குவிந்திருக்கும் கோப்புகளை தூசி தட்டி அடுக்கி வைப்பது நல்லதுதான். ஆனால் அவற்றை அழிப்பதற்கு முன்பு வீட்டிலிருக்கும் அனைவரையும் இது தேவையாக என கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் இது போல எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி சர்க்கார் பழையதை ஒழிப்பதாகச் சொல்லி போகி கொண்டாடியிருக்கிறது.
ஒரு நாடு தொடர்புடைய எந்த கோப்பும் மோடிக்கு மட்டும் சொந்தமல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்புடையது. சொல்லப்போனால் அதை வெறும் கோப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அவற்றில் உள்ளவை நாட்டின் வரலாற்றுப்பதிவுகள். எனவே கோப்புகளை அழிப்பது என்பதும், வரலாற்றை அழிப்பது என்பதும் ஒன்றுதான். இது மோடி அரசுக்கு தெரியாதது அல்ல.
எனவே பழைய கோப்புகளை அழிப்பது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்ததும், அவசரம் அவசரமாக அழித்தபின் அறிவித்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. BIG DATA என யார் யாரோ செல்ஃபி எடுத்துக்கொள்வதையெல்லாம் இந்த உலகம் ஆடியோ, வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான டெக்னாலஜியும், வாய்ப்பும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.
அப்படி இருக்கும்போது அழிப்பதற்கு முன் அவற்றை டிஜிட்டலாக பிரதி எடுக்க ஏன் மோடி சர்க்கார் முயற்சிக்கவில்லை?
யாரையும் கேட்காமல் பழைய கோப்புகளை அழிக்க முடிவெடுத்தது ஏன்?
எந்தெந்த கோப்புகள் அழிக்கப்பட்டன என்பதற்கு பட்டியல் உள்ளதா?
அந்தக் கோப்புகள் இருப்பதால் இப்போதைய இந்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு அழிப்பு ஒன்றுதான் தீர்வு என்ற முடிவை பரிந்துரைத்தது யார்?
இதற்காக யார் யாரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது?
தற்போதைய மோடி அரசுக்கு ஒரு விண்ணப்பம். அடுத்த முறை கோப்புகள் எதையாவது அழிக்க முடிவெடுத்தால் மக்களுக்கு ஒரு கடுதாசி போடுங்கள். எத்தனையோ மில்லியன் இந்தியர்கள் அவற்றை பத்திரப்படுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். கேட்டுக்கொண்டால் நாங்களே கூட அவற்றை டிஜிட்டலாக மாற்றித்தருகிறோம்.
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் மோடி சர்க்கார் இந்திய வரலாற்றின் சில பக்கங்களை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்த வரலாறு முக்கியமா? இல்லையா என்பதை தனியாக விவாதிக்கலாம்.
இப்போதைக்கு ஒரே ஒரு எளிய கேள்வி. அவசரம் அவசரமாக நாட்டு மக்களுக்குத் தெரியாமல் அழிக்கவேண்டிய அவசரம் என்ன?
#கேப்போம்ல

No comments:
Post a Comment