Tuesday, September 18, 2012

விகடனுக்கும், குமுதத்துக்கும் பணிவான வேண்டுகோள்

யோசித்துப் பார்த்தால், சிறுவயதிலிருந்தே இத்தனை வருடங்களாக நான் தெரிந்து கொண்டது, அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது என அனைத்துமே ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் வழியாக மட்டுமே.

பெரும்பாலும் இப்பத்திரிகைகள் நடிகர் நடிகர்களின் தனிப்பட்ட சந்தோஷங்களையும், துயரங்களையுமே கட்டுரைகளாக, கவர்ஸ்டோரிகளாக என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் தவறில்லை. நானும் இவற்றையே விரும்பிப் படித்திருக்கிறேன்.

ஆனால
் கூடங்குளம் போன்ற ஒரு மக்கள் பிரச்சனையை ஒரு ஊறுகாய் விளம்பரம் அளவிற்கு கூட இப்பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை என்பது என் கருத்து. கடந்த 25 வருடங்களில் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்து மொத்தமே 10 கட்டுரைகள் கூட வந்திருக்காது என நினைக்கிறேன்.

கூடங்குளம் பிரச்சனையைப் பற்றிய அடிப்படை தகவலும், புரிதலும் எனக்கு இல்லாமல் போனதற்கு 50 வருடப் பாரம்பரியம்மிக்க இப்பத்திரிகைகளின் பொறுப்பற்றதன்மையே காரணம்.

இதற்கு பிரயாசித்தமாக கடந்தவாரம் கூடங்குளம் பிரச்சனை பற்றி ஆனந்த விகடன் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. சந்தோஷம்!

இப் பிரச்சனையில் மக்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும்படி ஆனந்தவிகடன், குமுதம் நிர்வாகத்தாரை கேட்டுக் கொள்கிறேன்.

8 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

my profile.. said...

// இதற்கு பிரயாசித்தமாக கடந்தவாரம் கூடங்குளம் பிரச்சனை பற்றி ஆனந்த விகடன் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. //
இந்த கவர்ஸ்டோரியை கொஞ்சம் upload செய்யுங்கள் அண்ணா !

சி.பி.செந்தில்குமார் said...

சபாஷ் கேள்வி, ஆனால் அவர்களுக்கு ஏதாவது அரசு தரப்பு நிர்ப்பந்தம் அல்லது வாய் மொழி உத்தரவு வந்திருக்கக்கூடும்

KARTHIK said...

இதைப்போலவே விவேகானந்தா கல்லூரி செய்தியையும் எந்த பத்திரிக்கையும்,செய்தி சேனல்களும் கண்டுக்கவே இல்லை,கல்லூரி இன்னும் திறக்கப்படவும் இல்லை,அதுபற்றி ஒரு வரிச்செய்தியும் எதிளும் இல்லை :-(

ponkasirajan said...

ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக கூடங்குளம் பற்றிய
கவர் ஸ்டோரி தான் நண்பரே படியுங்கள் ...
பார்க்காமல் குறை சொல்லாதீர்கள் ...

நம்பள்கி said...

தம்பி, இந்தப் பத்திரிக்கையை நடத்துபவர்கள் யார்? அவர்கள் போக்குவரத்து என்ன? யோசித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்...

அதே சமயம் ஒரு பொறம்போக்கு சாமியாரை "செய்த குற்றத்திற்கு" மறுபடியும், "செய்த குற்றத்திற்கு" கூட கைது பண்ணினா எல்லா பன்னாடைகளும் பொங்குவானுங்க! அந்த பன்னாடைகள் யார்? இப்ப புரியும் உங்களுக்கு...யார் பன்னாடைகள் என்று...

இந்த 'பணிவான' வார்த்தையையும் தேவையில்லை; "வேண்டுகோளும்' தேவையில்லை....முக்கியமா, இந்த பன்னாடைகளுக்கு மரியாதை தேவையில்லை!

அவர்கள் Agenda- வே தனி தம்பி...
இப்படி இருக்கிறீங்களே?

indrayavanam.blogspot.com said...

நல்ல வேண்டுகோள் .... நல்ல பதிவு

Dino LA said...

அருமை