Friday, December 9, 2011

ஒஸ்தி - விமர்சனம்

ஹிந்தில தபாங் என்றால், தமிழில்ல ஒஸ்தியாம்லே..  சரியான போங்கு. டிரையலரில் ச்சுட்டே போடுவேன் என்றார் சிம்பு. சொன்னதைச் செய்ஞ்சுட்டாருல்லே.. படம் பாத்த அவ்ளவு பேரும் காலிலே..

டர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் தமிழில் பேசுவதைப் பார்க்க கோயம்பேடு ரோகிணி காம்ப்ளசுக்குள் நுழைந்தோம். கருவாட்டு வாடையுடன் காத்திருந்த போது நண்பர் கணேஷ் டிக்கெட் வாங்கி வந்துவிட்டார். காரை பார்க் பண்ணிவிட்டு வந்த ஜெயராஜ், கார் பார்க்கிங்ல போட் நிக்குது சார் என்றார். இது மீன் மார்கெட்டா, தியேட்டரா என்று சந்தேகித்துக் கொண்டிருக்கும்போது, திமு திமுவென்று டாஸ்மாக் வாசனையுடன் கூட்டம். நண்பர் கணேஷ் திடீரென அலறினார். ஐயையோ 3 டிக்கெட்டுக்கு பதில் ரெண்டுதான் வாங்கினேன். இப்ப என்ன பண்றது என்று பதறிக் கொண்டே மீண்டும் வரிசைக்கு ஓடினார். 5 நிமிடம் கழித்து புன்னகையுடன் வந்தார். அண்ணே ஒரு ட்விஸ்ட். டர்ட்டி பிக்சர் கான்சலாம். அதுக்கு பதிலா ஒஸ்தி டிக்கெட் கொடுத்துட்டான் என்றார். இதுதான் நான் ஒஸ்தி பார்த்த கதை.

ஒஸ்தியில என்ன கதை என்று நீங்கள் கேட்டுவிட்டால் நான் என்னத்த சொல்ல முடியும். அதனால்தான் ஒஸ்தியை பார்க்கப் போன கதையை நீட்டி முழக்கியிருக்கிறேன்.

Young Super Star என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, படம் முழுக்க கவர்ச்சி நடிகைகள் டை்டாக பிளவுஸ் போடுவது போல சட்டை அணிந்து கொண்டு, கூலிங் க்ளாஸ் இருட்டில் திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டே,  திருன்னவேலி ஸ்லாங் பேசிக் கொல்கிறார் (வில்லன்களையும், நம்மையும்).

கடைசியில் ஒரு லே போட்டுவிட்டால் அது திருநெல்வேலி ஸ்லாங் என்பது ஒஸ்தி வசனகர்த்தாவின் கண்டுபிடிப்பு. இசையமைப்பாளர் தமன், கீபோர்டை ஆன் செய்துவிட்டு அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் ஸ்டாப்பாக டிஜிட்டல் கதறல்கள், காதில் இன்னமும் ஙொய்ங்.

திரும்பவும் ஒரு முறை சொல்றேன். கதையைக் கேட்காதீங்க. ஏன்னா படம் முழுக்க கதாசிரியரும் தூங்கிட்டார், நடுநடுவுல நானும் தூங்கிட்டேன். சாயமுடியாத கிழிந்து போன சேரில், 90 டிகிரி செங்குத்தாக உட்கார்ந்து கொண்டு அவ்வளவாக தூங்க முடியவில்லை, பக்கத்து சீட் டாஸ்மாக்கர் வேறு அவ்வப்போது வாந்தி எஃபக்ட் கொடுத்துக் கொண்டிருந்ததால், பயத்தில் கண் விழித்து சில சீன்களை பார்த்ததன் பலன்தான் இந்த விமர்சனம்.

சந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம். சகட்டு மேனிக்கு எல்லோரையும் வாடா போடா என்கிறார். விட்டால் காமிராவைப் பார்த்து நம்மையும் என்னடா என்பார் போலிருக்கிறது. சிம்பு கேப் விடும்போதெல்லாம் இவர் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்.

