இது சில அல்லது பல இலங்கைத் தமிழர்களின் குற்றச்சாட்டு.
மின்வெட்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே கருணாநிதி இலங்கைப் பிரச்சனையை கையிலெடுத்தார்!
இது சில அல்லது பல தமிழகத் தமிழர்களின் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு நியாயானவை?
எம்.பி.க்கள் ராஜினாமாவிற்கு 28ந் தேதி கெடு கொடுத்திருந்தீரகளே. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிராணப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறபட்ட கருத்துகள் இருப்பதால்அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
பிரணாப் முகர்ஜி சென்னை வந்து சென்றபின், வெளியான கலைஞர் பேட்டி இது. இதிலிருந்து ஒரு விஷயத்தை யூகிக்க முடிகிறது. கருணாநிதி அறிவித்தபடி 28ம் தேதி தி.மு.க எம்பிக்கள் ராஜினாமா செய்தாலும், காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள். கருணாநிதியோ,முகர்ஜியோ இதை பத்திரிகையாளர்களிடம் தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், கருணாநிதியின் சூசகமான பதில் இதை சொல்லாமல் சொல்கிறது. இரண்டு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க மற்றும் பா.ம.க எம.பிக்களின் நிலை என்னவென்று இன்னும் அக் கட்சித் தலைவர்கள் முடிவாகச் சொல்லவில்லை.
ஏற்கனவே தங்கபாலு என்கிற காங்கிரஸ் பொம்மை, டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு செய்வோம் என்று பின்வாங்கிவிட்டது. ராமதாஸ் 28ம் தேதி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று அப்போதே சொல்லிவிட்டார். இன்னமும் அ.தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து மாறாத ம.தி.மு.க என்ன செய்யும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. கம்யூனிஸ்டுகள் இந்த வினாடி வரை ராஜினாமா பற்றி வாயைத் திறக்கவேயில்லை.
இந்த நிலையில் தி.மு.க மட்டும் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மிகப் பெரிய அரசியல் முட்டாள்தனமாக இருக்கும்.
தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.
கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசியில் இதைத்தான் பேசியிருப்பார்கள். பிரணாப் முகர்ஜி நேரில் வந்து அதை நேரில் வந்து கருணாநிதியிடம் உறுதி படுத்திவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அப்படியென்றால் இலங்கைப் பிரச்சனை ?
காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படாத ஒரு தி.மு.க மெஜாரிட்டி அரசு அமைய வேண்டும்.
இப்போது போலவே மத்திய அரசின் குடுமி, தமிழக அரசின் கையில் இருக்கவேண்டும்.
இருந்தால் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மேலும் ஸ்திரமான முடிவுகள் எடுக்க முடியும்.
இப்போதைக்கு . . .
- இராணுவ உதவிகளை செய்ய மாட்டோம் என இந்தியா உறுதி.
- ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைத் தூதர் உறுதி
- 800 டன் நிவாரண பொருட்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க உறுதி
- நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு முயற்சி
- தமிழக மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்த மாட்டோமென இலங்கை உறுதி.
இன்றைய தி.மு.கவின் அரசியல் நிலையை மனதில் கொண்டு பார்த்தால், தற்போதைக்கு கருணாநிதியால் இந்த அளவுக்குத்தான் முடியும் எனத் தோன்றுகிறது.
தி.மு.க எம்.பிக்களையும் இழந்து, தமிழ்நாட்டில் ஆட்சியையும் இழந்தபின் இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வழியுண்டு என்றால், அதனை தாராளமாக கருணாநிதிக்கு சிபாரிசு செய்யலாம், இல்லையென்றால் முதலிரண்டு குற்றச் சாட்டுகளையும் தொடரலாம்.
14 comments:
//தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.//
அரசியலில் ஈடுபடாத நமக்கே இது புரிகின்றபோது, 60 வருடங்களுக்கு மேலாக இருப்பவர்க்கு, இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரியாதா என்ன? பின் ஏன் ராஜினாமா என்று குதிக்க வேண்டும். நிச்சயமாக காங்கிரஸ் ராஜினாமாசெய்யாது என்பது உறுதியான விஷயம். 1+1 = 2 என்பது நம்மை விட அவருக்கு நன்றாகத்தெரியும், இருந்தாலும் இதெல்லாம் ஒரு பாவனை, அவ்வளவுதான்.
//காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படாத ஒரு தி.மு.க மெஜாரிட்டி அரசு அமைய வேண்டும்.//
அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா.. இது எல்லாருக்கும் தெரியும். இப்ப இருக்கின்ற நிலைமையிலே இதைவிட நன்றாகச் செய்திருக்க முடியும். மற்றவங்க ஆதரவு தேவை அப்படின்னு இருக்கும் போதே, இவ்வளவு படம் காட்டுகின்றார்களே, மெஜாரிட்டி இருந்தால் என்ன ஆகும்?
தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.????
அது சரி மத்திய அரசை கவிழ்த்து தான் என்ன பிரயோசனம்? இன்னும் நாலஞ்சு மாதத்துடன் ரெஸ்ட் எடுக்கபோகிறவர்களை கவிழ்த்து பலனில்லை. என்னை பொறுத்தவரையில் ஆளும் திமுக இந்த பிரச்சனையை கையாண்ட காலகட்டம் தவறானது. அதாவது ஓராண்டுக்கு முன்னதாகவே இந்த அஸ்திரம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கருணாநிதியின் தவறான அரசியல் காரணமாக தமிழக அரசு, பூரண ஆட்சி முடியும் முன்பே கவிழும் என்கிறார்கள். நான் சொல்வது சரிதானே...
ராகவன்,
//அரசியலில் ஈடுபடாத நமக்கே இது புரிகின்றபோது, 60 வருடங்களுக்கு மேலாக இருப்பவர்க்கு, இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரியாதா என்ன? //
உண்மை. ஆனால் யார் யார் எவ்வளவு தூரம் கூட வருகிறார்கள், எந்த அளவு கோலுடன் வருகிறார்கள் என்பதைப் பார்க்க இந்த ராஜினாமா அஸ்திரம் உதவியிருக்கிறது.
உதாரணத்திற்கு தமிழக காங்கிரஸ் - முதலில் ஆதரவு தந்துவிட்டு பின்னர் பல்டி அடித்துவிட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த அளவுக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தந்ததே மிகப் பெரிய ஆச்சரியம்.
//இப்ப இருக்கின்ற நிலைமையிலே இதைவிட நன்றாகச் செய்திருக்க முடியும்.//
நன்றாக என்பதை, கொஞ்சம் விசாலமாக விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த விஷயத்தில் 'உடனே நடந்தாக வேண்டும்' என்று உங்களைப் போலவே எனக்கும் தோன்றியதே தவிர, எதை உடனே எதிர்பார்த்தேன் என்பது குழப்பமாகவே இருக்கிறது. ஒரு அரசியல் தெளிவுக்காக உங்களைப் போன்ற கருணாநிதியை விமர்சிக்கும் நண்பர்களின் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். உடனே அல்லது இன்னும் நீங்கள் கருணாநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன?
தன்னை நம்பாத (காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.க) நண்பர்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு செய்ய முடிந்ததற்கே நான் ஆச்சரியப்படுகிறேன்.
தமிழ்சினிமா,
என்ன விநோதம் பாருங்கள், உங்கள் பெயரால்தான் இன்றைய அரசியல் சூழ்நிலை சூடுபிடித்தது.
//என்னை பொறுத்தவரையில் ஆளும் திமுக இந்த பிரச்சனையை கையாண்ட காலகட்டம் தவறானது. அதாவது ஓராண்டுக்கு முன்னதாகவே இந்த அஸ்திரம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். //
இப்போது யோசித்தால் அப்படித் தோன்றலாம். ஆனால் ஓராண்டுக்கு முன்னால் இந்த அளவிற்கு நெருக்கடி இல்லை. ஜெயலலிதா கூட (போலிக்) குரல் கொடுக்கிற அளவுக்கு மோசமான நிலை இல்லை. எதிரிகள் எல்லாம் நண்பர்களாக ஒரே அணியில் நிற்கிற பிரச்சனையாக வடிவெடுத்ததும் கருணாநிதி களத்தில் முந்திக் கொண்டுவிட்டார்.
//கருணாநிதியின் தவறான அரசியல் காரணமாக தமிழக அரசு, பூரண ஆட்சி முடியும் முன்பே கவிழும் என்கிறார்கள். நான் சொல்வது சரிதானே...//
சரியான சூழல் ஏற்பட்டால் கருணாநிதியே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார். ஏனென்றால் மைனாரிட்டி என்பது தொடர் இம்சை. இலங்கை பிரச்சனையில் அப்படி ஒரு சூழ்நிலை வருமா என வெள்ளோட்டம் பார்த்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கிருக்கிறது.
எத்தனை ஆண்டு காலம் ஆண்டாலும்.. மிஞ்சி இருப்பது அவரது துணைவி மனைவி மற்றும் வாரிசுகளின் அசையும் அசையாத சொத்துக்கள் மட்டும்தான்.. தமிழன் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டே இருக்கிறான்..
(நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற தத்துவம் பொது மக்களுக்கு மட்டும் தானா?? )
எல்லாம் சரி.. இந்த புகை படத்தில் தமிழனுக்கு இனி சாவே கிடையாது என்பது போல் அனைவரும் புன்னகையோடு போஸ் தரும் மர்மம் என்ன??
