Monday, August 30, 2010

டாய் கடவுளே ...

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், 3 அ.தி.மு.கவினருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் பின் வாங்கினார்கள். பார்க்கவே இல்லை என்றார்கள். ஃபைல்கள் காணாமல் போயின. மறைமுகமாக மிரட்டினார்கள். வாய்தா..வாய்தா..வாய்தா என்று இழுத்தடித்தார்கள். இரக்கமின்றி செயல்பட்ட அ.தி.மு.வினருக்கு சாதகமாக வழக்கு திருத்தப்பட்டது.

ஆனால் எல்லோரும் கைவிட்டாலும், பின் வாங்கினாலும், அரசியலும், அரசாங்கமும், நியாயங்களும், தர்மங்களும் எதிராக இருந்தாலும், வீராசாமி என்ற ஒரு தனி நபர் மட்டும் தொடர்ந்து போராடினார்.

அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.

அவர்...
அந்த பஸ்ஸில் எரிந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி! அவருக்கு என் வணக்கங்கள்!

காலம் கடந்தாலும், சட்டம் வென்றது, நியாயம் வென்றது, தர்மம் வென்றது என்று இந்த சமூகம் மார் தட்டிக் கொண்டாலும், அநியாயமாக பறிபோன உயிர்களுக்கும், அதை நினைத்தே அழுது கொண்டிருக்கும் உயிர்களுக்கும், யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்.

டாய் கடவுளே ... எனக்கு உன்னை பிடிக்கவில்லை!

9 comments:

பொன் மாலை பொழுது said...

இந்த ஆற்றாமையும், ஆவேசமும் ஏன் எல்லோரிடமும் இல்லாமல் போனது? இதுகூட இல்லை என்றால் வரும் காலங்களில் இதைப்போன்றே தொடர் நிகழ்வுகள் இங்கே நடந்தேறும். "நமக்கென்ன வந்தது " என்ற நினைப்பு தனக்கென நிகழும் போது மட்டுமே வலியால் கதறும். ஆனால் பலன் ஒன்றும் மிருக்காது. இது கயவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புள்ள "ஜனநாயக நாடு" இங்கே சட்டமும் கூட கலர் கலராகவே இருக்கும். அதையும் மீறி நியாயம் வேண்டுமெனில் நம்மில் உணர்வு வேண்டும். ஆனால் அது தான் நம்மிடம் இல்லாமல் போக எல்லா கயவர்களும் "பாடுபடுகின்றனர்".ஆண் பெண் வேறுபாடு இன்றி!

Jey said...

//அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.//

இந்த போராட்டம் எல்லோரிடமும் பரவலனால்... நிலைமை மாறும் வாய்ப்பு உள்ளது...

ISR Selvakumar said...

Jey,
திரு. வீராசாமி அவர்களின் மனோதிடம் அனைவருக்கும் வாய்ப்பது கடினம். அவரைப்போலவே பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்தினர் மனம் தளர்ந்துவிட்டார்கள்.

எனவே அவர் அளவிற்கு இல்லையென்றாலும், அவரைப் பார்த்து கலங்காமல் போராடப் பழகவேண்டும்.

அதற்கு நம்மை மழுங்க அடிக்கும், டிவி சனியன்களும், சினிமா பேய்களும், அரசியல் ஓநாய்களும், பண வேட்டைக்காரர்களும் ஒழிய வேண்டும்!

ISR Selvakumar said...

//
இது கயவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புள்ள "ஜனநாயக நாடு" இங்கே சட்டமும் கூட கலர் கலராகவே இருக்கும்.
//
மாணிக்கம், இந்த எண்ணம் பலருக்கு வந்துவிட்டதென்னமோ உண்மை. அதனால்தான் நாம் சின்னச் சின்ன தவறுகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்கிறோம், நமது குழந்தைகளுக்கும் பழக்குகிறோம்.

உதாரணமாக பொய் சம்பளம் சொல்லி ரேஷன் கார்டு பதிவது, டிராபிக்கில் சிக்கினால் போலீஸ்காரருக்கு பணத்தை நீட்டுவது, பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, பணம் கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.. இந்த தவறுகள் எல்லாமே இந்தியாவின் தேசிய குணமாகிவிட்டது.

Chitra said...

திரு. வீராசாமி அவர்களின் மனோதிடம் அனைவருக்கும் வாய்ப்பது கடினம். அவரைப்போலவே பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்தினர் மனம் தளர்ந்துவிட்டார்கள்.

எனவே அவர் அளவிற்கு இல்லையென்றாலும், அவரைப் பார்த்து கலங்காமல் போராடப் பழகவேண்டும்.

அதற்கு நம்மை மழுங்க அடிக்கும், டிவி சனியன்களும், சினிமா பேய்களும், அரசியல் ஓநாய்களும், பண வேட்டைக்காரர்களும் ஒழிய வேண்டும்!

....... மக்கள், comfortable ஆக இருக்க பழகி விட்டார்கள்..... சோதனைகளைத் தாண்டி, ஒருவர் ஒருவரின் வேதனைகளைத் தீர்க்க விரும்புவதில்லை. :-(

Chitra said...

உதாரணமாக பொய் சம்பளம் சொல்லி ரேஷன் கார்டு பதிவது, டிராபிக்கில் சிக்கினால் போலீஸ்காரருக்கு பணத்தை நீட்டுவது, பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, பணம் கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.. இந்த தவறுகள் எல்லாமே இந்தியாவின் தேசிய குணமாகிவிட்டது.

.....Honesty is the worst policy என்றாகி விட்டது. ம்ம்ம்ம்..... இந்த மன நிலை மாறும் வரை, மாற்றங்கள் வருவது கடினம். பணம் அல்லது சலுகை கிடைத்தால், மனசாட்சியை அடமானம் வைக்க பழகி விட்டார்கள், பலர்.

Kesavan Markkandan said...

பஸ் எரிப்பில் இறந்த அந்த மூன்று மாணவிகளும் எனது சீனியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபடுகிறேன். மேலும் வீராசாமி அய்யா அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து வியப்படைகிறேன். இதற்க்கு முன் இருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் அ.தி.மு.க வை சேர்ந்ததால் பல்கலை சார்பில் வக்கீல் ஆஜர்ராக வில்லை. சீனியர் மாணவர்கள் மற்றும் அணைத்து மாணவர்களும் கண்டனத்தில் ஈடுபட்ட போதெல்லாம் அவர்கள் அதை பெரிதாக எடுத்துகொள்ள வில்லை. அந்த மூன்று மாணவிகளின் சிலைகள் லேடீஸ் ஹாஸ்டல் முகப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தில் உயிர் தப்பித்த எனது ஆய்வக சீனியர் இன்றும் கையில் தீக்காயம் காயாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எத்தனையோ பேர் தப்பித்தாலும், கடைசியில் மூன்று பேர் மாட்டிக்கொண்டார்கள். இது மற்ற கழக தொண்டர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும். மேலும் தூக்கு தண்டனை தேவையா? இல்லையா? என்று விவாதிக்காமல் இருந்தால் நல்லது.

ஆதங்கத்துடன்
கேசவன், தென்கொரியா.

R.Gopi said...

செல்வா சார்....

அப்படியே அந்த “தினகரன்” ஆஃபீஸ்ல 3 பேர எரிச்சாங்களே... அதுக்கும் தண்டனை உண்டா என்னன்னு விசாரித்து சொல்லுங்க.....

தினகரன் அலுவலகத்தில் ஏ.சி. எரிந்ததால் வந்த புகையால் தான் இறந்தார்கள்னு அறிக்கை தந்தாங்களாமே!!?