Sunday, August 31, 2008

ஜே.கே. ரித்திஷ் - விஜயகாந்த்! இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?

சொந்தப் பணமா? எங்கிருந்தோ வந்தப் பணமா? என்று தெரியாது.  ஆனால் தமிழகத்தில் இன்று இரண்டு பேர் இன்று 'தில்'லாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் ஜே.கே.ரித்திஷ்.

விஜயகாந்த், விருதாச்சலத்தில் ஆரம்பித்தார்.  2011ல் அடுத்த முதல்வர் ஆகிவிட்டுத்தான் நிற்பேன் என்கிறார். உங்கள் கொள்கை என்ன? தமிழகத்தை முன்னேற்ற உங்கள் யோசனை என்ன என்றால், இப்போது வெளியே சொல்ல முடியாது, சொன்னால் மற்ற கட்சிகள் காப்பியடித்துவிடுவார்கள் என்று தைரியமாக காமெடி பண்ணுகிறார்.

ஜே.கே ரித்திஷ் கானல் நீரில் சொதப்பலாக ஆரம்பித்து, நாயகனில் வந்து ஹிட் கொடுத்து நிற்கிறார். பட்டி தொட்டியெங்கும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக போஸ்டர்கள், பேனர்கள், படத்தில் பில்ட் அப் துவக்கப் பாடல் என பிரமாண்ட காமெடி லுக் கொடுக்கிறார்.

விஜயகாந்த் - ஜே.கே. ரித்திஷ் இருவருக்கும் பணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை.  ஆனால் இருவரும் பணத்தை செலவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

விஜயகாந்த் சினிமாவில் வேண்டுமானால் கேப்டனாக இருக்கலாம். அரசியலில் தொண்டனாகக் கூட முடியாது என்றார்கள். ஆனால் விருதாச்சலத்தில் ஹிட் கொடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜே.கே. ரித்திஷை ஒரு பணக்காரக் கிறுக்கன். முன்பு 'சின்ன எம்.ஜி.ஆர்' என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் ஆட்டம் போட்டுவிட்டு காணாமல் போனது போல, இவரும் அம்பேல் ஆகிவிடுவார் என்றார்கள். ஆனால் 'நாயகன்' ஹிட் கொடுத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

விஜயகாந்த் நான் தனியாகவே ஜெயிப்பேன். 2011ல் நான்தான் முதல்வர் என்கிறார்.
ஜே.கே.ரித்திஷிம் ஓப்பனிங் சாங்கெல்லாம் வைத்து நானும் தனிதான் என்று சொல்லிவிட்டார்.

சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் என்று முதலில் கிண்டல் செய்யப்பட்டார்கள். ஆனால் ஆளுக்கொரு ஹிட் கொடுத்து ஒருவேளை சீரியஸ் பார்ட்டிகளோ என்று அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள்.

இவர்கள் 'காமெடி வெடியா' அல்லது 'தொடர் சரவெடியா'?
பார்க்கலாம்!

13 comments:

மங்களூர் சிவா said...

அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் பற்றிய அபாண்டங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும்வரை வலையுலகில் கலவரங்கள் பல நடக்கும் என்பதை இங்கு எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்

அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்
மங்களூர் கிளை

மங்களூர் சிவா said...

விஜயகாந்தா யார் அது!?!?

thamizhparavai said...

nice post... we will wait and see their shows(wheter it is comedy or serious)...
//விஜயகாந்தா யார் அது!?!?//
மங்களூராரே நாங்கெல்லாம் மதுரைக்காரய்ங்க..பார்த்து கமெண்ட்டுங்க.. இல்ல கேப்டன் அரசியலுக்கு முழுக்கு போட்டு, முழு மூச்சா கலைச்சேவையில இறங்கிடுவாரு....

rapp said...

அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் பற்றிய அபாண்டங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும்வரை வலையுலகில் கலவரங்கள் பல நடக்கும் என்பதை இங்கு எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்

இராப்

தலைவி

அகில உலக
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ்
மன்றம்

rapp said...

////விஜயகாந்தா யார் அது!?!?//
மங்களூராரே நாங்கெல்லாம் மதுரைக்காரய்ங்க..பார்த்து கமெண்ட்டுங்க.. இல்ல கேப்டன் அரசியலுக்கு முழுக்கு போட்டு, முழு மூச்சா கலைச்சேவையில இறங்கிடுவாரு....
//

ஏன் இந்த கொலைவெறி? வன்முறைக் கலாச்சாரத்தை ஏன் இப்படி தமிழ்நாட்டில் வளர்க்கப் பாக்கறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்.................

இவன் said...

என்னது எங்க தலைவர் J.K.ரித்தீஷ் கூட யார ஒப்பிடுறீங்க விஜயகாந்தையா அப்படியெல்லாம் ஒப்பிட கூடாது சொல்லீட்டேன்... இப்படி ஒப்பிட்டு இனி பாதிவெழுதினா இனி ஆட்டோ தேடி வரும்....

அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்
ஆஸ்திரேலிய கிளை

Tech Shankar said...



இந்தப்பதிவில் ஜே.கே.ரித்தீஷ் (ஜே.கே) போன பதிவில் ஜிட்டு. கிருஷ்ண மூர்த்தி (ஜே.கே.) - சூப்பர்ங்க. எங்கே இருந்துதான் தகவலைத் திரட்டுகிறீர்களோ?

Anonymous said...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஓபாமாவையே தன் தனி திறமையால் கவர்ந்த வருங்கால இந்திய பிரதமர் எங்கள் அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் பற்றிய அபாண்டங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும்வரை அகில உலக அளவில் பெறும் பிரச்சனைகள் வெடிக்கும் என்பதை இங்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நாளைய இந்தியா ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்
முகவை.

Unknown said...

Both vijakant and Rithish are not comedians. They are villains in the guise of hero. It is the people who are comedians.

Anonymous said...

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அவர்களை சின்ன பொடிபசங்ககிட்டேஇனி ஒப்பிடாதிங்க இல்ல ,இதை கண்டித்து மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ( ஜே.கே.ரித்தீஷ் மட்டும் கலந்துக்குவார் ஹி.ஹி)நடக்கும் .

Anonymous said...

They are not a commedians, we are the commedians (Viewrs)

Anonymous said...

:D Ha ha ha sema comedyngov

ISR Selvakumar said...

திடீர்னு ஜே.கே. ரித்திஷின் தளபதிகள் எல்லாம், ஒன்று சேர்ந்து கும்மி அடிப்பதைக் கண்டால்... ஏதாவது வீரத் தளபதி ரித்திஷ் வலைஞர் மாநாடு பிளான் நடந்துகிட்டிருக்கா?