Tuesday, October 27, 2009

அவர் - டைட்டில் டிசைன்ஸ் - உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

வடபழனி ராஹத் பிளாசாவில் நான் ஒரு வெஜ் ரோலை சாப்பிட்டு முடிக்கவும், பழனிவேலு பாட்டை கேட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

”பாட்டு நல்லா இருக்கு சார். குதம்பாய், மை டியர் எந்திரா, வானவில் அப்படின்னு எல்லாமே தனித்தனி வெரைட்டியா இருக்கு.  கதை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ண முடியல. கதை என்ன சார்?”, இது எனது நண்பர் டைட்டில் டிசைனர் பழனிவேலு

”கதையை சொல்வதற்கில்லை. வேண்டுமானால் ஒன் லைன் சொல்லுகிறேன்”, இது நான்.

”ம்ம்ம் . . .சொல்லுங்க”

அவர் இது தான் டைட்டில். யார்? இது தான் ஒன் லைன்”

”ஹா.. ஹா.. ஹா... சார் கேட்கறதுக்கு நல்லா இருக்கு. இருந்தாலும் எனக்கு இது பத்தாது சார். இன்னும் கொஞ்சம் டீடெயில் சொல்லுங்க”

”சொல்லிட்டாப் போச்சு. வெவ்வேறு நிறங்களாக இருந்தாலும், ஒன்றாக இணையும்போது அது, அழகான வானவில்லாகிறது. அது போல வெவ்வேறு குணங்கள் உடையவர்களாக இருந்தாலும், வானவில் போல வண்ணமயமாக ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பம்.”

”அப்புறம்?”

”அந்தக் குடும்பத்திற்குள் எட்டாவது நிறமாக ஒருவர் வருகிறார். அவர் எதற்க்காக வந்தார்? அவர் யார்? இது தான் முடிச்சு”

 ”ம்..ம்..ம்.. அவர் - இந்த டைட்டில் ஒரே வார்த்தையில நச்சுன்னு இருக்கு. ஆனா கொஞ்சம் வெயிட்டா இருக்கு.”

”கரெக்ட். அதனாலதான் நான் ஒரு விஷயத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். வானவில் ஷேடிங்கை டைட்டில்ல கொண்டு வந்துட்டா, நீ ஃபீல் பண்ற அந்த வெயிட் குறைஞ்சு பேலன்ஸ் ஆகிடும்.”

”ஓ.கே சார், இன்புட் பத்தல. இருந்தாலும் நானே ஏதாவது டிரை பண்றேன். பார்த்துட்டு சஜெஷன் சொல்லுங்க. அங்கேயிருந்து அப்படியே டிராவல் பண்ணலாம்”

கீழே இருப்பவை அவர் திரைப் படத்திற்க்காக பழனிவேலு முயற்சித்த சில டைட்டில் டிசைன்கள்.

அவர் டைட்டில் டிசைன் - 1


அவர் டைட்டில் டிசைன் - 2



அவர் டைட்டில் டிசைன் - 3



அவர் டைட்டில் டிசைன் - 4


அவர் டைட்டில் டிசைன் - 5


அவர் டைட்டில் டிசைன் - 6


பழனிவேலு மகா திறமைசாலி. நேரம் எடுப்பார். ஆனால் அபாரமான டிசைன்களைத் தருவார். எதை தேர்ந்தெடுப்பதென்று குழம்பிவிடுவோம். நானும் எனது குழுவினரும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். அதிகமாக எது உங்களுக்கு பிடிக்கிறதோ, அதை மேலும் மெருகூட்டலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். 


அப்புறம் . . . உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவர்கள்  தேர்ந்தெடுத்த டைட்டில் டிசைன் என்று அலட்டலாமென்றிருக்கின்றேன். என்ன சொல்கிறீர்கள்?

37 comments:

Raja - London said...

hi Selva, very interesting!
I like the Design 2 and 4.
Both picts are having background story.
Very nice. I WISH U GOODLUCK!
ANBUDAN
RAJA, FROM LONDON.

youtubeuser said...

