Tuesday, May 6, 2014

ட்விட்டரில் ரஜினியே பரப்பிய கோச்சடையான் ஸ்பாம்

ரஜினி படத்தைப்போட்டு மற்றவர்கள் விளம்பரம் செய்வது ஓகே. ஆனால் ரஜினியே தன் படத்தைப்போட்டு விளம்பரம் செய்வது இம்சை.


ரஜினி ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்றதும் நானும் ஃபாலோ பட்டனை அழுத்திவிட்டேன். அழுத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சில ஆயிரம்பேர் அவரை தொடர ஆரம்பித்திருந்தார்கள். அந்த அளவுக்கு வேகம். அந்த வேகத்துக்கும் முனைப்புக்கும் காரணம் ரஜினியுடன் பேசலாம் அல்லது ஏசலாம் என்ற ஆர்வம்தான்.

ஆனால் ஒரு தானியங்கி சாஃப்ட்வேர் (bot) இயந்திரத்தனமாக "Thank you for being a part of the fan family. Here is an exclusive Kochadaiiyaan poster for you, with a link attached to it." என்று கோச்சடையான் விளம்பரம் செய்துகொண்டிருந்தது.

ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு நேரடியாகத்தான் வரவேண்டும். ஏனென்றால் இது சமூகவலைத்தளம். இங்கு மனிதர்களைத்தான் எதிர்பார்க்கிறோம்... ரோபோக்களை அல்ல.

5 comments:

umakanth tamizhkumaran said...

செம ,, தனக்குதானே விளம்பரம்

umakanth tamizhkumaran said...

செம ,, தனக்குதானே விளம்பரம்

கிருத்திகாதரன் said...

ஒ..அப்படியா..நல்ல வேளை..அந்த பக்கம் போகவில்லை..

கிருத்திகாதரன் said...

நல்ல வேளை..தப்பித் தேன்..அந்த பக்கம் போகாமல்..

Anonymous said...

A Movie without Rajini's On screen presence.125 Crores.How to get it back ? Only Rajini has to get into the direct Promo for the Film.

Rajini joining twitter is mainly to promote Kochadaiyan..then what would expect ? Rajini's Ponmozhigal :-)