அன்புடையீர்,
எங்கள் அன்பு கேப்டன் விஜயகாந்த்தை ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மூன்று நாட்களாக காணவில்லை.
முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகக் கூடிய வயது. பார்ப்பதற்கு கருப்பாக எம்.ஜி.ஆர் போலவே இருப்பார். நான்தான் கேப்டன் கேப்டன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்.
வடிவேலு வீட்டில் கல்லெறிந்துவிட்டு, சன் டிவியில் லைவ் பேட்டியில் கருணாநதியை திட்டியபோது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இளைஞர் மாநாட்டிற்காக சென்னையில் ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒரு பேனரில் இரண்டு கையையும் விரித்தபடி சிரித்து போஸ் கொடுத்திருந்தாரே அதிலாவது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இலங்கைப் பிரச்சனையைப் பற்றி 'இவரைத் தவிர வேறு யாரும் பேசியதில்லை' என்று அவருடைய மனைவியும், தே.மு.தி.கவின் அண்ணியும் கொடுத்த சர்டிபிகேட் ஒன்று அவர் கையில் உள்ளது.
கடைசியாக ஆனந்தவிகடன் நிருபர்கள் மற்றும் மச்சினன் சுதிஷிடன் கோயம்பேடு மார்கெட் பக்கத்தில் நின்றுகொண்டு அரிசிப் பிரச்சனையை ஏதோ ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்தார்.
ஆனால் இலங்கையில் பிரச்சனை ஆரம்பித்தவுடன், எங்கள் அன்பு கேப்டன், கிரிக்கெட் மேட்சில் டிரிங்ஸ் கொடுக்க வந்த சின்னப் பையனைப் போல திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்.
எப்போதுமே நான் தனியாகத் தான் நிற்பேன் என்று அலறிக்கொண்டிருப்பார். அதனால் நேற்று 60 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்த மனிதச் சங்கிலியைத் தாண்டி, 61வது கிலோ மீட்டரில் ஏதாவது ஒரு இடத்தில் தனியாக இருப்பார் என்று நிறைய டி.வி. கேமராக்கள் மற்றும் பத்திரிகை கேமராக்கள் உதவியுடன் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எங்கேயோ போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
அவரை யாராவது பார்த்தால், 2011ல் தேர்தல் முடியும் வரை, இந்திய எல்லைகளுக்கு அப்பால், யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கும்படி அன்புடன் வேண்டி, கெஞ்சி, கூத்தாடி கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் ஆசான் விஜயகாந்தை 2011 வரை ஒளித்து வைப்பவர்களுக்கு இலவச முதல்வர் பதவி உண்டு. அது எப்படி இலவசமாக கொடுக்க முடியும் என்று கேட்காதீர்கள், சொன்னால் கருணாநிதி அதை காப்பி அடித்து மீண்டும் முதல்வர் ஆகிவிடுவார் என்பதால் அதைச் சொல்ல மாட்டோம்.
இப்படிக்கு
இலங்கைத் தமிழர்கள் பற்றி கவலைப் படும் தமிழர்கள் (தெலுங்கர்கள் அல்ல)
9 comments:
ஹாய் செல்வா, உண்மையில் தற்போது தமிழ்நாட்டில் நடப்பது ஈழதமிழர் பிரச்சனை அல்ல. அரசியல் ஸ்டண்ட் அன்றி வேறல்ல. நண்பர், எதிரி என்றில்லாமல் பலரை சோலி பார்த்துக்கொண்டிரிக்கிறார் தாத்தா. உஷாரையா உஷாரு.. இன்று எது பேசினாலும் நாளை பேச ஆளிருக்க மாட்டோம்.... அது காப்டனானாலும் சரி... வை. கோ.வானாலும் சரி...
ஹாய் முருகேசன்,
ஸோ . . . கேப்டனின் உதார் அவ்வளவுதானா?
எதுவாக இருந்தாலும் களத்துல நிக்கணும் பிரதர். போய் ஒளிஞ்சுக்க கூடாது.
நாளைய முதல்வர் பெத்தராயுடு விஜயகாந்த்தே . . . எங்கே இருக்கீங்க? இன்னும் ரெண்டு நாள்ல தீபாவளி . . . உங்க பசங்களோட சேர்ந்து பட்டாசு கொளுத்தவாவது வெளியில வாங்க. இலங்கைப் பிரச்சனை பத்தி நீங்க எதுவும் பேச வேண்டாம்.
அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால கூச்சப்படாம வெளியில வந்து புஸ்வானம் கொளுத்துங்க. ஆனந்த விகடன் (கவர்)ஸ்டோரி, சன் டிவி லைவ் ஏற்பாடு பண்ணிடலாம்.
BLACK MGR PROBABLY HAS GONE AFTER BLACK JEYALALITHA.
Because of rain he has taken a few more pecks of whisky. So, mappula mallandhuttaru.
சொன்ன மாதிரி வாய்சொல் வீரரை காணவில்லை. அண்ணியார் அனுமதி கொடுக்கவில்லையோ என்னமோ?
சரியான பதிவு.....இந்த கேப்டனின் முகத்திரையை கிழிப்பது யார்? அவரை நம்பி ஒரு கூட்டம் அவர் பின்னால் செல்வதை என்ன சொல்வது?
திலீபன்,
இலங்கை பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது இராவணன்தான் என்று கண்டுபிடித்து இளைஞர் மாநாட்டில் அண்ணியார் சொன்னார்.
தற்போது பழைய இராமாயணம் வீடியோ கேசட்டுகளைப் போட்டு இலங்கைப் பிரச்சனைகளைப் பற்றி விஷயம் சேகரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?
அண்ணியார் துப்பறிந்து முடிந்ததும், கேப்டன் அதை சன் டி.வியில் வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்.
Dear All,
What happened to this Vijaykanth ? Just fooling around poor people and pretending to be an alternate source for CM, He is just a puppet in the hands of Banruti Ramachandran(retired politician) and Ms Premlatha groups.
On that day, he was engaged fully in drinks so he couldn;t attend the chain, BLACK SHEEP
இவங்கள் எல்லாம் அகதிகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். மு.க முடிந்தால் இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு நல்லது செய்யட்டும் பார்க்கலாம். அவர் மதுரைக்கு வந்தப்போ ஒரு அகதி கூட தெருவுக்கு வர முடியலயாமே? ஏன்?
Post a Comment