‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘
நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது ஆர்குட் மெம்பரா? ஆம் என்றால் இதுபோன்ற பெருமை கலந்த புலம்பல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக நாம் அனைவருமே நம் மேல் ஒரு ஸ்பாட் லைட் விழுவதை விரும்புபவர்கள். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு சென்றாலும் நம்மை மற்றவர்கள் கவனிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டாவது விரும்புவோம். ஆனால் பிரபலங்களுக்கு கிடைக்கின்ற அந்த கவன ஈர்ப்பு, சாமானியர்களான நமக்கு கிடைப்பதில்லை.
ஆனால் ஆன்லைன் தளங்களில் மெம்பரான சில நாட்களிலேயே அடடா... நாமே ஒரு வி.ஐ.பிதான் என்ற எண்ணம் எழுகிறது. சதா யாராவது வந்து ஹலோ சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சர்வசாதாரணமாக நண்பராகிறார்கள். குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை விழுந்து விழுந்து இரகிக்கிறார்கள். அடடா... நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள். காலையில் எல்.கே.ஜி படிக்கும் சுட்டியிடம் எரிந்து விழுந்தது தெரியாமல், சே... உன்னைப் போல அன்பான மனிதனை இது வரை சந்தித்ததே இல்லை என்று ஆரத் தழுவுகிறார்கள்.
இது சிலரை ஒரு மாயையில் தள்ளிவிடுகிறதாக நான் நினைக்கிறேன். நம்மை யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பிரபலம். நமது ஹலோவுக்காக ஒரு நண்பர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்ற பெருமை கலந்த பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த வாசகம்.
‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘
உற்றுக் கவனித்தால் எக்கச்சக்கமான அழைப்புகள் என்பதில் ஒரு தற்பெருமையும், நான் பிரபலம் என்கிற எண்ணமும் ஒளிந்திருப்பதை கவனிக்கலாம். அழைப்புகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் இந்த ஆன்லைன் பிரபல்யம் நிரந்தரம் என்ற நம்பிக்கை இருப்பதையும் கவனிக்கலாம்.
தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம்.
நான் சொல்ல வருவதின் சுருக்கம் இதுதான். ஆன்லைன் நட்பு பலப்பட வேண்டுமென்றால் நிஜத்திலும் சந்தித்து பழகுங்கள். ஆன்லைனிலேயே தொடரும் நட்புகள் ஒரு log offல் முடிந்து போய்விடும். இன்றைய ஸ்பெஷல் என்று ஹோட்டல் வாசல்களில் எழுதி வைப்பார்கள். அதைப் போல தற்காலிகமானதுதான் ஆன்லைன் அழைப்புகளும். அவற்றை ஏற்பதாலும், நிராகரிப்பதாலும் எண்ணிக்கை மாற்றம் ஏற்படுமே தவிர, எண்ணங்களோ, வாழ்க்கையோ மாறப் போவதில்லை.
23 comments:
ம்! உண்மைதான்!!!
good one! :)
உண்மையிலேஉண்மை தான் அண்ணா.
நிதர்சனம் அண்ணா ...
தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம்.
....... நெத்தியடி! நச்னு உண்மையை சொல்லிட்டீங்க...... பாராட்டுக்கள்!
உங்க கனிவான முத்தான வார்த்தைகளில் மகிழ்ந்தேன்...எண்ணங்கள் மறைந்துதான் போகும் நேரில் பார்க்கவில்லை என்றால்....
அட!
//‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘//
இது ஒரு தற்பெருமை அறிக்கைதான். இந்த ஆன்லைன் நட்புகள் எதற்கு உதவும்?
Good one..!
Its a fact buddy..! :)
சத்தியமான உண்மைகள்.
எனக்கு முன்ன பின்ன தெரியாதவன் எல்லாம் நண்பனா இருக்க அழைப்பு விடுறான். ஏன்னா அவனுக நண்பர்கள் பட்டியல்ல ஒரு எண்ணிக்கை கூடுமென்ற பெருமையில. நமக்கு இது ஒத்து வராதுடா சாமி அப்படின்னு ஆர்குட்டிலிருந்தே என்னை விலக்கிக் கொண்டிருக்கிறேன்.
குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை விழுந்து விழுந்து இரகிக்கிறார்கள். அடடா... நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள்//
சந்தடிசாக்கில் என்னை சொல்வது போல் இருகிறது செல்வா..:))
அது சரி எல்லோருமே எப்பவுமே சந்தித்துக்கொள்ள முடியுமா என்ன..?
unmaithaan anna
உங்கள் வார்த்தை அனைத்தும் உண்மையாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை இதில் மாற்று கருத்து உண்டு.
நீங்கள் சொன்னைதைபோல் //ஆன்லைன் நட்பு பலப்பட வேண்டுமென்றால் நிஜத்திலும் சந்தித்து பழகுங்கள். ஆன்லைனிலேயே தொடரும் நட்புகள் ஒரு log offல் முடிந்து போய்விடும்.//
நான் செய்ததால் என்னவோ எனக்கு ஆன்லைன் கிடைத்தை எல்லா நட்பும் நல்லமுறையில் தொடருகிறது.
it's true
அன்பின் செல்வகுமார்
இதுதான் யதார்த்தம் - இயல்பு நிலை - இவ்வகை நட்பினைத் தொடரலாம் - தவறில்லை - நேரில் சந்தித்துப் பழகலாம்.
நல்வாழ்த்துகள் செல்வகுமார்
நட்புடன் சீனா
சரியான கணிப்பு செல்வா சார்
ரொம்ப சீரியஸா எடுத்தக் கூடாதோ? நல்லா சொல்லியிருக்கீங்க.
what ever you says is correct,
selva sir.. FBla naan ungaluku friend request anupe 2 weeks aaguthu.. neenga add pannay Buildup kudkura reason ippothan puriyuthu... ungaluku yetha postthan ithu.. lol :)
‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்
selva sir.. FBla naan ungaluku friend request anupe 2 weeks aaguthu.. neenga add pannay Buildup kudkura reason ippothan puriyuthu... ungaluku yetha postthan ithu.. lol :)
‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்
சரியான பதிவு. நான் எழுதி பல நாட்களாக டிராப்டில் தூங்கி கொண்டிருக்கிற பதிவின் மறுமதிப்போ என்று பிரமித்தேன்.
ஆனால் இந்த இணைய நட்பு அலாதியானது. சில சமய்ங்களில் நெகிழவும் வைக்கிறது.
எதையும் எதிர்பார்த்து பெரும்பாலானோர் வருவதில்லை என்று நீங்கள் அறியாததில்லை செல்வா.
நேரில் பார்த்து பேசி பழக முடியாத நிலையில் முகப்புத்தகத்தில் உலகமெங்கும் பரவி கிடக்கும் உங்கள் தங்கைகளின் அன்பே அதற்கு சாட்சி. நம்மை எல்லாம் இணைத்த இணையத்திற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
நிரந்தரம் என்ற நிலையே அசெளகரியமே..
ஆச்சரியம் நிறைந்த உலகத்திலே ஒவ்வொன்றும் அதிசியம் தான்.
அந்த வகையில் உங்களை சந்தித்ததும் ஒரு வகை ஆச்சரியமே..
- அன்பே சிவம்.
எழுதி வைத்த தலைப்பை மட்டுமாவது சொல்லி விடுகிறேன்.
எல்லாப்புகழும் இண்டர்நெட்டிர்கே..
விரைவில் பதிவிடுகிறேன்.
அப்போ ஒரு வரமோ அல்லது ஒரு மாதமோ ஆண் லைன் வரமால் விட்டால் மறந்து விடுவீர்களா.. தேடி வரும் நட்பை
தவிர்க்காமல், தன்னோடு சேர்த்து கொள்ளும் போது எண்ணிக்கை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் ஒரு நல்ல நட்பு எண்ணிக்கை கூடுவதாலோ குறைவதாலோ எந்த வகையிலும் பாதிக்க போவதில்லை ..
என்றும் நட்புடன், உரிமையுடன் சண்டை போடும்
உதய குமார்
உண்மை தான்.
Post a Comment