Showing posts with label ISR Selvakumar. Show all posts
Showing posts with label ISR Selvakumar. Show all posts

Tuesday, March 31, 2026

The Red Line (2026) - நெட்ஃபிளிக்ஸ் - விமர்சனம்

 


தொழில்நுட்பம் வளர வளர, அதை வைத்து நடக்கும் மோசடிகளும் (Scams) விஸ்வரூபம் எடுக்கின்றன. அப்படியொரு போன் கால் மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பை இழக்கும் ஆர்ன் (Nittha Jirayungyurn), சட்டத்தின் கதவுகள் தட்டினாலும் நீதி கிடைக்காத நிலையில், தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுடன் இணைந்து அந்த மோசடி கும்பலை வேட்டையாட முடிவெடுக்கிறார். இது வெறும் பழிவாங்கும் படலமல்ல.

நடிப்பு: நித்தா ஜிராயுங்யூர்ன் (Nittha Jirayungyurn) மற்றும் எஸ்தர் சுப்ரீலீலா (Esther Supreeleela) இருவரும் படத்தின் தூண்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக நித்தா காட்டும் அந்தத் தவிப்பும், பின்னாளில் உருவெடுக்கும் ஆக்ரோஷமும் மிகச் சிறப்பு. மோசடி கும்பலின் பின்னணியில் இருக்கும் எதார்த்தங்களை எஸ்தர் தன் நடிப்பால் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்: 'Girl from Nowhere' புகழ் இயக்குநர் சிதிசிரி மோங்கொல்சிரி (Sitisiri Mongkolsiri) இந்தப் படத்தை இயக்கியுள்ளார். போன் கால்கள் மூலம் நடக்கும் மனரீதியான சித்திரவதையைத் திரையில் கொண்டு வந்த விதம் அபாரம். படத்தின் ஒளிப்பதிவு தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைகளுக்கு இடையே உள்ள அந்தப் பதற்றத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது.

படம் பற்றிய ஒரு சிறு குறிப்பு (Filmography Details):

  • திரைப்படம்: The Red Line (2026)

  • ஓடிடி தளம்: Netflix

  • வகை (Genre): Crime / Thriller / Drama

  • நடிகர்கள்: நித்தா ஜிராயுங்யூர்ன், எஸ்தர் சுப்ரீலீலா, சுதிமா மஹோலகுல் (Chutima Maholakul)

  • இயக்கம்: சிதிசிரி மோங்கொல்சிரி (Sitisiri Mongkolsiri)

மாத்தியோசி (My View): இன்று நாம் அனைவரும் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் ஒரு ஆபத்தான ஆயுதம் என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. வழக்கமான ஆக்ஷன் த்ரில்லராக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலையும், சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் அவமானத்தையும் படம் ஆழமாகப் பேசுகிறது. குறிப்பாக, 'The Red Line' என்ற தலைப்பு, சட்டத்தின் எல்லை மற்றும் ஒரு மனிதன் தன் நியாயத்திற்காகத் தாண்டும் அந்த தார்மீக எல்லையைக் குறிப்பது சிறப்பு.

நாமும் ஏ.ஐ (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த பாடம்.

பார்க்கலாமா? நிச்சயமாக. 'Jamtara' தொடர் டிஜிட்டல் மோசடிகளின் வியாபாரத்தைப் பற்றிப் பேசியது என்றால், 'The Red Line' அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு சராசரி மனிதனின் வலியைப் பேசுகிறது. விறுவிறுப்பான த்ரில்லரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 'The Red Line' உங்கள் வீக்கெண்ட் லிஸ்டில் இருக்க வேண்டிய படம்.

  • ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

Friday, March 27, 2026

டாப் 10ல் எந்தெந்த ஏ.ஐ இருக்கு?

