Thursday, December 1, 2011

மயக்கம் என்ன - விமர்சனம்


கமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ!

நல்லவேளை படத்தில் ரம்பம் இல்லை. ஆனால் அக்மார்க் செல்வராகவன் பிராண்ட் கோடாலி இருக்கிறது. எடுத்தவுடன் நண்பனின் காதல் பிளக்கப்படுகிறது. நண்பனின் காதலி அறிமுகமான இரண்டாவது காட்சியிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கதாநாயகனின் காதலியாகிறாள் என்பதுதான் (வழக்கமான) முதல்பாதி.

இரண்டாவது பாதியில் நாயகன் திடீர் மனநோயாளியாக மாறுவதும் வழக்கமான செல்வராகவன் ஸ்டைல்தான். ஒரே மாற்றமாக, இதில் காதலி, மனைவியாகி, நாயகனை அவன் இலட்சியம் நிறைவேற உதவுகிறாள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சா கங்கோபாத்யாய அவருக்கு ஈடு கொடுக்கிறார். கொஞ்சம் தெலுங்கு வாடையடிக்கும் முகம் என்றாலும், பூசினாற் போல இருப்பதால் அம்மணி கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.

படம் முழுவதும், மாற்றான் மனைவி மற்றும் மாற்றான் காதலியின் மேல் ஆசைப்படுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அனைத்துப் படங்களிலும் செல்வராகவனின் இதே பாத்திரப் படைப்புகளால், கோபமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.

படம் பார்க்கும்போது, சில காட்சிகள் பிடிக்கிறது. அதுவும் வீடு வந்ததும் மறந்து விடுகிறது. படம் முழுக்க தனுஷ் தயங்கித் தயங்கி காதலிக்கிறார், தயங்கித் தயங்கி போட்டோகிராபராக முன்னேறுகிறார். மயக்கம் என்ன என்பதற்கு பதில் தயக்கம் என்ன என்று டைட்டில் வைத்திருக்கலாம்.

புது தயாரிப்பாளர் (மனைவி) என்பதால் செல்வராகவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அடுத்த படத்துக்கு புது உதவியாளர்களுடன் புதிய களத்தை அவர் தேடிப் பிடிக்க வேண்டும்.

மயக்கம் என்ன... மயக்கவில்லை!

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மயக்கமென்ன படம், ஹாலிவுட்ல இருந்து சுட்டதுன்னு பதிவுலகம் பேசிட்டு இருக்காங்கய்யா, அப்பிடியா...?

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் விமர்சனம் அருமை...!!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்றார்கள் அன்று
இன்று மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணக்கிறது

சத்ரியன் said...

செல்வா அண்ணா,

எதுக்கும் ஒரு தடவை பார்த்து வைக்கலாமோ?

nijamkpm said...

mayakam enna padam super padam oru ethaarthathai kaatukirathu thx selva

nijamkpm said...

mayakam enna padam super