காத்து ஃப்ரீ.. ஆனா சுவாசிக்கறதுக்கு துட்டு குடுத்துடணும்.
ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இப்படித்தான் நம்மை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றன. அதாவது இன்டர்நெட் ஃப்ரீயாம். ஆனால் நாம் பயன்படுத்தும் வெப்சைட்டுகளுக்கும், ஆப்ஸ்களுக்கும் கட்டணமாம்.
உதாரணமாக internet.org என்ற வெப்சைட்டுக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். ரிலையன்ஸ் வழியாக இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உள்ளே வா அல்லது வெளியே போ என்று துரத்தும். அது போல ஒவ்வொரு நிறுவனமும் விதம் விதமாக வெப்சைட்டுகளுக்கும், ஆப்ஸ்களுக்கும் பூட்டு போடும். நாம் பணம் கட்டினால் மட்டும்தான் அந்த பூட்டுகள் திறக்கும்.
இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய TRAI அமைப்பு அந்த பணக்கார காசுபறிக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உண்டு. அந்த நிறுவனங்களின் செல்வாக்கு அப்படி. அதனால் இப்போதே விழித்துக்கொண்டு நமது எதிர்ப்பைக்காட்டுவோம்.
இன்டர்நெட் என்பது ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி நம் அனைவருக்கும் பொதுவானது என்ற உரிமையை நிலைநாட்டுவோம்.
http://www.savetheinternet.in/ இந்த இணையதளத்தில் நமது எதிர்ப்பை பதிவு செய்வோம். நமது ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சக்தியையும் நிரூபிப்போம்.
#netneutrality
No comments:
Post a Comment