நீங்கள் தயாரிக்கும் பொருள் உலகிலேயே சிறப்பானதாக இருக்கலாம்.
ஆனால் அதனை விற்பனை செய்ய அதன் தரம் மட்டுமே போதாது.
இதனை புரிந்து கொள்ள சந்தையை புரிந்து கொள்ள வேண்டும். விலையா? தரமா? எது வாடிக்கையாளரை ஈர்க்கிறது என்பதை உணர வேண்டும். ஒரு வியாபாரிக்கு பொருந்தும் சந்தை குணங்கள் வேறொருவருக்கு பொருந்தாது என்பதை அறிய வேண்டும். ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்தும் ஒருவர், டீ குடிக்க ஒரு சாதாரண சந்து முனை கடைக்கு வருவார். அது ஏன் என்பதை ஆராய வேண்டும். வியாபாரம் துவங்கும் முன் இப்படி பல காரணிகளையும், நுணுக்கங்களையும் அறிந்த பின்தான் தொழில் துவங்க வேண்டும்.
குறிப்பாக startup எனப்படும் புதுத்தொழில் தொடங்குபவர்கள் வெற்றி அடைய வேண்டுமென்றால் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தொழிலைத் துவங்கும் முன் பல நூறு கேள்விகளுக்கு நம்மிடம் விடை இருக்க வேண்டும்.
https://stratup.ai/en என்ற இந்த AI தளம், நீங்கள் துவங்கப்போகும் தொழில் பற்றி உங்களை கேள்விகளால் துளைத்தெடுத்துவிடும். உங்கள் பதில்களைக் கொண்டு, உங்களுக்கு உங்கள் தொழில் தோல்வியா வெற்றியா என்று ஆலோசனை தரும். முதலீடும், நல்ல பொருளும் இருந்தால், அவை மட்டுமே தொழில் தொடங்க போதாது என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
பி.கு :
இது போல பல ஏ.ஐ தளங்களும், செயலிகளும் இருக்கின்றன. தினம் ஒரு செயலியை அறிமுகம் செய்வதன் மூலம் நீங்களே அதே போன்ற செயலிகளை தேடி அலசி, அரசி ஆராய்ந்து கொள்வீர்கள் என்று நம்பகிறேன்.
- ISR Selvakumar
No comments:
Post a Comment