Tuesday, May 4, 2010

”அவர்” - திரைப்படத் துவக்க விழாவும், டிஜிட்டல் சினிமா கருத்தரங்கும்

”அவர்” - இயக்குனராக நான் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஒரு கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படம் என்கின்ற பதற்றம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். முதல் காரணம், இணையம் வழியாக நான் பெற்றிருக்கும் உங்களின் நட்பு, அன்பு மற்றும் ஆதரவு. அடுத்த காரணம், சினிமாவை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், கல்வியாக நினைத்து கற்கும் குணம் என்னிடத்தில் எப்போதும் உண்டு. கடைசியாக, மிக மிக முக்கியக் காரணம், தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன். சினிமாவையும் அதன் நவீன தொழில் நுட்பங்களையும் எந்த ஈகோவும் பார்க்காமல் கற்றுத் தெளிவதில் முனைப்பாக இருப்பவர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் Pre-Production, Production மற்றும் Post-Production வரையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசன் இது பற்றிய விழிப்புணர்வை போதுமான அளவு தமிழ் சினிமாத் துறையில் ஏற்கனவே உண்டாக்கி வைத்திருக்கிறார் ஆனாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் முதல் நவீன ஜீனியர்கள் வரை தயங்குகிறார்கள்.  செல்லுலாயிடில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதில் தயக்கம் ஒரு புறம், டிஜிட்டல் பற்றிய முழுத் தெளிவும் இல்லாத குறை இன்னொரு புறம். இந்த இரு காரணங்களால் தமிழ் சினிமா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாவதில் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது.

”அவர்”, முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்! திரைப்படம் தொடர்பான டிஜிட்டல் காமிராக்கள் முதல், தியேட்டர்களில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டர்கள் வரை, பல்வேறு வகைகளை பார்த்து சோதித்து உறுதி செய்து பல தகவல்களை திரட்டி இருக்கிறார், தயாரிப்பாளர் திரு. சங்கரநாராயணன்.

அமெரிக்கா மற்றும் சவுதி போன்ற நாடுகளில் ஐடி பொறியாளராக பணியாற்றிய திரு, சங்கரநாராயணன், அடிப்படையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்,  எனவே அவருடனான ஒரு சந்திப்பு உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

பொதுவாக திரைப்படங்களின் துவக்க விழா ஏதாவது சினிமா ஸ்டுடியோக்களில் பூஜையில் துவங்கும். ஆனால் ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழா ஒரு செமினார் அதாவது ஒரு கருத்தரங்கில் துவங்குகிறது. ”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”, இது தான் கருத்தரங்கின் தலைப்பு. நவீன டிஜிட்டல் காமிராக்கள், அவற்றில் உள்ள குறைகள், வசதிகள் தியேட்டர்களில் உள்ள நவீன டிஜிட்டல் புரொக்ஷன் வசதிகள் மற்றும் வகைகள் பற்றி திரு. சங்கரநாரயணன் உங்களுடன் உரையாடுவார்.

டிஜிட்டல் சினிமா எடுக்க எந்த மாதிரி காமிராக்களை பயன்படுத்தலாம்? அவற்றின் வகை என்ன? அவற்றின் திறன் என்ன? அவற்றை வாங்கலாமா? வாடகைக்கு எடுக்கலாமா? வாடகைக்கான செலவு என்ன?
டிஜிட்டல் புரொஜக்டர்கள் எத்தனை வகை உள்ளன? ஒவ்வொரு வகையிலும் எத்தனை தியேட்டர்கள் உள்ள? போன்ற விபரங்களை நீங்கள் ”அவர்” படததின் தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன் அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம்.

அன்புடன் வாழ்த்த வாருங்கள்!
இது வரை நாங்கள் கற்றதை, நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைப்பு
”டிஜிட்டல் சினிமாவின் நவீன தொழில் நுட்பம்!”

நாள்
9.5.2010

நேரம் 
காலை பத்து மணி முதல் மதியம் 1 வரை!

