தாய்மையின் நிறம் என்ன?
பசுமை நிறம்.
கருணையின் நிறம் என்ன?
வெண்மை நிறம்.
கோபத்தின் நிறம் என்ன?
செம்மை நிறம்.
காணும் நிறமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!
இப்படித் துவங்கும் ஒரு பாடலை ‘அவர்‘ திரைப்படத்தில் நான் எழுதியிருக்கின்றேன். தொடர்ந்து வரும் வரிகளையும் கவனியுங்கள். அந்த வரிகளின் முதல் வார்த்தையை உங்களால் யூகிக்க முடியுமா?
______________ இன்றி அலைகளிலே ஏது நிறம்?
______________ இன்றி தீபத்தில் ஏது நிறம்?
______________ இன்றி வானத்தில் ஏது நிறம்?
காணும் குணமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!
கோடிட்ட இடங்களை ஒரே ஒரு வார்த்தையால் மட்டும் நிரப்புங்கள். உங்கள் கற்பனைகளும், சிந்தனைகளும் எந்த அளவிற்கு என்னுடன் ஒத்துப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
6 comments:
__காற்றின் துணை _ இன்றி அலைகளிலே ஏது நிறம்?
___விளக்கின் துணை _ இன்றி தீபத்தில் ஏது நிறம்?
_மேகத்தின் துணை_ இன்றி வானத்தில் ஏது நிறம்?
காணும் குணமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!
கடைசி வரியில் கடலின் துணை என்றும் வரலாம்..
ஒளி?
Nee
_நீர் _ இன்றி அலைகளிலே ஏது நிறம்?
ஒளி_ இன்றி தீபத்தில் ஏது நிறம்?
____மேகம் அல்லது கார்__________ இன்றி வானத்தில் ஏது நிறம்?
கரை இன்றி அலைகளிலே ஏது நிறம்?
சுடர் இன்றி தீபத்தில் ஏது நிறம்?
வெளிச்சம் இன்றி வானத்தில் ஏது நிறம்?
வளி (காற்று)
திரி
ஒளி
Post a Comment