Wednesday, April 16, 2014

பேப்பர் தோசை - தலைப்புச் செய்திகள் பாடல் வடிவில் - 16th Apr

செய்திகள் கைக்கு வந்த 3 மணி நேரத்தில் செய்திகளுக்கு மெட்டமைத்து, பாடகர்களுக்கு சொல்லித்தந்து, இசை கோர்த்து ரெக்கார்ட் செய்துவிடுகிறார், நண்பர் விவேக் நாராயண்.

புதுயுகம் தொலைகாட்சியில் வரும் பேப்பர் தோசை என்ற நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் தினமும் இந்த அசுர முயற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள். நிகழ்ச்சியை இரவு 10 மணிக்கு காணலாம்.

இன்றைய தலைப்புச் செய்திகளை பாட்டாக கேளுங்கள்.

மோடி
சோனியா
தமிழகம் வருகை
பாதுகாப்பு பணிகள்
பலமா இருக்கு
குமரியில் சோனியா
கிருஷ்ணகிரி, சேலம்,
கோவையில் மோடி
இரண்டு தலைவர்கள்
தமிழ்நாட்டில் தீவிரம்
ஓட்டுவேட்டை தீவிரம்
//குமரியில் சோனியா
சாதனை பட்டியல்
ஐ.மு.கூட்டணி
பத்தாண்டில் சாதனை
தமிழ்நாட்டில் காங்கிரசு
தனியா இல்லை
கூடியிருக்கும் கூட்டம்
இதற்கு சாட்சி
சோனியா பேச்சு
//முன்னேற்ற பாதைக்கு
தே.ஜ. கூட்டணி
மாற்றம் காண ஓட்டு
பாஜகவுக்கு போடு
தமிழ்நாட்டில் மோடி
தீவிரமா பரப்புரை

இறுதிக்கட்ட பாதுகாப்பு
கூடுதலாக பாதுகாப்பு
வேட்பாளருக்கும் பாதுகாப்பு
காவல்படை குவிப்பு
ஆணையம் அறிவிப்பு
மதரீதியா பரப்புரை செய்ய
தேர்தல் ஆணையம் தடை
பிரவீன்குமார் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் அறிக்கை
பாமக தேர்தல் அறிக்கை
மதுஒழிப்பு
இலவச கல்வி
சாதிவாரியா இடஒதுக்கீடு
வாக்குறுதிகளை அள்ளிவீசி
அறிக்கை வெளியீடு

தொடருது தொடருது
போராட்டம்
விசைத்தறி தொழிலாளர்
போராட்டம்
வேண்டும் வேண்டும்
கூலி உயர்வு வேண்டும்
சங்கரன்கோவிலில்
சாலையை மறித்து
விசைத்தறி தொழிலாளர்
போராட்டம்
கருப்புக் கொடி கட்டி
கஞ்சித் தொட்டி திறந்து
திருப்பூரில் போராட்டம்
தொடருது தொடருது
போராட்டம்

கூடாது கூடாது
பி.சி.சி.ஐ. தலைவராக
சீனிவாசன் கூடாது
சூதாட்ட வழக்கு
முடியும் வரை
மீண்டும் தலைவராக கூடாது
உச்சநீதிமன்றம் கண்டிப்பு

போராட்டம் போராட்டம்
ஹைதி நாட்டில் போராட்டம்
அரசுக்கு எதிரா போராட்டம்
ஹைதி அதிபர் விலக
ஓரணியாய் வீதியில்
பேரணியாய் பொதுமக்கள்
கோசமிட்டு போராட்டம்

நிலா நிலா வெண்ணிலா
நிறம் மாறிய வெண்ணிலா
சந்திரகிரகணம் தோன்றியதால்
நள்ளிரவில் வெண்ணிலா
நிறம் மாறியது பொன்நிலா
அமெரிக்காவின் கொலம்பியாவில்
கொத்துக் கொத்தாய் மக்கள்
கூடி கண்டுகளித்தனர்

மொனாக்கா ஓபன் டென்னிஸ் போட்டி
செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்

கிரிக்கெட் திருவிழா கோலாகலம்
ஏழாவது ஐ.பி.எல். போட்டிகள்
அபுதாபியில் தொடக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில்
முதல் போட்டி
மும்பை இண்டியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிகள் மோதல்

No comments: