எம்.எஸ்.வி இரசிகர்களுக்கு இளையராஜாவை பிடிப்பதில்லை. நன்றாகக் கவனிக்கவும் இளையராஜாவைத்தான் பிடிப்பதில்லை, ஆனால் இளையராஜாவின் பாடல்களைப் பிடிக்கும். அதே போல இளையராஜா இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானைப் பிடிப்பதில்லை, ஆனால் ஏ.ஆர்.இரகுமான் பாடல்களைப் பிடிக்கும்.
ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
அதே போல கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"
ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
உளவியல் ரீதியாக இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்பதால், இளையராஜாவையே பிடித்துப்போய்விடுவதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் இளையராஜாவை விட சினிமா மார்க்கெட்டில் ஏ.ஆர்.இரகுமான் அதிகம் எடுபடுகிறார் என்றதும் ஏன் எனக்கு ஏ.ஆர்.இரகுமானையே பிடிக்காமல் போய்விடுகிறது? முன்பு எம்.எஸ்.வியின் இரசிகர்கள் இளையராஜாவின் மேல் இப்படி ஒரு வெறுப்பு கொண்டிருந்தார்கள். இன்று இளையராஜாவின் இரசிகர்கள் ஏ.ஆர்.இரகுமான் மேல் அதே போல ஒரு வெறுப்பு வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் சரோஜா பட ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர்.இரகுமான்தான் சிறப்பு விருந்தினர். ஆனால் அதை ஒரு பெரிய அதிசயம் போல பரபரப்பாக்கினார்கள். காரணம் ஏ.ஆர்.இரகுமான் மற்றும் இளையராஜா இரசிகர்கள். யுவனை, ஒரு இசை அமைப்பாளராக மட்டும் பார்க்காமல், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமானுக்கு இளையராஜாவின் சார்பில் ஒரு போட்டியாக சில இரசிகர்கள் வரித்திருக்கிறார்கள். அதுதான் அந்த பரபரப்பிற்கு காரணம். முன்பு ஒரு முறை ஏ.ஆர்.இரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் முதன் முதலாக சந்தித்தபோதும், இதே பரபரப்பு நேர்ந்தது. அந்த மேடைக் காரணம் எனக்கு நினைவில்லை, ஆனால் குமுதம் போன்ற பத்திரிகைகள் அந்த மேடையில் ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவிற்கு பரிசளித்த மோதிரத்திற்கு ஏதேதோ காரணம் கற்பிக்க முயன்ற அபத்தங்கள் ஞாபகம் இருக்கிறது. 80களில் 'ஓரம் போ ருக்குமணி வண்டி வருது' பாட்டிற்கு இளையராஜா அழைத்து, எம்.எஸ்.வி பாட மறுத்த போதும் இதே போல சலசலப்புகள் ஏற்பட்டன. மூச்சு விடக் கூட நேரமின்றி இளையராஜா பிஸியாக இருந்த கால கட்டத்தில், ஏதோ ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி அவருக்கு உதவி செய்ய நேர்ந்ததாக, இன்று வரை ஒரு உறுதி செய்யப்படாத ஒரு தகவலைக் கேள்விப்பட்டு, எம்.எஸ்.வியின் இரசிகர் ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவமும் நடந்தது.
தற்போது விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பிடிக்காதவர்களில் கணிசமான பேர், ரஜினி இரசிகர்கள்தான். காரணம், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவை முந்தியது போல, ரஜினியை விஜயகாந்த் முந்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்தவர்களை வேறொருவர் முந்திவிட்டதாக நினைக்கும் போது, அவர் மேல் தன்னையே அறியாமல் ஒரு வெறுப்பு வந்து அப்பிக் கொள்கிறது.
ஏ.ஆர்.இரகுமானை விடுங்கள், வணிக ரீதியாக இளையராஜாவை விட அவருடைய இளைய மகன் யுவனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால் அவர் மேல் இளையராஜா இரசிகர்களுக்கு கோபமில்லை. ஏனென்றால் இளையராஜாவின் மேலிருக்கும் அசாத்திய இரசிப்பத் தன்மை காரணமாக, யுவனை சங்கர் ராஜாவையே இன்னொரு இளையராஜாவின் ஹிட் பாடலாகத்தான் பார்க்கிறார்கள். அதாவது ஏ.ஆர்.இரகுமானுக்கு இணையாக மார்க்கெட்டில் போட்டி போடக் கூடிய இன்னொரு பாடலாகப் பார்க்கிறார்கள்.
அதே போல ஏ.ஆர்.இரகுமான் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் அணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் எம்.எஸ்.வியின் இரசிகர்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, வணிக ரீதியாக எம்.எஸ்.வியை முந்திய இளையராஜாவை, வெல்ல வந்தவர் ஏ.ஆர்.இரகுமான்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜனி-கமல் இரசிகர்கள் அனைவரும் இது போல இரசிப்புத் தன்மையைத் தாண்டிய விருப்பு வெறுப்புகளை உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ்.வி - இளையராஜா - ஏ.ஆர். இரகுமான் இரசிகர்களும் இருக்கிறார்கள்.
சொல்லப் போனால் நானும் அந்த இரசிகர்களில் ஒருவன்.
16 comments:
me too...
Me the second. I accept your article.
நல்ல அலசல். பள்ளியில் படிக்கும் போது மெல்லிசை மன்னர் ஃபீல்டில் இல்லை என்றாலும்.... இளையராஜவை விட அவரையே பிடிக்கும். ஈற் பாட்டுகள் பிடிக்கும். ஆனால் IR இல்லை. அப்பவே சொல்வேன்.. அடுத்து ஆள் வருவார்னு. ஆகையால ஆற்ற் வந்தப்போ ஆதரவு தானா குடுதாச்சு. வழக்கமன MSV-IR சண்டை மாறி...ARR-IR சண்டை :) ஆனா இந்த வாட்டி வெற்றி என் பக்கம். ஆனல்.... இவர்கள் மூவர் இசையும் பிடிக்கும். வஞ்சனை இன்றி ரசிப்பேன். யுவன் சுமார் தான்.
\\கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"//
Never. I dont like any of his action in politics and personal.
ஜி.ராகவன்,
உங்களைப் போல வஞ்சனை இன்றி, சார்பு இன்றி பாடலை இரசிப்பவர்கள் மிகவும் குறைவு!
யெஸ்...யுவன் சுமார்தான். அதிக படங்கள் செய்வதைக் குறைத்து, தனிக் கவனம் செலுத்தி செய்தால், அடுத்த கட்டம் நகரக்கூடிய potential யுவனுக்கு உண்டு.
ரகுமானின் இசைவிரும்பி என்றாலும் இளையராஜாவின் இசையும் பிடிக்கும். சமீபத்தில் ரகுமானை சாடும் சில இளையராஜா அபிமானிகளின் இடுகைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கடுப்பாத்தான் இருந்தது.
ராஜாவின் இசையையும் ரகுமானின் இசையையும் ஒப்பிடவே இயலாது. இரண்டும் வெவ்வேறு அமைப்பு... அடுத்த ரகுமான் படத்துக்காக வெயிட்டிங் :))
ஜி,
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான், மூவருமே வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு விதமான பாணியை கையாண்டு வெற்றி கண்டவர்கள்.
நீங்கள் சொன்னது மிகச் சரி, மூவரில் யாருடையது சிறந்த இசை என்று அவர்களை ஒப்பிடவே முடியாது, ஒப்பிடவும் கூடாது.
hai visit may blog.
நான் “தரம்” உள்ளவைகளை வாங்குவேன்/ரசிப்பேன்.”திறந்த மனம்”
உள்ளவன். சும்மா “செல்லம்” கொஞ்ச
மாட்டேன்.நீங்கள்(உளவியில் ரீதியில்) சொல்பவர்கள்”Fanatic" and "Lunatic" ரசிப்புத் தன்மை இல்லதவர்கள். வாடகை கார் டிரைவர்
”வைடிங்கில்”கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாயை பிளந்து தூங்கிக் கொண்டு பாட்டு கேட்பதற்கும் நான் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு.
உண்மை நண்பரே...
எனக்கு மற்றவர்களின் இசையை விட ராஜாவின் இசை அதிகம் பிடிக்கும்.. ஏனென்று தெரியவில்லை. அதற்கடுத்து 'மெல்லிசை மன்னரும்', 'இசைப்புயலும்'. கல்லூரியில், நான் ராஜாவின் விசிறி என்றபோது, ஏதோ வயதானவனை பார்ப்பது போல பார்த்தனர். அதன் பின் கல்லூரி முடியும் வரை அடிக்கடி வாக்குவாதம் நடக்கும். இப்போதோ யோசித்து பார்த்தால், வெட்கமாக உள்ளது. அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணரும் விதம் வேறு வேறு. ஒவ்வொரு இசையமைப்பாளரும் இசையை ஒவ்வொரு பரிமாணத்தில் தருகின்றனர். நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ. நமக்கு பிடிப்பதை எடுத்துகொண்டு, மற்றதை விட்டு விட வேண்டும். நமக்கு அவர்களின் இசைதான் வேண்டும்.