Selva Sir,
My vote for #1 and #3

Thanks,
Arun

ISR Selvakumar said...

கணேஷ் சந்திரா,
ஒரு கமெண்ட் கேட்டா, பதிலுக்கு ஒரு பதிவையே எழுதி அசத்திட்டீங்க. விமர்சனங்களுக்கு பயப்படுபவர்கள் சினிமாவுக்கு வரக்கூடாது. இதெல்லாம் விமர்சனங்களைத் தாங்க ஒரு டிரையலர்.

அப்புறம் . . . இது போஸ்டர் டிசைன் இல்லை. படத்தின் டைட்டில் டிசைன்.

மீண்டும் ஒரு முறை உங்களுடைய பங்கேற்புக்கு நன்றி.

ISR Selvakumar said...

ராஜா,
உங்கள் டிசைன்ஸ் (உங்கள் குழந்தைகள்)அழகு.

உங்கள் கருத்துக்கு நன்றி!

ISR Selvakumar said...

Thank you Arun,

Twitterலும் சில நண்பர்கள் AVAR டைட்டில் பற்றி கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

My Twitter url :
http://twitter.com/isr_selva

APSARAVANAN said...

#3 and #6

ISR Selvakumar said...

நன்றி சரவணன்,
எனக்கு உங்களுடைய பிளாக் லோகோ பிடிக்கும்.

ரோஸ்விக் said...

தல, மூன்றாவதுக்கு என் முதல் ஒட்டு. இரண்டாவதும் சூப்பர். அதற்க்கு என் இரண்டாவது ஒட்டு. காரணம், பலரின் உருவம் அங்கு தெரிவதுதான் பலமும், பலவீனமும். இது புரிந்து கொள்பவர்களின் பார்வையில் உள்ளது. :-)
படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.


http://thisaikaati.blogspot.com

ISR Selvakumar said...

ரோஸ்விக்,
சினிமாவுக்குள் நுழையும்போதே “தல“ என்றழைத்து பயமுறுத்தாதீர்கள்.

கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

பிரேம்குமார் அசோகன் said...

4வது டிசைன் நன்றாக உள்ளது. மல்டிகலரில் டைட்டில் வடிவமைத்ததற்கு நிச்சயம் காரணம் இருக்கும். ஆனாலும், பல படங்களில் இந்த கிரேடியண்ட் டைட்டில் பயன்படுத்தியுள்ளனர். மல்டிகலர் இல்லாமல் 5வது டிசைன் எனது சாய்ஸ்!

Anonymous said...

very nice designs..

3 n 6 r very nice..

Chithran Raghunath said...

கிராஃபிக் டிசைனில் நல்ல அனுபவமுண்டு என்கிற வகையில் எனது கருத்து.

“இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே”

ISR Selvakumar said...

சித்ரன் உங்கள் பெயரும் கருத்தும் அருமை. குறிப்பாக உங்கள் பெயர். சித்ரன் என்ற பெயரில் நான் சந்திக்கும் முதல் நபர் நீங்கள்தான்.

உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் பழனிவேலு படித்த பின் மேலும் நிச்சயம் முயற்சிப்போம்.

kittipullu said...

6 nalla iruku pa...kalakunga

யாசவி said...

தல அடிச்சி ஆடுங்க

எனக்கு 5 பிடிச்சி இருக்கு. இன்னும் கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ண நல்லா இருக்கும் என தோணுது.

மேலும் நிறைய கலர் இருக்கிறதால கொஞ்சம் அமெச்சூர்தனமா இருக்கிறமாதிரி தெரியுது. ( எனக்கும் படத்த பற்றி ஒண்ணும் தெரியாது உங்களுக்கு சரின்னா இந்த கருத்த கண்டுக்காதீங்க)

வாழ்த்துக்கள். வெற்றி விழா அழைப்பிதழ் டிசைனையும் இப்படி செலக்ட் செய்ய வாழ்த்துக்கள்
:)

S.A. நவாஸுதீன் said...