 


மை டியர் மக்காஸ்,

AI உலகம் தினசரி மாறிக் கொண்டிருக்கிறது.நேற்று வரை கற்பனை செய்ய முடியாத விஷயங்கள் இன்று நடைமுறையில் இருக்கின்றன. நான் தொடர்ந்து AI-ஐ கவனித்து வருபவன் என்பதால், இன்றைய மிக முக்கியமான 10 AI Trends-ஐ உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றை கூகுள் டிரெண்ட்ஸ் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.

இந்த லிஸ்ட் தற்போதைய Heat level (எவ்வளவு வேகமாக வளர்கிறது என்ற) அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Top 10 AI Trends 2026

1. Agentic AI & Autonomous Agents (Heat: 98) AI இப்போது வெறும் பதில் சொல்லும் இயந்திரமாக இல்லாமல், தானாகவே திட்டமிடும், யோசிக்கும், பல படிகளில் பணிகளைச் செயல்படுத்தும் திறன் பெற்று வருகிறது. AutoGPT, LangGraph, Claude-இன் Computer Use போன்ற கருவிகள் இந்த அலையை வழிநடத்துகின்றன.

2. Multimodal AI Models (Heat: 95) ஒரே மாடலில் உரை, படம், ஒலி, வீடியோ என அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன். GPT-4o மற்றும் Gemini Ultra இதற்கு சிறந்த உதாரணங்கள். இது AI-ஐ மனிதர்களுக்கு மிக நெருக்கமாக்குகிறது.

3. Small Language Models (SLMs) (Heat: 91) பெரிய மாடல்களுக்கு பதிலாக, சிறிய, வேகமான, குறைந்த செலவில் இயங்கும் மாடல்கள் வருகின்றன. Phi-3, Mistral 7B, Llama 3 போன்றவை மொபைலிலும், எஜ் டிவைஸ்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனியுரிமை மற்றும் செலவு குறைப்புக்கு இவை மிக முக்கியம்.

4. AI in Code Generation & DevOps (Heat: 89) GitHub Copilot, Cursor, Devin போன்ற கருவிகள் மென்பொருள் உருவாக்கத்தை முழுமையாக மாற்றி வருகின்றன. AI இப்போது கோட் எழுதுவது மட்டுமல்லாமல், சோதனை செய்து, டெப்ளாய் செய்யும் வரை தானாகச் செய்கிறது.

5. Retrieval-Augmented Generation (RAG) (Heat: 87) LLM-களை நிகழ்நேர தரவுகளுடன் இணைக்கும் தொழில்நுட்பம். இது AI பதில்களை உண்மைக்கு நெருக்கமாகவும், புதுப்பித்த நிலையிலும் வைக்க உதவுகிறது. எந்த நிறுவன AI-க்கும் இது இன்றியமையாதது.

6. AI Safety & Alignment Research (Heat: 84) AI மிக சக்திவாய்ந்ததாக ஆகும் போது, அதை மனித மதிப்புகளுடன் இணைப்பது மிக முக்கியம். Constitutional AI, RLHF, Interpretability போன்ற ஆராய்ச்சிகளில் Anthropic, DeepMind, OpenAI போன்ற நிறுவனங்கள் தீவிரமாக உழைத்து வருகின்றன.

7. Vernacular & Regional Language AI (Heat: 81) இந்திய மொழிகளில் AI-ஐ வளர்ப்பது இப்போது பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. Hindi, Tamil, Telugu, Bengali உள்ளிட்ட 20+ மொழிகளில் தரமான AI வருகிறது. Krutrim மற்றும் Sarvam போன்ற இந்திய ஸ்டார்ட்அப்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன.

8. AI-Generated Media & Deepfakes (Heat: 79) Sora, Runway, ElevenLabs, HeyGen போன்ற கருவிகள் யாரும் ஹைப்பர்-ரியலிஸ்டிக் வீடியோ, ஆடியோ உருவாக்கும் அளவுக்கு வந்துவிட்டன. இது படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, பெரிய சவால்களையும் உருவாக்குகிறது.

