Tuesday, April 13, 2010

லெப்டுல இருந்து ரைட்.. ரைட்டுல இருந்து லெப்ட் எப்படி வேணும்னா படி!


RACECAR
LEVEL
DEED
ROTOR
CIVIC
POP
MADAM
EYE
NUN
RADAR
TOOT

இந்த ஆங்கில வார்த்தைகளில் ஒரு சுவாரசியமான விசித்திரம் உள்ளது.
இந்த வார்த்தைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். அப்படி வாசிக்க முடிந்தால் அந்த வார்த்தைகளை பாலிண்ட்ரோம்-Palindrome என்பார்கள்.

தமிழில் இதை முயற்சி செய்து பார்க்கலாமமே என்று தோன்றியது. சில மணி நேர மூளை கசக்கல்களுக்குப் பிறகு சிக்கிய வார்த்தைகளை கீழே தந்திருக்கின்றேன்.

விகடகவி
பாப்பா
தேருவருதே
துவளுவது
தாளாதா
தந்த
கலைக
கலக
மேகமே
வாடவா
மாடமா
மாதமா
மானமா
மாயமா


இதில் விகடகவி மிகப் பிரபலமான தமிழ் பாலிண்ட்ரோம். சில கேள்வி வடிவிலேயே இருப்பதைக் கவனியுங்கள். தொடர்ச்சியாக எனக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வந்தன. சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன். நீங்களும் முயற்சி செய்து சில வார்த்தைகளை எழுதுங்கள்.

சந்திப் பிழையை மன்னிக்கலாம் என்றால் தாவபோவதா, கைபை என்பவையும் பாலிண்ட்ரோம்கள்தான்.

ஆங்கில பெயர்கள், அர்த்தமற்ற ஒலிகளை மறுக்க மாட்டீர்கள் என்றால் லில்லி, டால்டா, பைப்பை, கூக்கூ என்பவையும் பாலிண்ட்ரோம்தான்.

தமிழில் பாலிண்ட்ரோம் எழுதும் போது எழும் மிகப்பெரிய சிக்கல் மெய் எழுத்துக்கள்தான். அதை மீறி பாலிண்ட்ரோம் வார்த்தைகைளை தேடுவது ஜாலியான சவால்.

ஆச்சரியகரமாக சில பாலிண்ட்ரோம் வாக்கியங்களும் உருவாகின.

இரு வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
மாலா போலாமா?
யானை பூனையா?
காரு முருகா

மூன்று வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
கைதி மாயமா? திகை!
வாடவா பூ வாடவா?
துருவ மேகமே வருது
நீதிபதி பதி நீ
தாயே நீயே தா
யானை தந்தம் தந்தனையா?

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளுடன் பாலிண்ட்ரோம்கள்
மே மாதமா? கலக மாதமாமே?
தாவ போவதா, பாப்பா தாவ போவதா? ---- (சந்திப் பிழை?)
தேரு வருதே வேகமாகவே தேரு வருதே

அர்த்தங்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாவிட்டால் . . .
சிவா வாழையா? யாழை வா வாசி
மில் டெலிபோன் போலி. டெல் மி!
சாரா, காமராசரா? மகாராசா!

இவை எனக்கு உதித்த பாலிண்ட்ரோம்கள். சவாலான இந்த வார்த்தை விளையாட்டில் நீங்கள் எத்தனை பாலிண்ட்ரோம் வார்த்தைகளை கொண்டு வருகிறீர்கள் என்று பார்க்கலாம்.

10 comments:

Ganesh Babu said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

நமக்கு அந்த அளவுக்கு தமிழ் ஞானம் பத்தாது

VELU.G said...

நன்றாக உள்ளது உங்கள் வார்த்தை விளையாட்டு

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு அண்ணா.. நானும் ட்ரை பண்றேன்..

குடகு
கற்க
மாமா
காக்கா
தாத்தா
கலைக

ஸ்ரீராம். said...

பிரமாதம். நல்ல முயற்சி.

Chitra said...

the ones that I have heard before:

வினவி
மாறுமோ
தேயுதே
மேளதாளமே.

'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா'
.......திருஞான சம்பந்தர்.

"மோரு தருமோ?"

விஜய் said...

மாடு ஓடுமா

சிவா வாசி

பாலாஜி சங்கர் said...

In english

malayalam

செ.சரவணக்குமார் said...

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரில் பாலிண்ட்ரோம் எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். உங்கள் பதிவிற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ் பாலிண்ட்ரோம் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார்.

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் அண்ணா!

Venkatramanan said...

சரவணக்குமார் & செல்வா!
நாக்கைச் சுழற்றி ஒரு மாலை மாற்று ம் பாலாவின் சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம் ம் தொடர்புடையவை! உங்கள் பதிவில் புதுசா நிறைய மாலைமாற்றுத் தொடர்கள் இருக்கு!

அன்புடன்
வெங்கட்ரமணன்