தெரிந்தது தான்.
செல்வா,
நான் உங்களை ஒரு நடுநிலை பதிவர் என்றே இது நாள் வரை நம்பியிருந்தேன். பாவம், உங்களை போன்ற பதிவர்கள் கருணாநிதி எதை செய்தாலும் அதை நியாயப்படுத்த படும் பாடு நினைக்கவே பாவமாக இருக்கிறது. கருணாநிதியின் அரசியலில் பதவி ஒன்றை தவிர அவருக்கு வேறு எந்த கொள்கையும் என்றுமே இருந்ததில்லை. அதற்கு உங்களை போன்ற போலி கொள்கை ஆதரவாளர்கள் இருக்கும் வரை அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எந்த பிரச்னையும் வராது.
தற்போது நடந்ததை அசைபோடுகையில், இப்போது பொறுப்பில் உள்ளவர் என்கிற முறையில் கருணாநிதியின் இந்த நிலை குறித்து எழுதினால் 'நான் கருணாநிதியின் ஆதரவாளன்' என்பது போன்ற சாயல் ஏற்படும் என்று தெரிந்தே இந்த வலைப்பூவை எழுதினேன்.
ராஜா,
கருணாநிதி என்னதான் செய்திருக்கவேண்டும் என்று யாராவது பாயிண்ட் பாயிண்டாக எழுதினால் நன்றாக இருக்கும். என்னுடைய அரசியல் தெளிவுக்காக இதைக் கேட்கிறேன்.
P.M.K. "Engalukkum Viduthalai pulihalukkum neradi thodarbhu kidayathu" --- appa maraimuha thodarbhu unda?
D.M.K. --- karunanithin Mahan stalin, azhakiri, Mahal Kanimozhi, peathi kayal vizhi. ivvalavu thana allathu arasiyal varisu? ungal kudumbathil innum nirayaber arasiyalil varamal irukkirarhalae avarkalai 2011 kul atchi, athiharathirku konduvanthu vidungal.
Makkalin nalanai patri karunanithi adikkadi pesuvathu avarudiya sontha makkalin nalanai patri athai sariyaha neengal purinthu kollavillai endral pavam avar ennathan seivar intha 90 vayathil. (Note. retired age 58 for Govt.employee)more than 32 years after retiring age.
Karunanithikku pathavi asai kidayathu.
Jeyalalitha Avarukku thozhi, Thozhi, enpathaithavira sothu, serkkavea neram sariyaha irukkirathu.
Ondrai therinthu kollungal. Jeyalalitha Ungalukku Sontham endru Yarumea illathapothu etharkku ethanai sothu?.
M.D.M.K. - ippadi nalavathu idathai pidithathai thavira veru ondrum uruppadiayai seiyyavillai
aaanngg.... maranthu vittaen ivar ondru uruppadiayaha seithar vadiveluvai arasiyalukk varavaithullar.
Intha arasiyal vyathikalai nambi thamilaha makkalea muttal halahatheerhal
ungal velaiayai parungal athu Ondrea ungalukku unavidum.
Intha arasiyal naikalalla.
Mr karunanithi did just analysis.one stone 2 mango!as eelam tamils actualy they got advantages even upto this level!!
Karunanithi need majority!
if he has honest to solve the probleam after election only he can do,but not now!I accept Mr.Selvakumar's comments!
Mr.karunanithi can't do anything as blind.just he checked the power of tamil suports,if continues like this situation upto election sure he can get majority!
As my opinion everything depend on after the Election!!!
If karinanithi get majority in central government & tamilnadu government!after that if he won't do anything good for eelamtamils then we can blame on him!
WAIT AND SEE!!!
என்னுடைய கருத்துக்களை ஒப்புக்கொண்டிருக்கும் 'அனானி' நண்பருக்கு நன்றி!
மீண்டும் சொல்கிறேன் . . .
முதலில் 'இருத்தல்'
அடுத்ததுதான் 'போராடுதல்'
இதுதான் கருணாநிதியின் நிலை. தற்போது தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அது அவசியமும் கூட.
ஈழப் பிரச்சனையை முன்னிட்டு ஆட்சியை இழப்பதால் கருணாநிதிக்கும் இலாபமில்லை, ஈழ ஆதரவாளர்களுக்கும் இலாபமில்லை.
கருணாநிதி இடத்தில் ஜெ இருந்திருந்தால், யாரும் ஆதரவு கோரி வாய் திறக்க முடியாது என்பது உண்மை.
ஈழப் பிரச்சனை 'ஓட்டு பெற்றுத் தரும்' பிரச்சனையும் அல்ல. அதனால் கருணாநிதி இதற்கு மேல் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
Post a Comment