ஜெயலலிதா நேர்மையானவராக இருந்திருந்தால், இது வரை போராடியவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு ஒரே ஒரு வார்த்தையாவது பாராட்டிச் சொல்லியிருப்பார். ஆனால் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதையும், கருணாநிதியை சீண்டுவதையும் ஒரு அறிக்கையாக்கி அதை சட்டசபையிலும் வாசித்துவிட்டார்.
கருணாநிதியும் இதையேதான் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களையும், போராடியவர்களையும் மறந்துவிட்டு, ஜெயலலிதாவுக்கு கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்ற கடுப்பை வெளிப்படுத்துவதையே ஒரு அறிக்கையாக்கி வெளியிட்டுவிட்டார்.
தமிழக மக்களாகிய நாமும் இவர்களின் சண்டைக்குள் ஒன்றிப் போய், யார் பெரியவர் உடன் பிறப்பா, ரத்தத்தின் ரத்தமா என்று தெருச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த விஷயத்தை இந்த அளவுக்கு தரமிறக்கி விவாதப் பொருளாக்கியதில் ஒன்று மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஜெயலலி்தா, கருணாநிதி மற்றும் நாம் உட்பட யாருக்கும் பொறுப்போ, கண்ணியமோ, வெட்கமோ இல்லை. எல்லோரும் சுயம் மறந்து அரசியல்வாதிகளாகிவிட்டோம்.

No comments:
Post a Comment