போலிகளை தோலுரித்த அந்த தைரியமான நடவடிக்கைக்கு பெயர் என்ன?OPERATION 136
OPERATION 136 -ன் நோக்கம் என்ன?பணம் வாங்கிக் கொண்டு, செய்திகளை திரித்து மக்களிடையே குழப்பத்தையும், சண்டைகளையும் உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு சாராருக்கு ஆதரவு திரட்டும் களவாணி வேலையை பல ஊடக நிறுவனங்கள் செய்து வருகின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான்.
எத்தனை செய்தி நிறுவனங்கள் இந்த ஆபரேஷனில் கண்காணிக்கப்பட்டார்கள்?இந்தியா முழுவதும் (டிவி, எஃப்.எம், செய்தித்தாள் உட்பட) மொத்தம் 25.
போலிச் செய்திகளை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு பேசப்பட்ட தொகை எவ்வளவு?50 முதல் 500 கோடி வரை
செய்தி நிறுவனங்கள் எதைச் செய்ய விலைபேசப்பட்டார்கள்?தேர்தல் நெருங்க நெருங்க...
1. ராமாயணம், மகாபாரதம் என்றால் சிக்கல். எனவே பகவத்கீதையை பரப்பி மறைமுகமாக மக்களை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துத்துவா பற்றி பேச வைப்பது.
2. பிஜேபி தலைவர்களின் இமேஜ் உயரும்வகையில் செய்திகளை வெளியிடுவது.
3. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களின் இமேஜ் பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவது.
கோப்ரா போஸ்ட் பகுதி பகுதியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அதில் வெகு சில நிறுவனங்கள் எடுத்தவுடனேயே எங்களை விலைபேச முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். சிலர் உடனே ஒப்புக்கொள்ள முடியாது என்கிறார்கள். சில நிறுவனங்கள் பணத்தை கருப்பாக கொடுக்க முடியுமா என்கிறார்கள். சிலர் பளிச்சென்று வாயெல்லாம் பல்லாக நாங்கள் எதற்கும் ரெடி என்கிறார்கள்.
வீடியோக்கள் வெளியானதும், இந்த ஆபரேஷன் போலி, ஒருதலைபட்சமானது என்று சில நிறுவனங்கள் மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக டைம்ஸ் குழுமமும், இந்தியா டுடே குழுமமும் இதை மறுத்திருக்கிறார்கள். போகப் போக எல்லா நிறுவனங்களும் அந்த வீடியோவில் இருப்பது எங்க ஆள் அல்ல, எங்கள் குரல் அல்ல என்று மறுப்பார்கள். ஆனால் ஊடகத் துறை கரை படிந்தது என்பதையோ, பணத்துக்கு விலைபோய் விட்டது, அதிகாரத்தின்முன் மண்டியிட்டுவிட்டது என்பதையோ, மிச்சமிருக்கும் நேர்மையாளர்கள் உட்பட, எவராலும் மறுக்க முடியாது.
வெல்டன் கோப்ராபோஸ்ட்!
பின் குறிப்பு - இதே போல பணம் கொடுத்து மீடியாவை வளைத்துப்போடும் வேலையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் செய்யும், செய்திருக்கும் என்று தீர்மானமாக நம்புகிறேன் அதையும் யாராவது அம்பலப்படுத்தினால் வரவேற்கிறேன்.