9. Edge AI & On-Device Intelligence (Heat: 76) மொபைல், வேரபிள்ஸ், IoT சாதனங்களில் AI நேரடியாக இயங்கும் தொழில்நுட்பம். Apple-இன் M4, Qualcomm Snapdragon, NVIDIA Jetson போன்ற சிப்களால் இது சாத்தியமாகியுள்ளது.

10. AI Regulation & Governance (Heat: 73) EU AI Act, இந்தியாவின் DPDP Act உள்ளிட்ட சட்டங்கள் AI-ஐ எப்படி உருவாக்குவது, பயன்படுத்துவது என்பதை மறுவடிவமைக்கின்றன. இது வரும் காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.


உங்களுக்கு இந்த ட்ரெண்ட் வரிசை சுவாரசியமாக இருக்கிறதா? கமெண்டில் சொல்லுங்கள்.

  • ISR Selvakumar ISR AI Studio | ISR Ventures


Saturday, July 27, 2024

மைக்ரோசாஃப்ட் வழங்கும் இலவச படிப்பு

மைக்ரோசாஃப்ட், கூகுள், என்வீடியா போன்ற நிறுவனங்கள் பல முக்கிய படிப்புகளை இலவசமாகவே சொல்லித்தருகின்றன. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாகக் கற்றுக்கொண்டு, சான்றிதழும் பெறலாம். டேட்டா அனலிட்டிக்ஸ் தற்போது பிரபலமாகிவரும் படிப்பு. மைக்ரோசாஃப்ட் இதனை இலவசமாகக் கற்றுத் தருகிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
MICROSOFT IS OFFERING FREE COURSES ON DATA ANALYTICS.

1. Get started with Microsoft data analytics

https://learn.microsoft.com/en-us/training/paths/data-analytics-microsoft/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmH9leHRuA2FlbQIxMAABHYVNvQG_KzTj48GY6arTxpc2LVWKm7SDwifO4N4evPYiqxnH5IW2jtpxsQ_aem_UP1QSrDoQxxtiVUs0yFjZA

2. Create and use analytics reports with Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/create-use-analytics-reports-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmK9leHRuA2FlbQIxMAABHWnsKq4mjg8cr9PtHif1-kcIMTo-q7s51uef2wYAwPynt4mnt9ant_URiw_aem_-vVPlp2mce7ZazB0c9f-Uw

3. Delivelop dynamic reports with Microsoft Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/develop-dynamic-reports-microsoft-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmOBleHRuA2FlbQIxMAABHY0IcMsVDTzoSN7dJ8EJc6Yzf6sHuMP9eiRVkXaWryk53FwwVCeQrdSEkw_aem_uPwsrVH4YHeLohtmp-rvAw

4.Design and build tabular models

https://learn.microsoft.com/en-us/training/paths/design-build-tabular-models/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmQFleHRuA2FlbQIxMAABHRlJBSqXQe8f7Ay2WDlAZmDeSD_X6A2YSrCxbB2T0IYX4sqPmRi8BOk-JQ_aem_rl456PMCENf4R15VA525vQ

5. Model data with Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/model-data-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmShleHRuA2FlbQIxMAABHca1GMW9cZJRuyRkq4lDGqBVlskYPa_tVzqw0fHsvMzeDOcpxpyUUa5kxA_aem_DCloPo9l8c7QGV-MJs_0sw

6. Manage workspaces and datasets in Power BI

https://learn.microsoft.com/en-us/training/paths/manage-workspaces-datasets-power-bi/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmT9leHRuA2FlbQIxMAABHabnTO0sQRGWgkT6z_Be3QUcOrDy2mA1IG-M1uhR1NfrVOr2dG6zzoPagA_aem_9LXzYUESDFb8W5Tzjy9__A

7. Build Power BI visuals and report

https://learn.microsoft.com/en-us/training/paths/build-power-bi-visuals-reports/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmVhleHRuA2FlbQIxMAABHRaSLsvyQadiPRD-DXJRNofT6nwIiNGyI0bcj808SNzW5bG07d8ZpX2j1Q_aem_Nl-s3vSwLB9BlVsMIovbQw

For full Data Analytist Career Path

https://learn.microsoft.com/en-us/plans/xe27izpkg328oy/?wt.mc_id=studentamb_403481&fbclid=IwY2xjawERmW1leHRuA2FlbQIxMAABHcw6mSt3ITSwN1MF6eC05QpUZcI-WlcovVCOHhQVjPHIv2vVaYC96kdbfQ_aem_rbS4SnVUAoJcAghnDzV1xA


Thursday, July 25, 2024

சித்ரா லட்சுமணனுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கா?


