ஜெயலலிதா தற்போது இதே தந்திரத்தை கையாள்கிறார். மினிபஸ்களில் இரட்டைஇலையுடன் இன்னும் இரண்டு இலைகளை வரைந்துவிட்டு கவுண்டமணி-செந்தில் ஸ்டைலில் இது அதுவல்ல என்று வாழைப்பழக்கதை சொல்கிறார். இதனை அவரது ஆதரவாளர்களே இரசிக்கவில்லை. இப்படியெல்லாம் அடம்பிடித்து இரட்டை இலையை புரொமோட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயலலிதாவே முயன்றாலும் அது தமிழக மக்களால் மறக்க முடியாத ஒரு சின்னம்.
எம்.ஜி.ஆர் சமாதியின் முன் உள்ளதும், மினிபஸ்களில் வரையப்பட்டிருப்பதும் இரட்டை இலைதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை உணர்ந்து, நேர்மையாக தேர்தல் முடியும்வரை மறைப்பதற்கு ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச மரியாதையாவது மிஞ்சும்.
எதைச் சொன்னாலும் நம்பித் தலையாட்டும் கட்சிக்காரர்களைப் போலவே மக்களையும் கருதினால் என்ன ஆகும் என்பது பற்றிய முன் அனுபவம் அவருக்கே உண்டு. உண்மையை மறுத்து தொடர்ந்து அடாவடி செய்பவர்கள் எப்போதும் வென்றதில்லை.
#தோணுச்சு
No comments:
Post a Comment