நீங்க சொன்னமாதிரி நிஜமாவே ரொம்ப குழப்பம் சார். இருந்தாலும் 1 & 3 என்னுடைய சாய்ஸ். அதிலும் மூன்றாவது மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது என் கணிப்பு.

பழனிவேல் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். செல்வா சார், இன்னும் கதையின் கருவை அவரிடம் சொன்னால் இன்னும் அவரால் அற்புதமாக மெருகேற்றமுடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அன்புடன் மலிக்கா said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்,

தாங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்,

1, 4, 6, அதிலும் அந்த 6, மிக நன்றாக இருக்கிறது..

பிச்சைப்பாத்திரம் said...

கணேஷ் பதிவு மூலமாக இங்கே.

முதலில் 'அவர்' என்கிற டைட்டிலே மிகச் சாதாரணமாய் எந்த வசீகரிப்பும் இல்லாததாக தோன்றுகிறது. (கே.பியும் 'அவர்கள்' என்று தலைப்பு வைத்திருந்தார் என்பதும் இங்கு நினைவுக்கு வருகிறது). எனவே வேறொதவது தலைப்பை முயலலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். உங்களின் பதிவிலேயே இருக்கிற 'எட்டாவது நிறம்' என்பதும் 'வானவில்' என்பதும் கூட பொருத்தமான தலைப்பாய்த் தோன்றுகிறது. (வானவில் என்று படம் வந்திரு்க்கிறதா?) "அந்நியன்" கூட ஓகே. ஆனால் ஷங்கர் உபயோகப்படுத்திவிட்டார். சரி. ஏதாவது தோன்றினால் மீண்டும் வருகிறேன்.

வடிவமைப்பு என்று பார்க்கிற போது முதலில் உள்ளதே சிறப்பானதாகத் தோன்றுகிறது. :-)

MUTHU said...

6 is my choice

ILA (a) இளா said...

செல்வா தவறாக எண்ண வேண்டாம். லவ்லி என்ற படத்திற்கு நாங்கள் அமைத்தது போல் உள்ளது இந்த படங்களும். நான் CopyRight எல்லாம் சொல்லவில்லை. புதிதாக கொண்டு வரலாமே. வேறு யாராவது கேட்குமுன்

முரளிகண்ணன் said...

என்னுடைய சாய்ஸ் 5

ஒன்லைன் படித்தவுடன் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கிறது

காத்துக்கொண்டிருக்கிறேன் காண்பதற்கு

velji said...

my choice is 5.

விக்னேஷ்வரி said...

கதை என்னன்னு உங்களுக்கு தானே தெரியும். அதுக்கு ஒத்துப் போற மாதிரி டிசைனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் தான் சரியாக இருக்கும். இங்கு நாங்கள் சொன்னால் டிசைன் அழகா இருக்கலாம். ஆனால் கதையுடன் ஒத்துப் போகுமா என்பது சந்தேகமே.

வணங்காமுடி...! said...

அன்பு செல்வா

முதலாவது சரியான தேர்வாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம்.

படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

ருவாண்டாவில் இருந்து, சுந்தர்.

Rajalakshmi Pakkirisamy said...

2 is my choice :)

மங்களூர் சிவா said...

இரண்டாவது அருமை. கையில் பை வைத்திருப்பதற்கு பதிலாக ஒரு கத்தியோ துப்பாக்கியோ வைத்திருப்பதாக இருந்தால் ச்சும்மா அதிரும்ல
:))

விஜய் said...

ஏழு வண்ணம் தவிர்த்து நிழல் மனிதனுக்கு எட்டாவது ஒரு புது வண்ணம் தந்தால் நன்றாக இருக்கும்.

இன்னும் சில டிசைன் ஆப்ஷன் தேவை

வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

design 2 is nice

Tam said...

1 and 2 are good boss.

Nice story line, nalla develop aaganum nu aasai padurean.

All the best!

Vijay said...

Designs 5 & 6 go with the concept outlined by you. I like 6 better.