இவர்கள் அதிகம் பேசித் தள்ளிவிட்டதால், நாயகி ரிச்சா கங்கோபாத்யாயவிற்கு டயலாக் கட். கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் வரை, முந்தானையை சரியவிட்டு, இடுப்பை காண்பித்துக் கொண்டே இருக்கிறார். மயக்கம் என்ன படத்துக்கு முன் இது ரிலீஸாகியிருந்தால், ஃபீல்ட் அவுட் ஆகியிருப்பார். பாடல் காட்சிகளில் கூட இவருக்கு பதில் சிம்வுவே ஆடித் தள்ளிவிட்டார் என்பதால், அவ்வப்போது ஃபுல் மேக்கப்பில் முழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.

ரேவதி, நாசர், கணேஷ், ஜித்தன் ரமேஷ், நிழல்கள் ரவி அப்புறம் சரண்யா என்று இன்னும் யார் யாரோ வந்து போகிறார்கள்.

சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டால், பட்டன்கள் தெறிக்க சட்டை தானாக கழன்று கொள்ளும் என்பதும், டிராக்டரை ஆன் செய்து, புகை கக்கும் எக்ஸாட் பைப்பை வாய்க்குள் சொருகினால் ஆள் காலி என்பதும், ஒஸ்தி நமக்குத் தரும் கிளைமாக்ஸ் மெசேஜ்கள்.

சிம்பு வெறியர்களும், மசாலா பிரியர்களும் மட்டும் இந்தப் படத்தை 30 நிமிடங்கள் பார்க்கலாம்.

சிவாஜி த பாஸ் மாதிரி, ஒஸ்தி த மாஸ்! சிம்புவைத் தவிர வில்லன் உட்பட எல்லா கேரக்டர்களும் இந்த வசனத்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
மாஸ்னா என்னாலே, கொசு கடிக்காம இருக்க தடவுவோமே அந்த ஓடோமாஸாலே..

கடைசியில் டைட்டில் போடும்போது, சிம்பு ஒரு பெரிய சிக்கன் லெக் பீஸை கடிக்கிறார்.

ஒஸ்தி, கடி என்பதை சிம்புவே சிம்பாலிக்காக சொல்லும்போது நான் வேறு தனியாக சொல்லணுமாலே. அன்லிமிட்டெட் கடிலே..

20 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இசை அமைப்பாளரை பின்னி பெடல் எடுத்துட்டீங்க போல இருக்கு. ஒரு ஒஸ்தி படம் கொடுத்தா, ஒரு "ஒஸ்தி" மாதிரி படம் கொடுக்கணும்னு ஏதும் வேண்டுதலா இருக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

மாஸ்னா என்னாலே, கொசு கடிக்காம இருக்க தடவுவோமே அந்த ஓடோமாஸாலே..//

செமையா கடியை வாங்கி கட்டிட்டு வந்தேன்னு சொல்லுங்க ஹி ஹி ஹி ஹி....!

MANO நாஞ்சில் மனோ said...

சிபி'யும் அவன் பதிவுல விமர்சனம் போட்டு கிழி கிழின்னு கிழிச்சிருக்கான்..

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
தூள் கிளப்பி விட்டீர்கள்.
வாழ்த்துகள்.

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

//இசையமைப்பாளர் தமன், கீபோர்டை ஆன் செய்துவிட்டு அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் ஸ்டாப்பாக டிஜிட்டல் கதறல்கள், காதில் இன்னமும் ஙொய்ங்.// piramaatham..

manuneedhi said...

simbu will never correct himself...because even in 2011 his father speaks about his MA. history etc..simbu wants to challenge dhanush for the known reasons but unfortunately it boomerangs.....

shyjithkp said...

super vimarsanam anna..:)

magudapathy said...

super vimarasanam anna :)

Anonymous said...

சந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம்

Anonymous said...

சந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம்

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர். நீங்களும் தான்... ahh ahh

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

sweet said...

பயமா இருந்த கமெண்ட் பப்ளிஷ் பண்ண வேண்டாம்

guru said...