இடம் 
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.
வழி வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

வழங்குபவர்
திரு. சங்கர நாராயணன்.

மேலும் விபரங்களுக்கு,
email : r.selvakkumar@gmail.com

மிக மிக எளிதாக, விரைவாக, அதிக செலவின்றி இனி  நிறைய திரைப்படங்களை உருவாக்க முடியும்!  காமிராமேன்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட, எவராக இருந்தாலும் நிறைய கேள்விகளுடன் வாருங்கள். அதை விட நிறைய பதில்களுடன் செல்லுங்கள். திரையுலகின் டிஜிட்டல் புரட்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

24 comments:

Chitra said...

வெற்றி பெற, "அவரில்" சிறக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் செல்வா!

GOPINATHAN GOPI said...

வாழ்த்துக்கள் ஐயா ..நிச்சயம் கலந்து கோல ஆசை படுகிறேன்..எனக்கு டிஜிட்டல் சினிமா பற்றி தெரியது.. அனால் தெரிந்து கொள்ள ஆசை... நான் வர அனுமதி உண்டா....

GOPINATHAN GOPI said...

வாழ்த்துக்கள் ஐயா ..நிச்சயம் கலந்து கோல ஆசை படுகிறேன்..எனக்கு டிஜிட்டல் சினிமா பற்றி தெரியது.. அனால் தெரிந்து கொள்ள ஆசை... நான் வர அனுமதி உண்டா....

ISR Selvakumar said...

கோபி,
இதென்னக் கேள்வி? கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும் எவரும் வரலாம். உங்கள் மொபைல் எண்ணை r.selvakkumar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் தலைவரே.. டிஜிட்டல் சினிமாவை மிகவும் நேசிக்கும் ஒருவனாகிய நான் உங்கள் கருத்தரங்குக்கு வர விரும்புகிறேன். என்னுடய மொபைல் என் 9840332666

ISR Selvakumar said...

ஷங்கர்,
அவசியம் நீங்கள் கலந்து கொண்டு, உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
கற்போம்! கற்பிப்போம்!

Unknown said...

"அவர்" முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

butterfly Surya said...

வாழ்த்துகள் செல்வா.

தேவன் மாயம் said...

படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் செல்வா ஸார்..! உங்களுடைய முதல் படைப்பு வெற்றி பெற வேண்டும் என என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

நேரம் கிடைத்தால் விழாவுக்கு நிச்சயம் வருகிறேன்..!

எனது தொலைபேசி எண் 9840998725

நட்புடன் ஜமால் said...

அண்ணா மீ தி கம்மிங்ஸ் ...

bharathi kavithai said...

best of luck selva

shreepathy padhmanabha said...

'அவர்' வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா!

shreepathy padhmanabha said...

'அவர்' வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா!

Babu Palamalai said...

தங்களின் முதல் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்...ALL THE BEST SELVA !!!

olerzor said...

வாழ்த்துக்கள. டிஜிட்டல் சினிமா கருத்தரங்குக்கு வர விரும்புகிறேன். என்னுடய மொபைல் என் 9040243689.

urs Olerzor

Unknown said...

I wish you all the best for the inauguration and seminar. Let this be a beginning on the path of glory and success.

Uma said...

I wish you all the best for the inauguration and the seminar. Hope this is the beginning of the path to glory and success...

Uma

சத்ரியன் said...

அண்ணா,

“அவரை” ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

வாழ்த்துகள்.

siddarth @k!ng of chenna!@ said...

i also wish to come that karutharangam.my mobile no:9092197500.

siddarth @k!ng of chenna!@ said...

i wish to attend that karutharangam.entery is free for all or else selected peoples only allowed to attend.
my contact no:9092197500

Unknown said...

pudhu muyarchikku niraintha thannambikkakku vetri nichayam. vaazhthukkal. _endrum anbudan
jeyaraj,v.c.

மங்குனி அமைச்சர் said...

ஐயோ சார் , 2006 இருந்து ப்ளாக் வச்சுருக்கிங்களா????????????????