Cliffnabird said...

செல்வா, வானவில் என்ற ஒன்றை வைத்துக்கொண்டே அனைத்தும் வடிவமைக்கப்பட்டதாய் படுகிறது, 3,4 லும் அந்த பூக்களும் வானவில் நிறத்தில்...

கதை உடனடியாக தெரிந்து விடும் பட்சத்தில், ஒரு வரி என்றாலும், ஆவல் குறைந்து விட வாய்ப்புள்ளது, குறிப்பாக குடும்பபாங்கான படம் என்றதும், ENTERTAINMENT இருக்காதோ என்றும்.. நமக்கனதல்ல என்று இளைஞர்கள் நினைக்கவும் வாய்ப்புள்ளது... DONT GIVE THEM CHANCE TO GUESS!!

டைட்டில் designile கதை கருவை பற்றின குறிப்பு இருக்க வேண்டும் என்ற யோசனையில் எனக்கு உடன்பாடில்லை.

சிம்பிள் FONTஇல, 2/3 colors உபயோகித்து, Theme background தவிர்த்து முயன்று பாருங்களேன். Using many colors reduces the chance of attraction, could easily mingle with other posters or images....

உதாரணமாக, கார்ட்டூன் ஸ்டோரி என்று வைத்துகொள்வோம், கார்ட்டூன் பிடிக்காதவர்களிடம் அது எவ்வளவு மெசேஜ் வைத்து சொல்லப்பட்டதாயினும் Title designs வைத்து ஒரு வகையான AVERSE வந்து விடுவதுண்டு...

உங்கள் கோணத்திலிருந்து என்னால் இதை யோசிக்க முடியவில்லை.. நீங்கள் ஏற்கனவே எல்லா கோணங்களிலும் யோசித்துவிட்டீர்களாயின் என்னுடைய தேர்வு 1 & 4 (பறவைகளை நீக்கி விட்டு..)

ஏதும் தவறிருப்பின் தெரியப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்,

நட்புடன்
செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

குட்டி said...

உங்களது கதையின் முழு உருவம் தெரியாது , ஆனால் என்னால் முடிந்த , என்னுடை எண்ணங்கள் சில.

படம் ஒன்று , ஆறு , ஐந்து

வானவில்லின் வண்ணத்தை பயன்படுத்தி பார்பவரை , படமானது சிந்திக்க வைப்பதாக தெரியவில்லை மதிப்பெண் அறுபது.

படம் இரண்டு

மொத்தத்தில் கருத்துக்கும் மற்றும் கதையின் கருவிற்கும் ஒத்துவராதது.
மதிப்பெண் நாற்பது.


படம் நான்கு

இது குடைக்குள் மலை படத்திற்கு தான் பொருந்தும் .
மதிப்பெண் இருபது.

படம் மூன்று
கதையின் கருவிற்கும் மற்றும் பார்பவருக்கு என்னத்தை
தூண்டும் படம் , இது நல்ல முயற்சி ,
அவருக்கு பின்னல் இவரா அல்லது இவருக்கு பின்னல் அவரா என்று சிந்திக்க தோன்றும்,
மதிப்பெண் சதம்.

அன்புடன்
தமிழ் போராளி

sun said...

I think, if the title is "AVAR" then the person should be somewhat farther. So would suggest to make the person looks far away in the title card. Also like some one's comment make it a single person in picture no.2 and make him carrying nothing with trying a different color for the green circle

Dinesh Devotta said...

முதல் டிசைன் நல்லா இருக்குங்க.அளவோட இருக்கு அதே நேரத்துல ஒரு அழுத்தம் இருக்கு.

R.Gopi said...

செல்வா சார்...

படத்தோட கதை படு சூப்பர்....

டிசைன் 5 மிக நன்றாக உள்ளது......

Thenammai Lakshmanan said...

Selva i too like 2 and 3

fantastic works MR. Palanivelu

Chitra said...

# 3 - new idea to go well with your concept. Little improvisation is needed.
The basic design is very creative.. :-)