நேற்று ஒஸ்தி திரைக்காவியம் பார்த்தேன்... மெய் சிலிர்த்தேன்....
காட்சிக்கு காட்சி அருமை... என் வண்டி வேறு எடுக்க முடியாமல் எல்லா வண்டிகளுக்கும் நடுவில் பார்க் செய்து விட்டேன்....
அதனால் ரசித்து ரசித்து படம் பார்த்தேன்... என் நண்பன் சந்தீப் சில காட்சிகளில் கண் கலங்கி விட்டான்.. யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் போல.. திருநெல்வேலி பாசைக்கு எல்லா வசனம் முடியும்போது "லே" மட்டும் போட்டு பேசுன போதும்னு எவன்லே சொன்னது... இருந்தாலும் வசனம் ஒவ்வொன்றும் நம் மூளையை பதம் பார்க்கிறது... சந்தானம் பற்றி சொல்லி ஆக வேண்டும்.. வருவோர் போவோர் எல்லோரையும் கலாய்ப்பது மட்டும் அவரின் தலையா பணி... பழைய கவுண்டமணி திரைப்படங்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது நல்லது.. பிறகு சிம்பு , நீங்கள் மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பாருங்கள்.. அந்த கதைக்கு மீசை தேவை இல்லை... ஆனால் இந்த படத்தில் கதையும் இல்லை மீசையும் இல்லை உங்களுக்கு... நாசர், ரேவதி,கணேஷ், ஜித்தன் ரமேஷ், நிழல்கள் ரவி, அப்புறம் சரண்யா நிறைய பேர் இருக்கிறார்கள்... கதை மட்டும் இல்லை... நிறைய வில்லன்கள் படத்தில் இயக்குனரையும் சேர்த்து... லாஜிக் என்றால் என்ன என்பதை மறந்தே விட்டார் போல.. கடைசி கிளைமாக்சில் வில்லன் கண்ணாடியை வைத்து சிம்புவை ஏமாற்றுவது ரசிகர்களை உச் கொட்டவைகிறது... அதைவிட பட்டன்கள் தெறிக்க சட்டை தானாக கழன்று சிம்பு தன் சிக்ஸ் பேக் உடம்பை முறுக்கி நிர்ப்பார் பாருங்கள்.. காணக்கண்கோடி வேண்டும்... மசாலா படம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் இந்த மசாலா ஊசிப்போனது என்பதை படம் பார்த்தால் புரியும்... இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்க்கு வந்து தொலைக்காட்சியில் இளையராஜாவின் பாடல் கேட்ட பிறகே உறக்கம் வந்தது...

ஸ்ரீனிவாச குரு

காமராஜ் said...

விமர்சனம் நல்லாருக்கே.

இதேபோலத்தான் மயக்கம் என்ன பார்த்த்துவிட்டு வந்த அறைத்தோழன் சொன்னான்.பர்ஸ்ட் ஆஃப்லயே தியேட்டர்ல எல்லோரும் மயங்கிவிழுந்துவிட்டார்களாம்.

அது சரி என்னதோழர் இப்பல்லாம் மதுரைக்கதைகள் புளித்துவிட்டதா? இல்லை அருவா ஸ்டாகில்லியா.

Anonymous said...

காசு வாங்கிட்டு ஒட்டு போடாதது காசு கொடுக்கறதா விட தப்பாம் ( படத்தில் சிம்பு சொல்வது )
கலைஞர் சிம்பு குடும்பத்துக்கு ரொம்ப கொடுத்துட்டார் போல அதுதான் படத்துல சீன் போடுறார்

viji said...

காசு வாங்கிட்டு ஒட்டு போடாதது காசு கொடுக்கறதா விட தப்பாம் ( படத்தில் சிம்பு சொல்வது )
கலைஞர் சிம்பு குடும்பத்துக்கு ரொம்ப கொடுத்துட்டார் போல அதுதான் படத்துல சீன் போடுறார்

ISR Selvakumar said...

விஜய்,
ஒஸ்தி போன்ற மசாலா படத்தின் வசனங்களுக்கு அர்த்தம் தேடுவது வீண் வேலை.

vijaykumar said...

TR , STR evanga rendu perum vaaya kuracha podhum...yesterday i saw their interview in sun tv ....TR yen epdi irukane therila....therinju seyrana , theriyama seyrana !!
"evan da una pethan pethan pethan , kaila kedacha sethan sethan"

my profile.. said...

Hahahaha :D Enakum Pidikkala ...
Rohini theater Le Padam paarthathai tavirthu irunthaal Konjam Vimarsanathil veri kurainthu irukkum..
Nalla Theater. But Clean ah ve irukkathu.. Useless fellows..