சார் வணக்கம்! நல்லா இருக்கீங்களா?

நேற்று இனிய ஆச்சரியமாக சித்ரா லட்சுமணன் அழைத்தார். நான் வணக்கம் சொல்வதற்கு முன், மளமளவென்று அவருடைய பாணியில் நலம் விசாரித்தார்.
அப்பாவின் திரைப் பெயர் ஐ.எஸ்.ஆர், முழுப்பெயர் ஐ.எஸ்.ராமச்சந்திரன்தானே என்றார்.
ஆமாம் சார், என்ன விஷயம் என்றேன்.
அப்பாவின் முழுப்பெயரைக் கேட்டு கேள்வி வந்திருக்கிறது. அதனால் முழுப்பெயரை உறுதி செய்வதற்காக உங்களை அழைத்தேன் என்றார்.
இரண்டு ஆச்சரியங்கள். இன்னமும் யாரோ ஒருவர் எங்கள் தந்தையை நினைவு வைத்திருக்கிறார். அதைவிட ஆச்சரியம், கூகுள், விக்கிபீடியாவைத் தேடி பதில் தராமல், மெனக்கெட்டு குடும்பத்தாரை அழைத்து உறுதி செய்து கொண்ட திரு. சித்ரா லட்சுமணன்.
”எப்படியெல்லாம் கேள்விகள் வருது பாருங்க”, என்றார்.
”சார் அந்தக் கேள்விகள் உங்களிடம் வருவதற்கு காரணமே, நீங்கள் எப்படியும் (உறுதி செய்யப்பட்ட) பதில் தந்து விடுவீர்கள் என்று நாங்கள் எல்லோருமே நம்புகிறோம்”, என்றேன்.
ஆபிஸ் வாங்க, என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
விரைவில் சந்திப்பேன். அவரிடம் கேட்பதற்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பதில்கள் வாங்கி வருகிறேன்.

Tuesday, April 30, 2024

ஜெயமோகனும் கண்ணதாசனும்!

அழைப்பு!

ஜெயமோகனின் பிரமாதமான சிறுகதை! இன்று காலையில் வாசித்தேன். ஆழமான அறிவியல் புனைவு. மனோஜ்நைட் ஷியாமளன் இக்கதையை வாசித்தால் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிடுவார்.
“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்கிறது இந்தக் கதை. இதுதான் நான் இயக்கியிருக்கும் ”யாதெனக்கேட்டேன்” திரைப்படத்தின் மையப் புள்ளி. அவர் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு வெளியைப் படைத்து அறிவியல் புனைவாக எழுதியிருக்கிறார். நான் ஒரு குடும்பக் கதைக்குள் இந்த சிந்தனையை பொருத்த முயற்சி செய்திருக்கிறேன்.
மிகவும் நுட்பமான இந்தச் சிந்தனையை கதையாக எழுதும்போது மையப்புள்ளியிலிருந்து எதைநோக்கி கதையை செலுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வேண்டும். அதனை நான் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையிலிருந்து பெற்றேன்.
ஜெயமோகனின் இந்தக் கதையை வாசித்துவிட்டு, கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் கவிதையை வாசியுங்கள், அல்லது கண்ணதாசனிலிருந்து ஜெயமோகனுக்குச் செல்லுங்கள். யாதெனக்கேட்டேன் திரைப்படம் இவ்விரு சூரியன்களின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
என் நீண்ட நண்பர்கள் பட்டியலில் சிலர் மட்டும் யாதெனக்கேட்டேன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் யாதெனக்கேட்டேன் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளியாகும்.
ஜெயமோகனின் அழைப்பு சிறுகதை முதல் கமெண்டில் உள்ளது. அடுத்த கமெண்டில் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையை கொடுத்திருக்கிறேன்.

