Wednesday, October 21, 2009

வலைபாயுதே - 1 : ஹாரிபாட்டரை முந்திய விண்டோஸ் 7


விண்டோஸ் 7க்கான முன்பதிவு ஹாரிபாட்டருக்கான முன் பதிவையே முந்திவிட்டது, என்று அமேசான் ஆன்லைன் ஸ்டோர் அதிசயிக்கிறது.

”பிசி வேர்ல்டு” மக்களின் ஆர்வத்தைக் கண்டு,   லண்டன் நகரில் உள்ள ஒரு ஸ்டோரில் நள்ளிரவில் இருந்தே விண்டோஸ் 7 விற்பனை உண்டு என போர்டு மாட்டியிருக்கின்றது. இதே பாணியில் ஹாரிபாட்டருக்காக சென்னையில் கூட நள்ளிரவில் ஒரு புத்தகக் கடை திறந்திருந்தது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

”டச் ஸ்கிரீன்” மென்பொருள்களுக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்களையும் உள்ளடக்கியுள்ள விண்டோஸ் 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேஜிக் டச் என்று சொல்லலாம். விண்டோஸ் விஸ்டாவினால் சரிந்திருந்த மைக்ரோசாப்டின் இமேஜ் மற்றும் விற்பனையை விண்டோஸ் 7 உயர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் சந்தைக்கு வரப் போகிறது.

மக்களின் இந்த அதீத ஆர்வத்திற்கு காரணம், மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் உத்தி. அமெரிக்காவின் புகழ்பெற்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று Family Guy. அந்த நிகழ்ச்சியின் இயக்குனரைக் கொண்டு, அரை மணிநேரத்திற்கு, ஒரு ஸ்பெஷல் விண்டோஸ் 7 புரோகிராமை தயாரித்திருக்கின்றார்கள்.

செயின் ஸ்டோர்ஸ் - இதுதான் சரிந்து கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய உத்தி. மைக்ரோசாப்டும் அதையே பின்பற்றி விண்டோஸ் 7ஐ ஒரு வெற்றிகரமான ஆபரேட்டிங் சிஸ்டமாக மாற்ற முயற்சிக்கின்றது. இந்த வரியை நீங்கள் வாசிக்கும் வரை வெற்றிதான். மக்கள் வாங்கி பயன்படுத்திய பின்தான் உண்மை நிலவரம் தெரியும். அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

உலகில் 93% கம்ப்யுட்டர்களில் மைக்ரோசாப்ட்தான் உள்ளது. ஆனால் தற்போது நிறைய கெட்டப் பெயருடன் உள்ளது. விண்டோஸ் 7 நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று பிசி நிறுவனங்கள் எல்லாம் கையை பிசைந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் பொருளாதாரச் சரிவால் HP, DELL, Sony போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் விற்பனை குறைந்து டல்லடித்துக் கொண்டிருக்கின்றன. விண்டோஸ் 7 இதையெல்லாம் மாற்றும் என்று உலகமே காத்திருக்கின்றது.

விண்டோஸ் ஏழா? விண்டோஸ் பாழா? என்று நாளை தெரிந்துவிடும்.

5 comments:

டவுசர் பாண்டி said...
This comment has been removed by the author.
டவுசர் பாண்டி said...

உங்களுடைய ask selva என்ற blog தான் எனக்கு தெரியும் , நான் கூட அதில் சில சந்தேகம் கேட்டிருந்தேன், இந்த blog இப்போது தான் பார்க்கிறேன் , மகிழ்ச்சி உங்கள் " அவர் " திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்

ISR Selvakumar said...

வணக்கம் பாண்டி,
Ask Selva என்பது டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்.
இது செய்தி மற்றும் கட்டுரை.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

பிரேம்குமார் அசோகன் said...

எப்படியும் நம் மக்கள் பைரஸி தான் பயன்படுத்தப் போகின்றனர்... தொடுதிரை உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை விண்டோஸ் 7 பைரஸி பதிப்பில் பயன்படுத்த முடியாது என்று விண்டோஸ் சவால் விட்டுள்ளது.

எந்தளவுக்கு சாத்தியம் என்பதை,ரிச்சி தெருவில் பான்பராக் மென்றுகொண்டே பல லட்சங்களுக்கு பிசினஸ் செய்யும் சேட்வாலாக்களைக் கேட்டால் தெரிந்து விடும்.

சென்னையில் மட்டுமல்ல, கோவையிலும் நள்ளிரவில் ஹாரிபார்டர் புத்தகம் வாங்க கூட்டம் முண்டியடித்தது...

நல்ல பதிவு சார்!!

மங்களூர் சிவா said...

/
விண்டோஸ் ஏழா? விண்டோஸ் பாழா? என்று நாளை தெரிந்துவிடும்.
/

விண்டோஸ் ஏழா? விண்டோஸ் ஏழரையா? என்று நாளை தெரிந்துவிடும்.
:)))))))))))))