Thursday, March 27, 2014

மீடியா என சொல்லிக்கொள்ளும் செய்தி வியாபாரிகள்

நேற்று வேந்தர் டிவியின் துவக்க நாள். வாழ்த்திப்பேசிய மோடி, செய்தி வியாபாரிகள் என்று மீடியாக்களை கடுமையாக விமர்சித்தார். கேஜ்ரிவாலும் இதே குற்றச்சாட்டைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இதை உண்மை என்று மீடியாக்கள் தாமாகவே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

இதோ அதோ என்று இழுத்தடித்துவிட்டு ஒரு வழியாக ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தனது வாதத்தை துவங்கினார் அரசு வழக்கறிஞர் பவானி சிங். ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார் என்று நீதிபதியிடம் பட்டியலிட்டார். 


இதனை நீங்கள் யாரும் செய்தியாக வெளியிடமாட்டீர்கள் என்று கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாகவே மீடியாக்களிடம் கூறினார். அவர் கூறியது போலவே மறுநாள் பெரும்பாலான பத்திரிகைகள் இதை பெட்டிச் செய்தியாகக்கூட வெளியிடவில்லை. தமிழ் இந்து மட்டும் கொசுறுச் செய்தியாக இதை குறிப்பிட்டிருந்தது. அதில் கூட 4000ம்கோடி என்பதை கவனமாக மறைத்திருந்தது. ஆனால் செய்தி தொலைக்காட்சிகள் எதுவும் இதைப்பற்றி பேசவே இல்லை.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களின் மதிப்புக்கும் சம்மந்தம் இல்லை. அதிகாரிகளை பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில்நிலங்களை வாங்கினார் என்பது பவானிசிங்கின் குற்றச்சாட்டு

மாதம் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்ற காலத்தில் ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் பற்றி, அரசு வழக்கறிஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல்:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.
2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா
3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா
4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்
5. கன்யாகுமரி அருகே, மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்
6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்
7. தூத்துகுடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்
8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.
9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளது.
10. ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம்.

இந்தச் செய்தியை ஏன் பல பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஏன் தொலைகாட்சி சேனல்கள் கண்டு கொள்ளவில்லை? ஒரே காரணம்தான். நரேந்திரமோடியும், கேஜ்ரிவாலும் கூறுவது போல இவர்கள் அனைவருமே செய்தி வியாபாரிகள். இந்தச் செய்தியால் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கப்படக்கூடும். அதனால் மறைத்துவிட்டார்கள்.

ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் என மக்கள் பங்குபெறும் மீடியாக்கள் இன்று வலிமையாக இருக்கின்றன. எனவே 2G, சொத்துக்குவிப்பு வழக்கு, நிலக்கரி பேர ஊழல் என


அவர்கள் எதை மறைத்தாலும் அதை மக்களே வெளியே கொண்டுவருவார்கள். மேலே உள்ள இந்தப்பட்டியலே ஃபேஸ்புக் நண்பர்கள் பகிர்ந்துகொண்டதுதான். சமூகவலைத்தளங்களால் அரசியல்வாதிகளின் முகத்திரை மட்டுமல்ல, இந்த செய்தி வியாபாரிகளின் முகத்திரையும் கிழியும்.

1 comment:

radhu said...

Good one send a copy to Mr. Cho