Wednesday, August 24, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

 

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

தனபால் - விழுப்புரம்
ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 27 வரை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக அனுப்பலாம். அதற்கான ஆன்லைன் இணைப்புகள் ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் (ISR Ventures) நிறுவனத்தின் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் வெளியாகும். ஏற்கனவே தொடர்பில் உள்ளோருக்கு வாட்சப் வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள்.

Thursday, August 18, 2022

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ISR 5 நிமிட குறும்படப் போட்டி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் உரிமை - Child Right பற்றி வலியுறுத்தும் படங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் என்பதால் போட்டியின் நல் நோக்கத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.

ஆகஸ்டு 22ம் தேதி முதல் துவங்கவுள்ள ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு இதன் மூலம் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
எந்தக் கட்டணமும் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் TNOU - School of Journalism and New Media Studies சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த படங்களுக்கான 3 பரிசுகளுடன் பல்வேறு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் சில முன்னணி கல்வி மற்றும் மீடியா நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யார் யார் என்பதை தொடர்ச்சியாக அறிவிப்போம். அவர்களுடன் இணைந்து போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை புரிய வைத்து தரமான படங்களையும், படைப்பாளிகளையும் உருவாக்குதுதான் இப்போட்டியின் நோக்கம்.
இப்போட்டி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவுக்கு வரும். போட்டியின் இறுதியில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் குறைந்தபட்ச பங்களிப்பாக, இது பற்றி நன்கு அறிந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகம் செய்த திருப்தி எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9962295636 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு எப்படி பங்கேற்பது போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றி!

Friday, July 8, 2022

யாதெனக்கேட்டேன் ஸ்பெஷல் ஷோ அனுபவம் 01

நான் இயக்கியுள்ள #யாதெனக்கேட்டேன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி!

ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போதே கிட்டத்தட்ட இது எந்த வயதினருக்கு பிடிக்கும் என்பது தெரிந்துவிடும். ஆண்களுக்குப் பிடிக்குமா, பெண்களுக்குப் பிடிக்குமா, குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்பதையும் ஒரு ஸ்க்ரிப் ரைட்டரால் ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

எனவே என் அனுமானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் வரவழைத்து (Focus Audience) அவர்களிடம் படத்தைப் பற்றிய கருத்து கேட்பதற்காக திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி இது.

அழைத்த அனைவரும் வந்திருந்து கண்டு இரசித்தார்கள். அவர்களுடன் என் நலம் விரும்பிகளும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு மத்தியில் படத்தை வியாபார ரீதியாக மதிப்பீடு செய்பவர்களும் படத்தை இரசித்தார்கள்.

விரைவில் யாதெனக்கேட்டேன் வெற்றிகரமாகத் திரைக்கு வரும் செய்தி வரும். அதுவரையில் அவ்வப்போது சில புகைப்படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்ததும், இயக்கியதும் அழகான அனுபவம். படத்தின் கருவும் ஒரு மாபெரும் அனுபவத்தைப் பற்றியதுதான். விரைவில் நீங்கள் யாதெனக்கேட்டேன் படம் பார்ப்பீர்கள். அந்த அனுபவத்தை உணர்வீர்கள். பார்த்தபின் நான் கூறியதை புன்னகையுடன் ஏற்பீர்கள்.

திரைப்படம் வெளியாகும் முன் எனது அன்புக்குரியவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள். அதனால் அனைவரையும் எப்படியாவது நேரில் சந்திப்பேன்.

Thanks to YadenaKaten cast & crew for their contribution and support. As the captain of the ship I also take responsibility to promote them along with the movie. The "YadenaKaten Experience" begins.

Dear Makkas, soon lets meet for a beautiful YadenaKaten Experience.

மகிழ்ச்சி!

#YadenaKaten #preview