Saturday, August 30, 2008

ஜே.கே வின் Fearless Love

சென்ற வாரத்தில் ஒரு நாள் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு சென்று வந்தார்கள். காரணம் . . .

ஜே.கே என்று அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
மனிதன், புனிதன் என்று எந்த வார்த்தைகளுக்கும் சிக்காமல் தனது எண்ணங்களை தத்துவங்களாக வெளிப்படுத்திய ஞானி.

கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் நடத்திவரும், Rishi Valley Schoolஐ சுற்றி பார்ப்பதுதான் அவர்களுடைய விஜயத்தின் நோக்கம். அங்கு செயல்படுத்தப்படும் கல்வி முறை பற்றி தெரிந்து கொள்வதற்க்காகவே அண்ணனும் தங்கையுமாக அங்கே சென்றார்கள் என்று தகவல்.
'Fearless Love' ஜே.கே-வின் தத்துவம் சொல்வது இதைத்தான். நமக்கு உயரம் பயம், பரிட்சை பயம், வியாபார பயம், வேலை பயம், எதிர்காலம் பயம், பேய் பிசாசு பயம் என்று பலவித பயங்களைத் தெரியும்.

ஆனால் ஜே.கே பயம் என்று சொல்வது எதை தெரியுமா?
"நான் உன் மேல் அன்பு செலுத்துகிறேன். பதிலுக்கு நீ என் மேல் அன்பு செலுத்தாமல் போய்விட்டால்?" இப்படி நினைப்பதை பயம் (Fear) என்கிறார். எதையும் எதிர் பாராமல் எதனிடமும் அன்பு செய். இதுதான் அவர் சொன்ன Fearless Love.

டிவி என்கிற மாயை இல்லாத 80கள். நான் சிறுவனாக இருந்தபோது, நல்ல புத்தகங்களும், படித்த பெரியவர்களும் எனக்கு ஜே.கே வை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

ஒரு நாள் சென்னையில் அவருடைய உரையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பறவைகளின் குரல்களுக்கிடையில் அவருடைய குரல் இன்னும் மெலிதாகக் கேட்டது. கேட்கவே இல்லை என்றும் சொல்லலாம்.  ஆனால் எனக்குள் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்தது. Fearless Love!

அவருடைய அந்த உரைதான் கடைசி உரை என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் அதன் தாக்கம் எனக்கு இன்னமும் இருக்கிறது.

சென்னையில் ஒரு கடைசி உரைக்குப் பின் - தனது தந்தை ராஜீவ்காந்தியை வன்முறைக்கு தின்னக் கொடுத்தவர்கள் பிரியங்காவும், ராகுலும். அவர்கள் எதைத் தேடி வந்திருப்பார்கள்?
Fearless Love? 
வாருங்கள் அன்பு செய்வோம்!

4 comments:

Anonymous said...

//"நான் உன் மேல் அன்பு செலுத்துகிறேன். பதிலுக்கு நீ என் மேல் அன்பு செலுத்தாமல் போய்விட்டால்?" இப்படி நினைப்பதை பயம் (Fear) என்கிறார். எதையும் எதிர் பாராமல் எதனிடமும் அன்பு செய். இதுதான் அவர் சொன்ன Fearless Love.//

ஆமாங்க செல்வா, சில சமயம் அன்பு செலுத்துதலே ஒரு கட்டாயமாக ஆகி விடுகிறது. அன்பு செலுத்துதலும் செலுத்தப் படுதலும் கூடக் குறைய இருத்தல் குற்றம் என்றாகிவிட்டது.

Tech Shankar said...



இந்தப்பதிவில் ஜிட்டு. கிருஷ்ண மூர்த்தி (ஜே.கே.) அடுத்த பதிவில் ஜே.கே.ரித்தீஷ் (ஜே.கே) - சூப்பர்ங்க. எங்கே இருந்துதான் தகவலைத் திரட்டுகிறீர்களோ?

ராமலக்ஷ்மி said...

//எதையும் எதிர் பாராமல் எதனிடமும் அன்பு செய். இதுதான் அவர் சொன்ன Fearless Love.//

நல்ல கருத்து.

Kalaiyarasan said...

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு ஜெ.கே., சில நினைவுக் குறிப்புகள். நன்றி.