தான் திருப்புமுனை. மற்ற (அ.தி.மு.க ஆதரவு காங்கிரஸ் உட்பட) எல்லா கட்சிகளுக்கும் இது கடுப்பு முனை.
8 comments:
கூட்டிக் கழித்துப் பார்த்தால் திருமங்கலம் தி.மு.கவுக்குத்தான் திருப்புமுனை. மற்ற (அ.தி.மு.க ஆதரவு காங்கிரஸ் உட்பட///
பொங்கல் வாழ்த்துக்கள்!!!!
தேவா.......
Vakkalargal ellarum panam vangi kondu DMK vuku vote pottu vittargal, adhanaldan ADMK thotradhu, Vijaykanthin dubakoor dialogue ellam aluppai thandhuvittadhu, Sarathkumarin pannayar dialogue pudidhaga illai,Lady sentiment + madurai makkalin visuvasam vendradhu !!
""எல்லா பிரச்சனைக்கும் என்கிட்ட திட்டமிருக்கு. ஆனா வெளியில் சொன்னா அவங்க காப்பி அடிச்சிடுவாங்க" என்கிற விஜயகாந்தின் 'லூசுத் தனமான' வெற்று உதார்"
Totally agree...He can be an alternative.Just one off...
"Happy Pongal"
Ramki.
தி மு க என்ற கட்சிக்கு என்று ஒரு தனி இடம் மக்கள் மனதில் உண்டு என்பதை மீண்டும் திருமங்கலம் தேர்தல் நிருபித்து உள்ளது . விஜயகாந்த் போன்ற தீடீர் கட்சிகளுக்கு ஒரு நல்ல பள்ளிகூடம் தான் திருமங்கலம் .அதிமுக நல்ல எதிர் கட்சியாக பணி புரியவில்லை என்பதயும் மிகப்பெரிய ஒட்டு வித்தியாசத்தினால் தேரிந்து கொள்ளும் வாய்ப்பும் அதிமுக விற்கு கொடுத்துள்ளனர் .
lanka
Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com
இதில் பெருமை பட ஒன்றும் இல்லை. இதே போன்று பொது தேர்தல் போது செயய முடியாது. நிச்சயம் தி.மு.க 30 சீட்டு வெற்றி பெறுவதே சந்தேகம்.
Jegan
திருமங்கலம் இடை தேர்தல்
************************
ஒரு தொகுதி - 65 கோடி செலவு - பிரியாணி பொட்டலம் - இலவச வேட்டி சட்டை - இரண்டாயிரம் பணம் - இலவச குடங்கள் - மிச்சர் / அல்வா பாக்கேட்டில் தங்க மோதிரம் - 80+% ஒட்டு பதிவு.....
*************************
திருமங்கலம் இடை தேர்தலின் மூலம் நாம் கற்றுகொண்டது என்ன?
இந்த இடை தேர்தல் நமக்கு கற்று கொடுத்தது என்ன?
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை நாம் எப்படி எதிர் கொள்ள போகிறோம்?
Jan 11 (4 days ago)
வனஜாசெல்வராஜ்.
நேர்மையாக இருப்பவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எண்ணியதை மட்டுமே செயல்படுத்துபவர்களும் உண்டு. இதற்கு விலை போய் முதுகெலும்பே இல்லாமல் வளைபவர்களும் உண்டு. எதுவுமே வேண்டாம் என்று புறக்கணித்து நிலையாய் நிற்பவர்களும் சிலருண்டு.
ஆனால் 80% வாக்குப்பதிவு என்பது நிறைய பேர் விலை போயுள்ளதையே காட்டுகிறது. தானாக முன் வந்து இதுவரை இத்தனை சதவீத வாக்குகளை யாரும் , எப்போதும் பதிந்ததில்லை. இதன் பின்னணியில் பணம் மட்டுமே இருக்கிறதா? இல்லை இன்னும் ஏதேனும் இருக்கிறதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. அண்ணாவும், காமராஜரும் ஆண்ட போது கூட இவ்வளவு வாக்குகள் கிடைக்கவில்லையே...?
ஊகியுங்கள் ...பின் விவாதியுங்கள்...தேர்தலுக்குள் ஒரு மாற்றம் கொணர்வோம்...
Jan 12 (3 days ago)
பூபாலன் தாட்டி
//65 கோடி செலவு - பிரியாணி பொட்டலம் - இலவச வேட்டி சட்டை - இரண்டாயிரம் பணம் - இலவச குடங்கள் - மிச்சர் / அல்வா பாக்கேட்டில் தங்க மோதிரம் - 80+% ஒட்டு பதிவு.....//
ரூ. 61 கோடிக்கு 80 சதவிகித வோட்டு பதிவென்றால், ரூ. 81.25 செலவு செய்திருந்தால் 100 சதவிகிதம் வோட்டு பதிவு விழுந்திருந்தாலும் விழுந்திருக்கலாம்... அரசியல் வாதிகள் இங்கயும் தங்கள் கடமையை சரிவர செய்யாததே இப்படியொரு வரலாறு காணாத வோட்டு பதிவு இழந்ததற்கு காரணம்.
Post a Comment