இவர்களை அவரவர்களது தீவிர ரசிகர்கள் 'கடவுள்' என்று சொல்லுவதை கேட்கும்போதுதான் எரிச்சல் வரும். அவர்களும் மனிதர்கள்தான். நம்மிடம் இலாத இசைத்திறமை (மட்டும்?) அவர்களிடம் குவிந்துள்ளது. அதனால் அவர்கள் கடவுள் ஆகிவிட மாட்டார்கள். இது என்னுடைய தாழ்மையான கருத்து.
எனக்கு ரஹ்மானிடம் பிடித்தது அவரின் அதிரடி பாடல்கள்தான். அது மட்டுமன்றி அவரின் படத்தேர்வுகள் அருமையாக இருக்கும். அவர் இசையமைத்த படமென்றால், பாடல்கள் மட்டுமின்றி, படமும் நன்றாக இருக்கும். (உதயா, அழகிய தமிழ்மகன், சக்கரக்கட்டி போன்றவை விதிவிலக்கு). இதையே யுவன் தொடர்ந்தால், (சரியான இயக்குனர். அமீர், வெங்கட் பிரபு, செல்வா ராகவன், விஷ்ணு வர்தன், வசந்த் போன்றோர்) வெற்றிகள் தொடருமென நினைக்கிறேன். Harris ஜெயராஜ் அதை சரியாக செய்கிறார். ராஜாவிற்கு கூட 'நான் கடவுள்' படத்தைத்தான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். 'தனம்', 'உளியின் ஓசை' எல்லாம் ராஜாவிற்கு எண்ணூற்றுப் பத்தோடு பதினொன்று.
அரவிந்த்,
என்னை 'உண்மை நண்பரே' என்று அழைத்ததற்கு நன்றி!
உங்கள் பின்னூட்டமே ஒரு பதிவு போலத்தான் இருக்கிறது.
யுவனைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்வது சரி. படங்களின் எண்ணிக்கையை குறைத்து, தரமான ஸ்கிரிப்டுகளைப் பார்த்து இசை அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர் அடுத்த கட்டம் பயணிப்பார்.
ஜி அவர்களே, 'யுவராஜ்' என்ற இந்தி படத்தின் பாடல்கள் கேட்டு விட்டீர்களா? - மஸ்தம் பாடல் கலக்கலா இருக்கு
Dear Mr. Selva,
On an overall, yours is a very commendable intricate observation! At the same time, I want to tell you that not all Ilaiyaraaja fans hate Rahman as a person. Also, not all of them like Rahman's music, as you have hypothesised. But, I do agree that extremists and fanatics are everywhere. Nevertheless, it is easily possible for Ilaiyaraaja's fans to go deep into analyzing His music rather than travelling laterally comparing Ilaiyaraaja's compositions with others'.
However, there is one point I want to make: Ilaiyaraaja's fans do not accept other music directors, but the reason for that is not as simple as you have mentioned. For musically trained ears and minds, Ilaiyaraaja's music offers a variety of substrates depending on the level of music knowledge the individual listener has. It is not just Rahman; nobody else can match Ilaiyaraaja's command over His compositions' influence on the learned perceivers. I can prove this with lots of examples but that would be out of the scope of your blog.
I am not trying to negate your claims altogether, but I am only humbly stating that the DMK-ADMK and Rajinikanth-Vijayakanth examples that you wrote about cannot be held in the same plane as your Ilaiyaraaja-Rahman example. I hope I am not misunderstood.
Yours Always Musically,
Vijay.
Dr Vijay,
Thanks for your visit. Your Language is simple and very impressive.
//I want to tell you that not all Ilaiyaraaja fans hate Rahman as a person. Also, not all of them like Rahman's music, as you have hypothesised.//
Yes you are correct, and 'hypothesised' is the apt word.
// For musically trained ears and minds, Ilaiyaraaja's music offers a variety of substrates depending on the level of music knowledge the individual listener has.//
There is no second thought about this Dr.Vijay.
//It is not just Rahman; nobody else can match Ilaiyaraaja's command over His compositions' influence on the learned perceivers. I can prove this with lots of examples but that would be out of the scope of your blog.//
And finally... these words reflect the content my blog.
////It is not just Rahman; nobody else can match Ilaiyaraaja's command over His compositions' influence on the learned perceivers. I can prove this with lots of examples but that would be out of the scope of your blog.//
And finally... these words reflect the content my blog.//
தெளிவாக கூறிவிட்டீர்கள் :) :)
Hi Selvakumar -
My humble opinion that 99% of the the hard core Illayaraja fans do not like any other music other than Raaja's. I really really believe that they have nothing against A.R.R. or anyone personally.
However, when provoked they get into arguments to be misunderstood always.
If you are in the age group of 20s, our peer expects you to listen to A.R. and considers you outdated if you are still listening to MSV or IR.
The power of Illayaraja lies in the fact that he has built such a forte that we, hard core fans, cannot go out of it. It is his mastery over music.
Hail Raaja!
Post a Comment